சன் குழுமத்திற்கு தமிழக கேபிள்”டிவி’ ஆபரேட்டர் சங்கம் கண்டனம்

சென்னை:மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி, கேபிள் “டிவி’ ஆபரேட்டர்களை பலிகடா ஆக்க நினைக்கும், சன் குழுமத்திற்கு, தமிழக கேபிள் “டிவி’ ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மிழக கேபிள் “டிவி’ ஆபரேட்டர்கள் பொதுநல சங்கக் கூட்டம், மாநில தலைவர் சகிலன் தலைமையில், சென்னையில் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:அரசு கேபிள் “டிவி’க்கு ஆதரவு தெரிவிப்பதோடு, அரசு நிர்ணயித்த, 70 ரூபாயை, 100 ரூபாயாக உயர்த்த வேண்டும். கேபிள் “டிவி’ ஆபரேட்டர்கள் மற்றும் அரசு வருமானம் பெருக்க, டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து, இன்டர்நெட், வீடியோ ஆன் டிமான்ட் உள்ளிட்ட வசதிகளை வழங்க வேண்டும்.கேபிள் “டிவி’ ஆபரேட்டர்களின் உணர்ச்சிகளை, தங்களுடைய லாபத்திற்கு சாதகமாக மாற்றி, சன் “டிவி’ குழும தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை வாயிலாக, பொதுமக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி, கேபிள் “டிவி’ ஆபரேட்டர்களை, பலிகடா ஆக்க நினைக்கும் சன் குழுமத்திற்கு, நிர்வாக குழு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. அரசின் நல்ல நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், தாமாக முன்வந்து தன் சன் குழுமத்தின் சேனல்கள் வழங்க வேண்டும்.அரசு கேபிள் “டிவி’ நிறுவனம் சுயேச்சையாக செயல்பட, ஆளுங்கட்சி பிரமுகர்கள் தலையிடக் கூடாது என, முதல்வர் உத்தரவிட வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

source & Thanks : dinamalar

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil