நில அபகரிப்பு என்ற பெயரில் பொய் வழக்குகள்- குடியரசுத் தலைவரிடம் இன்று திமுக மனு

டெல்லி: நில அபகரிப்பு என்ற பெயரில் திமுகவினர் மீது அதிமுக அரசு பொய் வழக்குகள் போட்டு வருவதாக கூறி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை நேரில் சந்தித்து திமுக எம்.பிக்கள் மனு அளிக்கவுள்ளனர்.

இன்று பிற்பகல் 12.45 மணிக்கு குடியரசுத் தலைவரை சந்திக்க திமுக குழுவுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில், டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட திமுகவைச் சேர்ந்த லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பிக்கள் கலந்து கொள்கின்றனர்.

குடியரசுத் தலைவரை சந்திக்கும் திமுக எம்.பிக்கள் குழு, திமுகவினர் மீது அதிமுக ஆட்சி வேண்டும் என்றே பொய் வழக்குகளைப் போட்டு வருகிறது. நில அபகரிப்பு என்ற பெயரில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்கிறது அதிமுக அரசு.

உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ள நிலையில் அதில் திமுகவினர் பணியாற்ற விடாமல் தடுப்பதற்காகவே இந்த வழக்குகளைப் போட்டு கைது செய்து வருகின்றனர்.

பல முன்னாள் அமைச்சர்களை அதிமுக அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

மேலும், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அதிமுகவினர் மேற்கொண்ட நில அபகரிப்பு விவகாரங்களை கிடப்பில் போட்டுள்ளது அதிமுக அரசு. இதில் தலையிட்டு திமுகவினருக்கு எதிரான பாரபட்ச நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளனர் திமுக எம்.பிக்கள்.

Source & Thanks : thatstail

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil