டிவி நிருபரின் அநாகரீகம் மன்னிப்பு கேட்டார் நியூசிலாந்து தூதர்

புதுடெல்லி:முதல்வர் ஷீலா தீட்சித் பெயரை வேண்டுமென்றே கொச்சைப்படுத்தி உச்சரித்து விஷமத்தனம் செய்த நியூசிலாந்து டிவி நிருபரின் செயலுக்கு அந்நாட்டு தூதர் ருபர்ட் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

காமன்வெல்த் போட்டியை பல்வேறு நாட்டு டிவிகள் ஒளிபரப்பிவருகின்றன. நியூசிலாந்தை சேர்ந்த டிவி ஒன்றில் பால் ஹென்ரி என்பவர் இதை தொகுத்து வருகிறார். இவர் ஏற்கனவே நிறவெறி கொண்டவர் என்று கூறப்படுகிறது. நியூசிலாந்து மாகாணம் ஒன்றின் ஆளுநரான இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆனந்த் சத்யானந்த் என்பவரை நிறவெறியுடன் விமர்சித்ததாக இவர் மீது குற்றச்சாட்டு உண்டு.

இந்நிலையில், பால் ஹென்ரி மீண்டும் தன்னுடைய விஷமத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார். முதல்வர் ஷீலா தீட்ஷித்தின் பெயரை வேண்டுமென்றே கொச்சைப்படுத்தி உச்சரித்துள்ளார். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரை நியூசிலாந்து நாட்டு டிவி சஸ்பெண்ட் செய்தது.

இதற்கிடையே, இப்பிரச்னை பெரிதானதை தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, டெல்லியில் உள்ள நியூசிலாந்து தூதர் ருபர்ட் ஹோல்போரோவை வரவழைத்து விளக்கம் கேட்டார். இதைத்தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு நேற்று ருபர்ட் வந்தார். முதல்வர் பெயரை டிவி நிருபர் தவறாக உச்சரித்ததற்கு தமது அரசின் சார்பில் மன்னிப்பு கேட்டு கொள்வதாக அவர் தெரிவித்தார். மேலும், இதுதொடர்பாக முதல்வர் ஷீலா தீட்சித்திடமும் மன்னிப்பை கேட்டு கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source & Thanks : dinakaran.

4 விமர்சனங்கள் to “டிவி நிருபரின் அநாகரீகம் மன்னிப்பு கேட்டார் நியூசிலாந்து தூதர்”

 1. raaamu Says:

  இதனை விட பெரும் அயோக்கிய செயல்களை ஈழத்தமிழ்மக்களு
  க்கு இந்தியா விளைத்திருக்கின்றது அதற்கு இந்தியா இதுவரை
  யாரிடமும் மன்னிப்பு கேட்கவில்லையே,தனக்கு தலைவலி என்றால் தடவிப்பார்க்க வேண்டும் என்கிறது.

 2. jeevan Says:

  http://www.eegarai.net/-f8/-t27079.htm

 3. என் .கணேஷ் Says:

  (2ம் இணைப்பு)

  போர்க்குற்ற சாட்சியங்களை வழங்க பிரித்தானிய தமிழர் பேரவை உதவி
  [ ஞாயிற்றுக்கிழமை, 24 ஒக்ரோபர் 2010, 06:09.48 AM GMT +05:30 ]
  தமிழ் மக்கள் மீது சிறீலங்கா படையினர் மேற்கொண்ட போர்க் குற்றங்கள், மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, தமிழ் மக்கள் சாட்சியம் அளிப்பதற்கு அடிப்படை உதவிகளைச் செய்வதற்கு பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
  போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் செயலர் நாயகம் பான் கி-மூனால் ஆலோசனை வழங்க அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு எதிர்வரும் டிசம்பர் 15ஆம் நாளுக்கு முன்னர் தமிழ் மக்களிடம் சாட்சியங்களைக் கோரி நிற்கின்றது.

  இவ்வாறான பின்புலத்தில் பிரித்தானியாவில் உள்ள தமிழ் மக்கள் தமது சாட்சியங்களை அனுப்புவதற்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை பிரித்தானிய தமிழர் பேரவை மேற்கொண்டு வருகின்றது.

  இது பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ள தமிழர் பேரவை, போர்க் குற்றம் புரிந்த சிறீலங்கா அரசு மீது அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் வகையில் மக்கள் தமது சாட்சியங்களை வழங்க முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.

  சாட்சியம் வழங்குவோரின் விபரங்கள் மிக இரகசியமாகப் பேணப்படும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது போன்று சாட்சியம் அளிக்க தம்மிடம் உதவி கோரிவோர் பற்றிய விபரங்களும் இரகசியமாக பேணப்படும் என பிரித்தானிய தமிழர் பேரவை அறிவித்துள்ளது.

  பிரித்தானியாவிலுள்ள தமிழ் அமைப்புகளையும் இணைத்து இந்தச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், அங்குள்ள தமிழ் அமைப்புக்களும், தமிழ் மக்களும் தம்முடன் தொடர்புகொள்ளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

  02088080465 – 07814484793 – btfmediateam@googlegroups.com btf@sriranjan.com

  போர்க்குற்ற ஆதாரங்களை,முறைப்பாடுகளாக ஈமெயில் மூலமாக அனுப்பி வைக்கலாம்: ஐ.நா. நிபுணர் குழு

  ………………………………………………………………………………………………
  நாமும் எமக்கு கிடைக்கும் அதாரங்களை பதிவு செய்வோமா ?
  ——————————————————————————–

 4. ஈழத் தமிழன் Says:

  செஞ்.ச.அதிகாரி அழுதபோது எடுத்த புகைப்படத்தால் சர்ச்சை
  27 October, 2010 by admin
  வடக்கில் போரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்கென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சிறிய உழவு இயந்திரங்கள் சிங்களக் குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டமை தெரிந்ததே. 104 உழவு இயந்திரங்களில் 50 ஐ தமது இஷ்டத்துக்குப் பறித்தெடுத்த அரசாங்க உயர் அதிகாரிகள் அவற்றைச் சிங்களக் குடும்பங்களிடம் கையளித்திருந்தன. இவை அரசாங்க அரசியல்வாதிகளுக்கு ஆதரவான சிங்களக் குடும்பங்களுக்கே வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறி, அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் நாமல் ராஜபக்ஷ உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

  போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பெயரைக் கொண்டு தாம் தயாரித்த பயனாளிகள் பட்டியலை விடுத்து அரசாங்க அதிகாரிகள் தமது இஷ்டத்துக்கு உழவு இயந்திரங்களைத் தாரை வார்த்ததைக் கண்ட சர்வதேச செஞ்சிலுவைச் சங்க தலைமை அதிகாரி அவ்விடத்திலேயே கதறி அழுதார். இதைப் படம்பிடித்த ஊடகவியலாளர்கல் அப்புகைப்படத்தை வெளியிட்டுள்ளமை அரசுக்குச் சங்கடமாகியுள்ளது.

  எனவே இதனால் பெரிதும் குழம்பிப் போயுள்ள வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, மேற்படி சம்பவம் குறித்து விசாரணை செய்யவேண்டும் என்றும் இலங்கை புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளாராம். மேலும், மேற்படி புகைப்படத்தை எடுத்தது யார், அதை மற்ற ஊடகங்களுக்கும் பரவ விட்டது யார் என்றெல்லாம் விசாரணை நடத்தவேண்டும் என சந்திரசிறி கேட்டுள்ளாராம்.

  இதற்கிடையில், மேற்படி உழவு இயந்திரங்கள் வழங்குவதில் ஏற்பட்ட சர்ச்சை குறித்த அறிக்கையை செஞ்சிலுவைச் சங்க அதிகாரி தமது கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளார்.
  ………………………………………………………………………………………………………………..
  வடக்கில் போரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கொடுத்த …

  உழவு இயந்திரங்களை..கொள்ளை அடித்து .. ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறி, அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் நாமல் ராஜபக்ஷ ….
  போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பெயரைக் கொண்டு தாம் தயாரித்த பயனாளிகள் பட்டியலை விடுத்து அரசாங்க அதிகாரிகள் தமது இஷ்டத்துக்கு உழவு இயந்திரங்களைத் தாரை வார்த்துக் .கொடுத்திருக்கிறார்கள் .
  இதனை கண்ட .சர்வதேச செஞ்சிலுவைச் சங்க தலைமை அதிகாரி அவ்விடத்திலேயே கதறி அழுதார்….
  இந்த சிங்களவனா …எமக்கு உரிமை தருவான்?
  உண்மை சொன்ன …புகைப்படத்தை எடுத்த..ஊடகவியலாளர் களை அல்லவா..தேடுகிறான் . தண்டனை ..கொடுக்க .. இதன் பிறவாவது நாம் ஒன்று படுவோமா? இழந்த எமது தமிழ் ஈழத்தை மீட்க ????????எமக்காக.செஞ்சிலுவைச் சங்க தலைமை..அதிகாரி. கதறி அழுதார் … நாம் ஏன் மௌனம் காக்கிறோம் ? ஈழத் தமிழன்

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil