திருப்பதி தேவஸ்தான ஸ்ரீசேவா திட்டம் : கைப்பற்ற டி.சி.எஸ்., விப்ரோ போட்டி

ஐதராபாத் : திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீசேவா திட்டத்தைக் கைப்பற்ற, டி.சி.எஸ்., விப்ரோ உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் கடுமையாக போட்டியிடுகின்றன.

திருப்பதி கோவிலுக்கு தினசரி 50 ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர். திருவிழா காலங்களில் இந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கும். நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், திருப்பதி தேவஸ்தானத்தில், பக்தர்களின் வசதிக்காக, அவர்களுக்குத் தேவையானதை செய்து தரும் பணிகளை கம்ப்யூட்டர் மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக ஸ்ரீசேவா திட்டம் துவங்கப்பட்டுள்ளது. தற்போது, இ-சேவா, இ-அக்காமொடேஷன், இ-சுதர்சனம், இ-உண்டி ஆகிய நான்கு சேவைகள் ஆன்-லைன் மூலம் செய்யப்படுகின்றன. இதை விரிவுபடுத்தி, மொட்டை போடுவது, பக்தர்களுக்கு அறைகள் ஒதுக்கீடு செய்வது, லட்டு தருவது உள்ளிட்ட பணிகளையும், 48 துறைகளையும் கம்ப்யூட்டர் மயமாக்க திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

இந்த பணிகளை மேற்கொள்ளும் ஆர்டரைப் பெற, டி.சி.எஸ்., விப்ரோ மற்றும் இன்பினிட் ஆகிய நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. ரூ.35 கோடியில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், அனைத்து பணிகளும் முடிந்து, வரும் டிசம்பர் மாதம் முதல் செயல்படத் துவங்கும். இது தவிர, பராமரிப்புக்காக, ஆண்டுக்கு 12 கோடி ரூபாய் செலவிடப்படும்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil