நடு வானில் ஜெட் ஏர்வேஸ்-இன்னொரு விமானம் மோதல் தவிர்ப்பு

பாட்னா: டெல்லியிலிருந்து குவஹாத்தி சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானமும், இன்னொரு விமானமும் பாட்னாவின் மீது பறந்து கொண்டிருந்தபோது நேருக்கு நேர் மோத இருந்தன. கடைசி வினாடியில் இந்த பயங்கர விபத்து தவிர்க்கப்பட்டது.

நேற்று காலை 10.15 மணிக்கு 136 பயணிகளுடன் ஜெட் ஏர்வேஸ் விமானம் டெல்லியிலிருந்து கிளம்பியது. 11.35 மணியளவில் பிகார் தலைநகர் பாட்னா மீது பறந்து கொண்டிருந்தபோது, திடீரென அந்த விமானம் பல மீட்டர் தூரம் கீழே குதித்து, வலது புறமாகத் திரும்பியது.

இதையடுத்து பயணிகள் அலறினர். அப்போது மைக்கில் பேசிய பைலட், எதிரே மிக அருகே ஒரு போயிங்-747 சர்வதேச விமானம் வந்ததால், விமானத்தின் உயரத்தை உடனடியாக 1,000 அடி குறைக்குமாறு தரைக்கட்டுப்பாட்டு நிலையம் உத்தரவிட்டதாகவும், இதனால் தான் விமானம் குதித்ததாகவும் கூறினார்.

சில வினாடிகளில் விமானம் 1,000 அடி அளவுக்கு உயரத்தைக் குறைத்ததால், விமானம் தரையில் விழுவது போன்ற உணர்வை ஏற்படுத்தியதாக அதில் பயணித்தவர்கள் மிரட்சியுடன் கூறினர்.

Source & Thanks : thatatamil

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil