தீவிரவாதிகள் தாக்கக் கூடும் என உளவுத் தகவல்- உஷார் நிலையில் மும்பை விமான நிலையம்

டெல்லி: தீவிரவாதிகள் வி்மானம் மூலம் வந்து தாக்கக் கூடும் என்று மத்திய உளவு அமைப்புகளிடமிருந்து வந்த எச்சரிக்கைத் தகவலைத் தொடர்ந்து மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்திற்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிரடிப்படையினர், என்எஸ்ஜி கமாண்டோப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

உளவுத் துறை எச்சரிக்கையைத் தொடர்நது விமான நிலையம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிரடிப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. விமான நிலையம் முழுக்க சோதனையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

3 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மும்பையில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையொட்டி ஏற்கனவே பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் நகர் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில் விமான நிலையத்திற்கு ஆபத்து என உளவுத் தகவல் வந்திருப்பதால் மும்பையில் பரபரப்பு நிலவுகிறது.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil