‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ்ஒலிக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்!

பாலைவன வாழ்வை ஓர் சோலை வனமாக்கியவள்
பைந்தமிழைப் பொழிந்து காதில் தேனை ஊற்றியவள்
தேசமெங்கும் தமிழ் வாசம் பரப்புவள்.
தீந்தமிழைத் தித்திப்பாய் தினம் எமக்கு ஊட்டுபவள் .
TRT தமிழ் ஒலியே!தினம் சொல்வேன் வாழ்த்துக்கள் .

பூந்தென்றல் வீசி தமிழ்ஒலிக்கு சுவாசம் கொடுக்கும்
ஏ.எஸ் ராஜா அண்ணாவுக்கு சிரம் தாழ்த்தி நன்றி சொல்வேன் !
ஆணிவேராய் நின்று தங்கக்குரல் உருக்கி உனைச் செழிக்கவைக்கும்
ஆர்.தர்சன் அவர்களுக்கு தலைசாய்த்து நன்றி சொல்வேன் .
கொழுகொம்பாய்த் தானிருந்து கிளைகள் பரப்பிட உரமாய் நிற்கும் எங்கள் மோகன் அவர்களுக்கு முகம் மலர நன்றி சொல்வேன்.

புன்னகையால் சிலபொழுது உனை அலங்கரித்து அழகுபார்த்து
அறிவுப்பசிக்கும் உணவூட்டும் திரு.

ஜெகன் அவர்களுக்கு கரம்
கூப்பி நன்றி சொல்வேன்! அறிவுக் களஞ்சியமாய்
அமைதி நிறை அன்பு அறிவிப்பாளராய் நாடகக் கலைஞ்ராய்
பாடாத மனங்களையும் பாடவைக்கும் ஆற்றல் மிகுந்தவராய் ஒலியோடு தொடர்ந்தபடி இன்றுவரை உன்னோடு கைகோர்த்திருக்கும் திரு பிலிப்தேவா!
அவர்களுக்கு இங்கிதமான வாழ்த்துக்கள்.
ஈரக்குரலோடு வரும் திரு ஈழத்து ராஜா! விவாதத்தில் வல்ல
திரு ரவி! விடயங்கள் நல் விளக்கங்கள் தரும் திரு விநாயகம்!
இதமாய்த்தமிழ் உரைத்து உன் உயர்வில் மகிழ்வு காணும்
உள்ளங்கள் இவர்களுக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!
பேரறிவாளனைப் பெற்ற பெருமைமிகு தந்தை
பாரில் தமிழ் பரப்பப் பணியாற்றும் திரு .தமில்வேல்அவர்களுக்கு !
எந்தன் தமிழ் வணக்கமும் வாழ்த்துக்களும்!
இணையத்தளத்தில் தமிழைத் தரவிறக்கம் செய்து
இகத்தில் தமிழ் பரப்ப உதவும் திரு.விமல் அவர்களுக்கு !
இதயம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்!
தப்பின்றி அழகாய்த் தமிழ் பேசும் ரதினி.கோபாலசிங்கம்!
செப்பிடும் தமிழாலே நிஜமாய் நீ வளர்வாய் தமிழ் ஒலியே!
ரதினிக்கு எங்கள் ரம்மியமான வாழ்த்துக்கள்!
மழலையர் மங்கையர் மனம்கவர்ந்த பவானி அன்டி
வெள்ளியில் மலர் தொடுத்து உன்னை அழகு பார்ப்பார்.
நல்விருந்து படைக்கும் பவானி அன்டிக்கு
என் பணிவான வந்தனங்கள்!
உன்னைச் சோபிக்க வைக்க இன்னும் முயன்று கொண்டிருக்கும்
சோபிதாவின் விடாமுயற்சிக்கும் எந்தன் வாழ்த்துக்கள்!
நிகிலமோகனதாசனுடன் உமாபாரதி வசந்தா சந்திரன்
இவர்களின் பணிக்கும் பணிவான வணக்கங்கள்!

ஐக்கியராச்சிய சேதிகளைத் தொகுத்தளிக்கும் திரு .வேலாயுதம்!
அவர்களுக்கு நன்றியுடன் நல்வாழ்த்துகள்!
திருமதி சுஜாதா! தப்பின்றித் தமிழைச் செப்பிட
முயலவேண்டும் என்னும் பணிவான விண்ணப்பத்துடன்
வினயமாய் எந்தன் வந்தனமும் வாழ்த்துக்களும்! தமிழ் ஒலியே! அகவை உனக்கு எழிரண்டா?இல்லையில்லை.
ஆயிரம் ஜென்மத்து உறவு நீயம்மா!
இதழ் பிரித்து இனிமைத்தமிழ் உதிர்த்து எங்கள்
இதயமெங்கும் நறுமணமாய்க் கலந்தவள் நீ!
இச்சகத்தில் என்றும் இனிமைத்தமிழ் பரப்பும் உனக்கு
இருகரம் கூப்பி நன்றி சொல்லி
நல்வாழ்த்துக்கள் நான் சொல்வேன்!
அன்புடன்
பாரதி. ஜேர்மனி .

3 விமர்சனங்கள் to “‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ்ஒலிக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்!”

 1. Anton Says:

  TRT தமிழ் ஒலிக்கு எமது குடும்பம் சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!!!
  பல்லாண்டு பல்லாண்டு வாழியவே
  அன்ரன் குடும்பம்
  டோர்த்முந்து ஜெர்மனி

 2. k.vasanthananthan Says:

  ஹாப்பி பிரத் டே அண்ட் ஹாப்பி பொங்கல் வாழ்த்துக்கள்

 3. என்.கணேஷ் Says:

  15 .01 .2011 . trt தமிழ் ஒலி அறிவிப்பாளர்கள் ராஜா ..தர்சன் ..மோகன் ..
  பிலிப்தேவா ..ஜெகன் ..ஈழத்து ராஜா ..ரவி ..விநாயகம் ..
  ரதனி கோபாலசிங்கம் ..பவானி …சோபிதா…மற்றும்
  நிகிலா மோகனதாஸ் …உமாபாரதி .. வசந்தா சந்திரன் ..
  இணையத்தளத்தில் தமிழைத் தரவிறக்கம் செய்து
  இகத்தில் தமிழ் பரப்ப உதவும் திரு.விமல் …… தமிழ்வேல்…. ஐக்கியராச்சிய சேதிகளைத் தொகுத்தளிக்கும் திரு .வேலாயுதம்……ஜேர்மன் சேதிகளைத் தொகுத்தளிக்கும் சுஜாதா! விளம்பரம் தந்து உதவும் வர்த்தகர்களுக்கும் …அன்பு நேயர்களுக்கும் ..இனிய பொங்கல் வாழ்த்துக்கள்…
  என்.கணேஷ் germany .gummersbach …

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil