பேராசிரியர்களுக்கு புதிய சலுகை அறிவிப்பு

சென்னை: “புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் பேராசிரியர்களுக்கு, வகுப்பு எடுப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்” என, சென்னைப் பல்கலை துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: பி.எச்டி., பட்டதாரிகளை அதிகளவு உருவாக்கி, அவர்களின் ஆராய்ச்சி கட்டுரைகளை, உலகளவில் பல்வேறு இதழ்களில் வெளியிடுவது, பல்கலைக் கழகத்தின் முக்கிய நோக்கம்.

சென்னைப் பல்கலையில், ஆண்டுக்கு 600 ஆராய்ச்சி கட்டுரைகள், உலகளவில் பல்வேறு இதழ்களில் வெளியிடப்படுகின்றன. மேலை நாடுகளில், பல்கலைக் கழக ஆராய்ச்சி கட்டுரைகள், பல நோய் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப் பயன்படுகின்றன.

ஆராய்ச்சி கட்டுரைகளின் நோக்கம், வேலை வாய்ப்புக்காக மட்டுமல்லாமல், மக்களுக்கு பயனளிக்க கூடிய சேவைகளை வழங்குவதாக இருக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு, மக்களுக்கு பயன் தரக்கூடிய புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளை உருவாக்க முயலும் பேராசிரியர்களுக்கு, வகுப்புகள் எடுப்பதிலிருந்து முழுவிலக்கு அளிக்க, சென்னை பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது.

அவ்வாறு தயாரிக்கப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கு உடனே காப்புரிமையும் பெறப்படும். இவ்வாறு திருவாசகம் கூறினார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil