வேலைக்கு செல்லும் பெண்களின் உடல் உறுப்புக்களை திருடும் குவைத்!

Published on November 14, 2011-8:23 am · No Comments

குவைத் நாட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிக் கொண்டிருந்த போது மரணமடைந்த இலங்கை பெண்ணின் முக்கிய உடல் உறுப்புக்கள் திருடப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அனுராதபுரம் கலாவேவ பிரதேசத்தை சேர்ந்த 28வயதுடைய ஸ்ரீமாலி குமாரிக்கா என்ற இளம் பெண் கடந்த மாதம் 31ம் திகதி குவைத்தில் வீட்டு பணிப்பெண்ணாக பணியாற்றிக்கொண்டிருந்த போது திடீரென மரணமானார்.
இவருடைய சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனைகள் செய்யப்பட்ட போது அவருடைய உடலில் இதயம், சிறுநீரகம் ஆகிய அவயவங்கள் இல்லாது காணப்பட்டதாக நீர்கொழும்பு வைத்தியசாலையின் பணிப்பாளர் தயாபால தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil