நான்கு மாதத்தி்ல் ஈரோடுக்கு 4வது கலெக்டர் நியமனம்

சென்னை: ஈரோடு மாவட்ட கலெக்டர் மீண்டும் மாற்றப்பட்டுள்ளார். புதிய கலெக்டராக வி.கே.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்ட கலெக்டராக இருந்தவர் சி.காமராஜூ. தற்போது அவருக்கு பதிலாக வணிக வரிகள் துறை இணை ஆணையாளராக இருந்த வி.கே.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை தலைமை செயலர் தேவேந்திரநாத் சாரங்கி வெளியிட்டார்.

அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ஈரோடுக்கு இதுவரை நான்கு கலெக்டர்கள் வந்து விட்டனர். முதலில் அங்கு சி.காமராஜ் கலெக்டராக இருந்தார். பின்னர் அவரை மாற்றி விட்டு அனந்தகுமார் நியமிக்கப்பட்டார். பின்னர் அவரும் மாற்றப்பட்டு மீண்டும் காமராஜே கலெக்டரானார். தற்போது காமராஜை மாற்றி விட்டு சண்முகம் கலெக்டராகியுள்ளார்.

காமராஜுக்குப் புதிய பொறுப்பு எதுவும் அறிவிக்கப்படவில்லை. அடிக்கடி தங்களது மாவட்ட கலெக்டர் மாற்றப்பட்டு வருவதால் ஈரோடு மக்கள் குழம்பிப் போயுள்ளனர்.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil