கதர் துணியை அவமதித்த மத்திய அமைச்சர்

புதுடில்லி: கட்சியின் சார்பில் நடந்த விழாவில்ஒன்றில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் ஒருவர் தனக்கு பரிசாக வழங்கிய கதர் துணியை ஷூ துடைக்க உபயோகித்ததால் சர்ச்சை எழுந்தது.


ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அம்மாநில முதல்வர் அசோக்கெலாட், மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கலந்து கொண்டார். அவருக்கு காங்கிரஸ் பராம்பரிய முறைப்படி, காந்தியின் விருப்ப உடையான கைராட்டினம் கொண்டு ‌நெய்யப்பட்ட கதர்துணி அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது. துணியை வாங்கிய ஜெய்ராம் ரமேஷ் அதை மேடை மீது வைத்தார். சிறிது நேரத்திற்கு பின் அந் துணியை எடுத்து தான் அணிந்திருந்த ஷூவை துடைக்க ஆரம்பித்தார். இதனை முதலில் யாரும் கவனிக்கவில்லை. இந்த சம்பவம் முதல்வர் அசோக்கெலாட் முன்னிலையில் தான் நடந்தது. காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய உடையே கதர் ஆடை தான் மகாத்மா காந்தி விருப்ப உடையான கதர் துணியை ஒரு காங்கிரஸ் அமைச்சரே அவமதித்து உள்ளது காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி பல்வேறு கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil