ஆண்களுக்குப் பெண்களோ, பெண்களுக்கு ஆண்களோ அடிமை இல்லை-விஜயகாந்த்

ஐந்து மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலின்போது பண ஆசை காட்டி வாக்காளர்களை கட்சிகள் ஈர்க்க முயற்சிக்கலாம் என்பதால் அது பற்றி கண்காணிப்புடன் இருந்து தடுக்கும்படி அமலாக்கப் பிரிவுகளுக்கு உத்தரவிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளது ஆணையம். தமிழகம், புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவைக்கான தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வாக்காளர்களை ஈர்க்க, முறையற்ற உத்திகளில் கட்சிகள் ஈடுபடக்கூடும் என்பது தெரிந்த ஓன்று. குறிப்பாக பணம், அன்பளிப்புகளை கொடுத்து வாக்காளர்களை ஈர்க்க கட்சிகள் முற்படும்.

இதற்காக வங்கிகளிலிருந்து பெருமளவு பணம் எடுக்கப்படக்கூடும். மேலும் வெளிநாடுகளிலிருந்தும் கட்சிகளுக்கு பணம் வரக்கூடும். சந்தேகம் தரக்கூடிய இத்தகைய பண பரிவர்த்தனைகள் குறித்து மிகுந்த விழிப்புடன் இருக்கும்படி 6 அமலாக்கப்பிரிவு அமைப்புகளுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

இது போன்ற பண பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கும்படி அரசியல் கட்சிகளுக்கும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் காலத்தில் பெருமளவு பணத்துடன் கட்சிக்காரர்கள் நடமாடுவது கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறை நியாயமாக அமையவேண்டும், பித்தலாட்டம் கூடாது.

வேட்பாளர்களின் தேர்தல் செலவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் கட்சி வேட்பாளர்களோ, நிர்வாகிகளோ, அதிக ரொக்கம் கொண்டு செல்வது சந்தேகத்தை ஏற்படுத்தும் என கட்சிகளுக்கு சனிக்கிழமை அனுப்பிய 2 பக்க கடிதத்தில் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

5 மாநிலங்களிலும் கட்சிகள், வேட்பாளர்களின் செலவை கண்காணிக்கும் நோக்கத்தில் வருமான வரித்துறை புலனாய்வு அமைப்புகளை களத்தில் இறக்கியுள்ளது தேர்தல் ஆணையம். தேர்தல் முடியும் வரை விழிப்பாக இருக்கும்படி வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் பணிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து சர்வதேச விமான நிலையங்கள் மூலமாகவோ, எல்லைக்கு அப்பாலிருந்தோ பணம், கள்ள நோட்டுகள் உள்ளிட்டவை கொண்டுவரப்படக்கூடும் என்கிற சந்தேகமும் உள்ளது.

எனவே விழிப்பு அவசியம் என்று தேர்தல் ஆணையம் உஷார்படுத்தியுள்ளது. சந்தேகத்துக்குரிய பணப்பட்டுவாடா குறித்து கண்காணிக்கும்படி நிதி புலனாய்வு பிரிவை தேர்தல் ஆணையம் பணித்துள்ளது. இதனிடையே, விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கும் தேர்தல் ஆணையம் தனியாக கடிதம் எழுதியுள்ளது.

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் விமான நிலைய புலனாய்வு அமைப்பினர், ஏற்கெனவே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவரும் வருமான வரித்துறையினருடன் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என ஆணையம் வலியுறுத்தியுள்ளது. நேபாளம், வங்கதேச எல்லைப்பகுதிகள் வழியாக ரொக்கம், மதுபாட்டில்கள் கொண்டுவரப்படுகிறதா என்பதை கண்காணித்து தடுக்கும்படி எல்லைப் பாதுகாப்புப்படை உள்ளிட்ட அமைப்புகளுக்கு தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த 5 மாநிலங்களிலும் இயங்கும் ஹெலிகாப்டர், விமானங்களையும் கண்காணிக்கவேண்டும். ஹெலிகாப்டர், தனியார் விமானங்களில் ஏறும் பயணிகளை தீவிரமாக சோதிக்கும்படியும் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது என அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

Source & Thanks : newindianews

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil