நீதிபதிகளை கொலை செய்யும் திட்டம் முறியடிப்பு: ப.சிதம்பரம் தகவல்

அயோத்தி வழக்கில் தீர்ப்பு கூறிய 3 நீதிபதிகளைக் கொலை செய்யும் சிமி அமைப்பினரின் திட்டம் முறியடிக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் மத்தியப் பிரதேசத்தில் 10 பேர் கொண்ட சிமி குழுவின் திட்டம் முறியடிக்கப்பட்டது. அவர்கள் அயோத்தி வழக்கில் தீர்ப்பு கூறிய 3 நீதிபதிகளைக் கொல்ல திட்டமிட்டிருந்தனர் என சிதம்பரம் கூறினார்.

இந்தியாவில் இடதுசாரித் தீவிரவாதம் பெரும் வன்முறை இயக்கமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

புலனாய்வுத் துறையால் நடத்தப்படும் மாநில டிஜிபிக்கள் மாநாட்டில் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இடதுசாரித் தீவிரவாதத்தை கையாள பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது என்று சிதம்பரம் தெரிவித்தார்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள்தான் பயங்கரவாதத்தின் மையமாக உள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் 4 அல்லது 5 குழுக்களில் 3 குழுக்கள் இந்தியாவை தாக்கும் எண்ணத்துடனே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன என அவர் குறிப்பிட்டார்.

Source & Thanks : newindianews

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil