கர்நாடகாவில் இருந்து ஆந்திராவிற்கு லாரியில் கொண்டு சென்ற ரூ. 4. 95 கோடி பறிமுதல்

பெல்லாரி: ஆந்திர மாநிலம் குண்டக்கலில் போலீசார் நடத்திய சோதனையில் லாரியில் சிக்கிய 4. 95 கோடி ரூபாய் கொண்ட பண மூட்டைகள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் இருந்து ஆந்திராவிற்கு லாரியில் பணம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம் குண்டக்கல் நகரில் லாரி ஒன்றை சந்தேகத்தின் பேரில், போலீசார் பரிசோதித்தனர்.

அப்போது அந்த லாரியில் 3 மூட்டைகளில் கத்தை கத்தையாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை கணக்கிட்ட போது, 4. 95 கோடி ரூபாய் இருந்தது. விசாரணையில் அந்த பணம் கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநில தலைநகர் ஹைதராபாத்துக்கு கொண்டு செல்வது தெரிந்தது.

பணத்தை பறிமுதல் செய்த போலீசார் லாரியில் வந்த 2 பேரை கைது செய்தனர். இந்தப் பணம் கர்நாடக முன்னாள் அமைச்சரான ஜனார்தன ரெட்டி மற்றும் அவரது சகோதரர்களுக்குச் சொந்தமானது என்று கருதப்படுகிறது.

சமீபத்தில் சுரங்க ஊழல் விவகாரத்தில் ஜனார்தன ரெட்டி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil