தந்தை செல்வாவின் துண்டிக்கப்பட்ட தலை ஒட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது!

Published on November 1, 2011-12:28 pm

தமிழரசுக்கட்சி ஸ்தாபகர் தந்தை செல்வாவின் தூபியில் துண்டிக்கப்பட்ட தலை ஒட்டப்பட்டு சிலை அதே இடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

நகரசபையின் தலைவர் க.செல்வாராசாவும் உபதலைவர் சே.ஸ்ரீஸ்கந்தராசாவும் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

பொலிஸ் மற்றும் இராணுவ உயரதிகாரிகளின் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்வில் இராணுவத்தின் 222 படையணியின் பிரிகேடியர், திருகோணமலை பிரதிப் பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் பங்குபற்றினர்.

படையினர் அப்பிரதேசத்தில் நிறைந்து காணப்பட்டனர். நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil