சாட்சிகளுக்கு அச்சுறுத்தல்- நல்லிணக்க ஆணைக்குழுவை நம்பமுடியாது

பாதுகாப்பு அச்சுறுத்தல், இரகசியத்தன்மை ஆகிய அடிப்படைக் காரணங்களைக் கருத்திற்கொண்டே கணிசமானளவு மக்கள் தங்களுக்கு நேர்ந்த அவலங்களை நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கூறவில்லை. அந்த ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த விதவைப் பெண்ணுக்கு சி.ஐ.டி. அழைப்பாணை விடுத்துள்ளதன் மூலம் இந்த விடயம் உலகுக்கு அம்பலமாகியுள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த கல்முனையைச் சேர்ந்த 45 வயதான விதவைப் பெண்ணான இரத்தினம் பூங்கோதை என்பவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த விடயம் சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு மீது சந்தேகத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. சாட்சிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நல்லிணக்க ஆணைக்குழு தவறிவிட்டதாகவும் சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
சாட்சிகளின் பாதுகாப்புக் குறித்து நாம் ஏற்கனவே பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளோம். இப்போது நாம் சுட்டிக்காட்டிய விடயங்கள் சரியாகவே நடந்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil