இங்கிலாந்தில் பக்கிங்காம் அருகே ரூ.1000 கோடிக்கு அரண்மனையை வாங்கிய இந்திய தொழில் அதிபர் இந்துஜா

இங்கிலாந்தில் பங்கிங்காம் அரண்மனை அருகே இந்துஜா சகோதரர்கள் அரண்மனையை வாங்கி
பல கோடி ரூபாய் செலவில் புதுப்பித்து வருகின்றனர்.

இந்திய தொழில் அதிபர் இந்துஜா சகோதரர்கள், தங்களது வர்த்தக மற்றும்
சொத்துக்களின் பரப்பு எல்லை விஸ்தரித்துக் கொண்டே போகின்றனர். வெளிநாடுகளில்
முதலீடுகள் செய்வதுடன் சொத்துக்களையும் வாங்கி குவிக்கின்றனர்.
சமீபத்தில் இவர்கள் வெளிநாட்டில் வாங்கிய சொத்து அரண்மனையாகும். இங்கிலாந்தில்
பக்கிங்காம் அரண்மனை அருகே இந்த அரண்மனையை வாங்கியுள்ளனர். பக்கிங்காம் ராணிக்கு
சொந்தமான இந்த சொத்தை ரூ. ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர்.
இந்த அரண்மனைக்கு அருகே மிகப்பெரிய பணக்காரர்களும், ஆலிவுட் நட்சத்திரங்களும்
வகிக்கின்றனர். அரண்மனை சாலை என்று அழைக்கப்படும் அந்த பகுதியில் அமைந்துள்ள ஒரு
சிறிய அரண்மனையைதான் இந்துஜா சகோதரர்கள் வாங்கியுள்ளனர்.
அரண்மனையை பல பகுதிகளாக பிரித்து அறைகளும், கூட்டமன்றம், ஆலோசனை கூடம் என்று
அமைக்கப்பட்டு வருகிறது. இப்படி பாகம் பிரித்து புதுப்பிக்க மட்டும் சுமார் 600
கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.
இந்துஜா சகோதரர்களான ஸ்ரீசந்த், கோபிசந்த் (இவர்கள் இருவரும் லண்டனில்
வசிக்கின்றனர்), பிரகாஷ் மற்றும் அசோக் (இவர்கள் இருவரும் மும்பையில் உள்ளனர்).
ஆகிய நான்கு பேரின் வசதிக்காக அரண்மனை நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பகுதியிலும், நீச்சல்குளம், சினிமா ஹால், முற்றம் உள்ளிட்ட ஆடம்பர வசதிகள் செய்யப்படுகின்றன. இந்தியாவை சேர்ந்த கட்டிட கலைஞர்கள் இங்கிலாந்து கட்டிட கலை வல்லுனர்களுடன் இணைந்து அரண்மனையை நவீனமயமாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil