அளம்பிலில் சிறிலங்கா படையினரின் முன்நகர்வு முறியடிப்பு:< - படையப்பொருட்கள் மீட்பு

 
 

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அளம்பில் ஊடாக சிறிலங்கா படை மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளதுடன் படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

அளம்பில் பகுதி ஊடாக நேற்று முன்நாள் (23.12.08) செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்கா படையினர் முன்நகர்வினை மேற்கொண்டனர்.

இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதல் நடத்தி படையினரின் முன்நகர்வினை முறியடித்தனர்.

இதில் படையினருக்கு பலத்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து படையப் பொருட்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர்.

ஆர்.பி.ஜி – 01
ஆர்.பி.ஜி எறிகணை – 01
புறப்ளர் – 01
நடுத்தர ரவைகள் 1,128
தலைக்கவசம்

ஆகியன உட்பட படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil