2014ம் ஆண்டில் பிரதமர் பதவிக்கு ராகுலுக்கும், மோடிக்கும் இடையே கடும் போட்டி: அமெரிக்கா தகவல்

2014ம் ஆண்டில் நடைபெறும் தேர்தலில் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதில் நரேந்திர மோடிக்கும், ராகுல் காந்திக்கும் இடையே கடும் போட்டி நடைபெறும் என அமெரிக்க பாராளுமன்ற ஆய்வுக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க பாரளுமன்ற ஆய்வுக்குழு வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில் குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடியின் நிர்வாகத்திறமையினையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில்துறையின் வளர்ச்சிக்கும் முதலீடுகளை ஈர்ப்பதிலும் சிறந்த அரசு நிர்வாகம் நடத்துகிறார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2014ல் பாரதீய ஜனதா மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தும் எனவும் 2014 தேர்தலில் பிரதமர் வேட்பாளர்களாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இடையே நேரடி போட்டி இருக்கும் என கூறப்பட்டு உள்ளது.

Source & Thanks : newindianews

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil