அணு ஆயுதம் சுமந்து எதிரி இலக்கை தாக்கும் வல்லமை கொண்ட அக்னி -2 இன்று பரிசோதனை

பாலசோர்: இந்தியாவின் உள்நாட்டிலேயே நமது விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட அக்னி 2 நவீன ஏவுகணை இன்று விண்ணில் செலுத்தி பரிசோதிக்கப்படுகிறது.

அணுஆயுதம் தாங்கி எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்ட இந்த ஏவுகணை இன்று 2 வது முறை சோதிக்கப்படுகிறது.

காரணம் கடந்த ஆண்டில் ( 2010 ) டிசம்பர் மாதம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது கடலில் விழுந்து தோல்வியில் முடிந்தது. இதற்கு முன்னரும் ஒரு முறை தோல்வியில் முடிந்தது 1999 ல் தயாரான அக்னி குறைகள் களைந்து மேலும் பல்முனை சக்தி அதிகரித்து மீண்டும் இந்த அக்னி- 2 உருவாக்கப்பட்டுள்ளது . இந்திய ‌தொழில்நுட்ப வல்லுநர்கள், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறை விஞ்ஞானிகள் அக்னி-2 வை வடிவமைத்துள்ளனர்.

இது ஏறக்குறைய 2 ஆயிரத்து 500 கி.மீ.,தொலைவில் உள்ள இலக்கு வரை தாக்கும். குறிப்பிட்ட இடத்தில் இருந்தோ அல்லது நினைத்த பகுதிக்கு கொண்டு சென்றோ எதிரிகளின் இலக்கை தாக்க முடியும். இன்றைய சோதனை ஒரிசா மாநிலம் பாலசோர் கடற்கரையில் உள்ள தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தி சோதனை நடத்தப்படும்.

17 மெட்ரிக் டன் எடை கொண்ட அக்னி 2- இரண்டு ஆயிரத்து 200 பவுண்ட் வெடி பொருளை எடுத்து செல்லும். இன்றைய சோதனைக்கு பின்னர் இது ராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்படும். இது பேரூதவியாக இருக்கும் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil