உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நளினி அப்பீல்

முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி,
நளினியை விடுதலை செய்ய முடியாது என்று சிறை ஆலோசனை கமிட்டி தெரிவித்த பரிந்துரைகளையும், அதை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளதையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என்றார்.

நளினி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், கருணை மனுவை விசாரித்து முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது என்றாலும், வழக்கு தாரரின் நிலையை பொறுத்து சில விதிமுறைகளை வகுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிடவும் சட்டத்தில் இடம் உள்ளது என்று தெரிவித்தார்.

Source & Thanks : webdunia.com

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil