உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., தனித்து போட்டி : கருணாநிதி

சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க., தனித்து போட்டியிடும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை: தமிழக உள்ளாட்சித் தேர்தலில், அரசியல் அடிப்படையோ, கொள்கை அடிப்படையோ முன்வைக்காமல், பொதுமக்களுக்குத் தேவையான சுகாதாரம், கல்வி, சாலை, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட வசதிகளை பொதுப்பணி குறிக்கோளாகக் கொண்டு தி.மு.க., செயல்பட உள்ளது. இதுவே, எல்லாராலும் விரும்பப்படும், ஏற்கப்படும் நிலை என்பதையும் கருத்தில் கொண்டு, உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கூட்டணிகளை உருவாக்குவது தேவையில்லை என்றும் தி.மு.க., முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில், உள்ளாட்சித் தேர்தலில் எந்த ஒரு அணியையும் அமைக்காமல், தனித்து போட்டியிட தி.மு.க., முடிவெடுத்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil