20.02.2011 அன்று ஒலிபரப்பாகிய குறுக்கெழுத்துப் போட்டி

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

4 விமர்சனங்கள் to “20.02.2011 அன்று ஒலிபரப்பாகிய குறுக்கெழுத்துப் போட்டி”

  1. தமிழ் ஒலி Says:

    அன்பு நேயர்களே ,
    வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- ஐந்தில் மேலிருந்து கீழ் இலக்கம் ஒன்றிலிருந்து இலக்கம் பத்தொன்பது வரையான விடைக்கு , ஒலிபரப்பான பாடலிலே , விடை நேரடியாக வரவில்லை.ஒத்த சொல்லாக வருகின்றது . இதை நிகழ்ச்சியிலே கூறத் தவறியதால் , உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மனம் வருந்துகின்றேன்.இந்த தகவலைப் பார்ப்பவர்கள் ஏனைய அன்புறவுகளுக்கும் தெரியப்படுத்தி விடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
    அன்புடன் ,
    – வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்.

  2. ஈழத்தமிழன் Says:

    உலக சமுதாயத்தைவிட நமக்காக உயிர் கொடுத்த நாய்கள் நமக்கு மேலானவை..

    விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளையின் மரணம் தற்போது வடக்கில் என்ன நடக்கிறது என்பதை யாதொரு குழப்பமும் இல்லாமல் சொல்லிவிட்டு போயிருக்கிறது.

    முற்காலங்களில் ஒரு பட்டி மன்றம் நடக்கும் இறந்தவர்களை எரிப்பது நல்லதா இல்லை புதைப்பது நல்லதா என்று.. சிறீலங்காவில் பிறந்திருந்தால் அவரை எரிப்பதே நல்லது என்று மாவீரர் புதைகுழிகள் தோண்டப்பட்ட பின்னர் அனைவரும் ஒப்புக்கொண்டனர். இப்போது பார்வதிப்பிள்ளையின் அஸ்தியை கிளறி எறிந்து, அதில் மூன்று சுடலை நாய்களையும் சுட்டு வீசியிருக்கிறார்கள் என்றால் எரிக்கவும் முடியாத அவலம் வந்துள்ளது என்பதே பதிலாகிறது.

    நமக்குக் கறுப்புக் கொடி பிடிக்க உரிமை உண்டு, இறந்துபோன ஒருவருக்காக கட்டவுட் வைக்க உரிமையுண்டு என்று சொன்னவர்கள் எல்லாம் வாய்மூடி வாழ வேண்டும் என்ற எச்சரிக்கை இந்த நிகழ்வின் மூலம் விடப்பட்டுள்ளது. தமிழன் வாய்திறந்தால் அவன் தெரு நாயைப்போல சுடப்படுவான், அதைக் கேட்க இன்று உலகில் நாதியில்லை என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று புதுமாத்தளனிலும், முள்ளிவாய்க்காலிலும் தமிழர்கள் நாய்கள் போலச் சுடப்பட்டபோது உலகம் சும்மாதானே இருந்தது, இனி மட்டும் என்ன வாழப்போகிறது என்ற மமதை இந்தச் செயலில் தெரிகிறது.

    அதோ எகிப்தில் மக்கள் மீது சுடுகிறார்கள் என்றும், இதோ லிபியாவில் 200 பேர் செத்துவிட்டார்கள் என்றும் ஓலமிடும் உலக மக்கள், ஐ.நா செயலர் யாவரும் ஈழத்தில் தமிழனுக்கு அவலம் நடந்தபோது உறைந்துதானே கிடந்தார்கள். ஓர் இலட்சம்பேர் வன்னியில் கொல்லப்பட்டபோதும் ஒன்றும் நடக்காதது போல செத்துக்கிடந்தது உலக சமுதாயம். உலகத்தில் உள்ள ஒரு நாயும் நமக்காக வராது என்ற உண்மை தெரிந்து ஈழத் தமிழனுக்காக நீதிகேட்க வந்தவை வல்வை ஊறணிச் சுடலையில் வாழ்ந்த மூன்று சுடலை நாய்களே. தமிழனுக்காக குரைத்த காரணத்தால் அவையும் சுடப்பட்டு பார்வதியம்மாவோடு எரிக்கப்பட்டுவிட்டன. நாயும் கேட்க நாதியில்லா இனம் என்ற நிலையில்தான் இன்றைய தமிழனின் அவல வாழ்வு இருக்கிறது என்ற உண்மையைப் பார்வதியம்மாவின் அஸ்த்தி ஐ.நா செயலர் பான் கி மூனுக்கு அழுத்தம் திருத்;தமாக சொல்லியுள்ளது.

    நாயிற்கடையாய் கிடந்த அடியேர்க்கு அருளும் தாயிற்சிறந்த தயாவான தத்துவனே என்ற சிவபுராணப் பாடல் பார்வதி அம்மா சுடலையில் கிடந்தபோது கேட்டது. இப்போதோ சிவன் உறையும் சுடலையில் நாய்களே வாழ முடியாத நிலை வந்துள்ளது. தாயிற்சிறந்த தயாவான தத்துவன் வந்திருந்தாலும் அவனுக்கும் இதுதான் கெதி..!

    புதுமாத்தளன் போருக்குப் பின்னர் தமிழன் வாழ்வு நாளுக்கு நாள் மோசமடைந்து செல்கிறது என்பதே உண்மையாகும். இலங்கைத் தீவில் வாழும் தமிழர் இதுவரை எதையும் பெற்றுவிடவில்லை, ஒரு பிடி சாம்பலைக்கூட…

    ஒரு பிடி சாம்பலுக்கே உரிமையில்லாத நிலைக்கு உலக சமுதாயத்தால் ஆளாக்கப்பட்ட ஈழத் தமிழன் இனி..

    நாம் பான் கி மூனிடமும், பக்கத்து நாட்டு பாராளும் மன்னர்களிடமும் போவதற்கும், பெறுவதற்கும் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை..

    பார்வதி அம்மாவிற்காக போராடி உயிர் கொடுத்த மூன்று நன்றியுள்ள நாய்களுக்கு மட்டும் சிரந்தாழ்த்தி மரியாதை செலுத்துகிறோம்.. உறங்கிக் கிடக்கும் உலக சமுதாயத்தைவிட நமக்காக உயிர் மூன்று கொடுத்த நாய்கள் நமக்கு மேலானவை..

    வல்வையில் இருந்து ஒரு மானத்தமிழன்.

  3. ஈழத்தமிழன் Says:

    ஊறணிச்சுடலை நாய்க்கு ஒரு பிடி சோறு போட்ட ஈழத்து பிச்சைக்காரன் தமிழக தலைவர்களுக்கு எழுதும் மடல்..
    வெள்ளிக்கிழமை, 25 பிப்ரவரி 2011 14:38

    பார்வதிப்பிள்ளை மரணத்திற்கு தமிழகத்தில் உள்ள பெரும் தலைவர்களான மு.கருணாநிதி, செல்வி. ஜெயலலிதா, கப்டன் பிரபாகரன் மன்னிக்க கப்டன் விஜயகாந்த் ஆகிய மூவரும் வாயே திறந்ததாக தெரியவில்லை.

    பட்டுக்கோட்டையில் தமிழீழமே தமிழருக்கு தீர்வென பிரகடனப்படுத்தியவன் நானே என்று நமது கலைஞர் அடிக்கடி மார்தட்டுவார்…

    இந்திய இராணுவத்தை அனுப்பி ஈழம் அமைக்கிறேன் என்று தேர்தலுக்காக வீரமுழக்கமிட்டார் நமது அன்னை பராசக்தி ஜெயலலிதா..

    ஈழத் தமிழனுக்காக கேப்டன் வந்துவிட்டார் என்று முழங்கினார்கள் அவருடைய கட்சித் தொண்டர்கள்.

    இந்த மூன்று பேரும் பார்வதி அம்மா மரணித்தபோது அவருக்கு மரியாதைக்காகவேனும் ஓர் அஞ்சலி செலுத்தவில்லை..

    இந்தத் தலைவர்களுடைய பணத்தில் வரும் தொலைக்காட்சிகளின் மட்டைகளை எடுத்து மகிழ்வோடு பார்ப்பவன் ஈழத் தமிழன். அந்த மானங்கெட்டவன் எடுக்கும் மட்டைகளுக்காவது ஒரு மரியாதை கொடுத்திருக்கலாம் இந்த பிழைப்புவாத ஊடகங்கள்.. அதுவும் இல்லை..

    ஏன்..?

    வரும் தேர்தலில் காங்கிரஸ் திமுக – கூட்டு இன்னமும் உறுதியாகவில்லை. இந்த நிலையில் பார்வதி அம்மாவுக்கு அஞ்சலி செலுத்தினால் காங்கிரஸ் தாய் சோனியாவின் பார்வையில் எதிரணியாகிவிடுவோம் என்ற பயத்தில் இந்த மூன்று தலைவர்களும் மௌனம் காத்திருக்கலாம்.

    காங்கிரசுடன் உறவென்றால் ஈழத் தமிழனை விற்க மூவரும் தயார்தான்.

    அட சும்மா கெட புள்ளே…!

    தேர்தல் வரும்போது ஈழத் தமிழா என்று முழங்கினால் போதும் அவன் காதில் பூ சுற்றிவிடலாம் என்று கருதுகிறார்கள். ஈழம் என்றுவிட்டால் எல்லாவற்றையும் மறந்து, கோமாளிகள் தாயே தெய்வமே என்று ஜெயலலிதாவுக்கு கவிபாட காத்துக் கிடப்பது அவர்களுக்கு தெரியும்

    அசினை படத்தில் கதாநாயகியாக போட்ட காவலன் படம் ஓடி முடிக்கும்வரை புலிப்பால் குடிக்காத நமது இளைய தளபதி விஜய் நேற்று நாகபட்டணத்தில் புலிப்பால் குடித்திருக்கிறார். அந்தப் பாலில் ஒரு மிடறை அசினுக்கு பருக்கியிருந்தால் காவலன் கதறிக் கொண்டு ஓடியிருக்குமே…

    திருமாவளவனை சிங்கள நாட்டின் விமான நிலையம் திருப்பி அனுப்பியதற்கு பதிலடியாக டக்ளசை கைது செய்ய வேண்டும் என்றுள்ளார் டாக்டர் ஐயா.. டக்களஸ் மீது சுமத்தப்பட்டது கொலைக் குற்றம், திருமாவளவன் செய்த குற்றம் என்ன ? சூளை மேட்டில் செத்தவனைப் பற்றி யாருக்கு என்ன கவலை..

    சென்னை விமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்படும் ஈழத் தமிழருக்காக குரல் கொடுங்கள் என்று திருமாவளவனிடம் கேட்டவர் பலர். அவர் கலைஞருக்கு பயந்து அடக்கி வாசித்தார். இன்று கொழும்பு விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டவுடன் அடக்க முடியாத கோபம் அவருக்கு வந்துள்ளது. ஐயா.. பண்டாரநாயக்கா விமான நிலையமும் சிங்கார சென்னை விமான நிலையமும் மானமுள்ள ஈழத் தமிழனுக்கு ஒன்றுதான். மானமுள்ள ஈழத் தமிழனாக இந்த இரண்டு விமான நிலையங்களுக்குள்ளும் போய்ப்பாருங்கள்.

    அன்று..

    1984ம் ஆண்டு வல்வையில் இராணுவம் சுட்டு ஒரு வயோதிபர் தெருவில் குற்றுயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவர் உயிர் பிரியும் தறுவாயில் எங்கள் உடன் பிறப்பு தலைவர். மு. கருணாநிதி வருவார் என்று கூறிவிட்டு நம்பிக்கையோடு இறந்தார். அந்த ஆத்மா உங்களை எல்லாம் கண்ணீருடன் பார்க்கிறதையா.. !

    இதையெல்லாம் பார்க்கும்போது நமக்கு ஒரு புதிய சந்தேகம் வருகிறது..

    பார்வதி அம்மாவுடன் செத்துக்கிடக்கும் நாய்களும் எங்கே உங்களுடைய வீர முழக்கங்களை கேட்டுத்தான் தவறுதலாகக் குரைத்துவிட்டனவோ என்பதுதான் அந்த அச்சம் ஐயா…

    ஈழத்து பிச்சைக்காரன்

    நன்றி ஈழத்து பிச்சைக்காரன் அவர்களே . அனால் எனக்கு ஒரு நெருடல் ::அன்னை பராசக்தி ஜெயலலிதா..என்று சொல்லி . தெய்வ த்தய் கேவலப் படுத்தி விட்டீர்கள்::::

  4. ஈழத்தமிழன் Says:

    இதுவரை லிபியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட 2000-க்கும் மேற்பட்டவர்கள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    ———————————————————————————————————
    லிபியாவில் போராட்டக்காரர்களிடம் 3-வது நகரம் வீழ்ந்தது: கடாபிக்கு அமெரிக்கா எச்சரிக்கை
    லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. போராட்டக்காரர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ராணுவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தும் ராணுவத்தின் ஒரு பிரிவினர் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் பென்காசி உள்ளிட்ட 2 நகரங்கள் போராட்டக்காரர்கள் பிடித்தனர்.

    அதன் புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது, “மிசுரதா” என்ற 3-வது நகரத்தையும் போராட்டக்காரர்கள் பிடித்துள்ளனர். இது தலைநகர் திரிபோலியில் இருந்து சுமார் 200 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த நகரத்தை விட்டு அதிபர் கடாபியின் ஆதரவு படைகள் ஓடிவிட்டன. இந்த நகரின் சிறு பகுதி மட்டுமே ஆதரவு ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது.

    இதையொட்டியுள்ள பாப் ஆல்- அஷிஷியா நகரமும் போராட்டக்காரர்கள் வசம் செல்லும் நிலை உள்ளது. எனவே, அதை காப்பாற்றிக் கொள்ள கடாபி தனது டாங்கி படைகளை அரண்போல் நிறுத்தி வைத்துள்ளார். இதுவரை லிபியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட 2000-க்கும் மேற்பட்டவர்கள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    வன்முறையை முடிவுக்கு கொண்டு வருமாறு அதிபர் கடாபியை 15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா.சபையின் பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தி உள்ளது. மேலும், கடாபி அரசுக்கு ஆயுதத்தடை விதித்தும், கடாபியின் சொத்துக்களை முடக்கியும், அவர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதை தடை செய்யும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    போராட்டத்தின்போது கடாபி அரசால் நடத்தப்பட்ட அத்துமீறல்கள் மற்றும் குற்றங்கள் குறித்து சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் விசாரிக்கவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அதிபர் கடாபி லிபியாவை விட்டு விரைவில் வெளியேற வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ஐ.நா.சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் இன்று நடந்தது. இதில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, அதிபர் கடாபியின் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். எனவே, அவர் மேலும் ரத்தம் சித்தாமல், வன்முறையை கைவிட்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.

    தொடர்ந்து போராட்டம் நடைபெறுவதை தொடர்ந்து சுமார் 10 ஆயிரம் பேர் லிபியாவில் இருந்து துனிசியாவுக்கு சென்றுவிட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் எகிப்தை சேர்ந்தவர்கள். இந்த தகவலை அந்நாட்டு பத்திரிகை தெரிவித்துள்ளது.
    ———————————————————————–
    இதுவரை லிபியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட 2000-க்கும் மேற்பட்டவர்கள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    என்ன வேடிக்கை உலகமடா இது …தமிழ் ஈழத்தில் ஐம்பது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எரி குண்டுகளாலும் கிபீர் குண்டுகளாலும் ..மகிந்தா கொன்று குவித்து கொண்டிருக்கும்போது ..புலம்பெயர் தமிழர் நாங்கள் உலகநாடுகளிடம் கெஞ்சிக் கேட்டோம் ..தமிழர்களை கொல்லுவதை நிறுத்துங்கள் என்று .அப்போ உங்கள் காதுகள்
    செவிடாய் போய்விட்டதா ? இல்லை இல்லை .தமிழனிடம் கொள்ளை அடிக்க ஒன்றுமே இல்லை . அதனால் தான் எமது போராட்டத்துக்கு பயங்கர வாத முத்திரை குத்தி.. உலக நாடுகள் ஒன்றாக சேர்ந்து அளித்து விட்டீர்கள் ..இப்போ 2000-க்கும் மேற்பட்டவர்கள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர் என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறீர்களா ?கடாபி இவ்வளவு காலமும் சர்வாதிகார ஆட்சி தானே செய்து கொண்டிருந்தார் . இவ்வளவு காலமும் உறங்கி விடீர்களா?

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil