பென்னாகரத்தில் வெற்றி: முதல்வர் கருணாநிதி நன்றி

சென்னை : ‘பென்னாகரம் இடைத் தேர்தலில் மக்கள் அளித் துள்ள மாபெரும் வெற்றி, தி.மு.க., அரசின் பயணத் திற்கு மேலும் ஒரு தூண்டுகோலாக அமையும்’ என, முதல்வர் கருணாநிதி நம் பிக்கை தெரிவித்துள்ளார்.

முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:பென்னாகரம் சட்டசபை தொகுதி இடைத் தேர்தல் குறித்து, கடந்த 26ம் தேதி நான் விடுத்த அறிக்கையின் இறுதியில், தேர்தல் களப்பணியாற்றும் கட்சியினரும், கூட்டணிக் கட்சிகளின் நண்பர்களும், தொண்டர்களும் என்ன தான் வன்முறைகளை மாற்றார் கட்டவிழ்த்து விட்டாலும் அவைகளைப் பொருட்படுத்த வேண் டாம் எனக் கேட்டுக் கொண்டேன்.பதிலுக்குப் பதில் என்ற நிலை உருவாகாத அளவுக்கு பண்போடும், அன்போடும், அமைதி காக்கும் மனத் தெம் போடும் வெற்றி ஒன்றில் மட்டுமே நாட்டம் கொண்டு, அராஜக ஆட்டம் போட திட்டம் தீட்டி செயல்படக்கூடிய தீய சக்திகளுக்கு, தீவிரவாத சக்திகளுக்கும் சற்றேனும் இடம் தராமல், ஜனநாயகத்தை அலுங்காமல், குலுங்காமல் காக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.

என் வேண்டுகோளை மதித்து நம்மை நோக்கி வீசப்பட்ட வார்த்தைகளைப் புறந்தள்ளி, மாபெரும் வெற்றியைக் குவித்துள்ள கட்சியினர், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள், தி.மு.க., அரசின் சாதனைகளைப் போற்றி ஓட்டளித்த வாக் காளர்கள் அனைவருக்கும் எனது நன்றி.இந்த இடைத்தேர்தலில் மக்கள் அளித்துள்ள மாபெரும் வெற்றி, தி.மு.க., அரசின் பயணத் திற்கு மேலும் ஒரு தூண்டுகோலாக அமையுமென்ற நம்பிக்கையைத் தெரிவித்து, அறிக்கையில் இறுதியாகத் தெரிவித்ததைப் போல போற்றுவோர் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் தொடர்ந்து ஆற்றுவோம் நம் பணியை என்பதை மீண்டும் மீண்டும் தெரிவித்து வெற்றிக்கு பாடுபட்ட அத்தனை பேருக்கும், ஓட்டளித்த மக்களுக்கும் மேலும் ஒரு முறை நன்றி.இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தி.மு.க.,வினர் உற்சாகம்: பென்னாகரம் இடைத் தேர்தல் வெற்றியை முதல்வர் இல்லம், துணை முதல்வர் இல்லம், அறிவாலயம் ஆகிய மூன்று இடங்களில் தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி உற்சாகமாக நேற்று கொண்டாடினர்.பென்னாகரம் இடைத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு துவங்கியது.முதல் சுற்று, இரண் டாவது சுற்றில் தி.மு.க., முன்னணியில் உள்ளது என்ற தகவல் தெரியவந்ததும் தி.மு.க.,வினர், கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் கருணாநிதியின் இல்லம் முன், திரளாக கூடினர்.பத்தாயிரம் வாலா பட்டாசுகளை கொளுத் தினர். கட்சி பிரமுகர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச் சர்கள், கட்சியின் முன்னணி பிரமுகர்கள், முதல்வர் கருணாநிதியை சந்தித்து சால்வை அணிவித்து, தங் களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.ஆழ்வார்பேட்டையில் உள்ள துணை முதல்வர் ஸ்டாலின் இல்லத்தின் முன், கட்சியினர் திரளாக கூடி நின்று பட்டாசுகளை கொளுத்தி, இனிப்பு வழங் கினர்.தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்திற்கு முதல்வர் கருணாநிதி 10.40 மணிக்கு வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த கட்சித் தொண் டர்கள், பட்டாசுகளை கொளுத்தினர்.’முதல்வர் கருணாநிதி வாழ்க’ என்ற கோஷத்தை எழுப்பினர். கட்சிப் பிரமுகர்கள் ஏராளமானோர் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துக் களை தெரிவித்துக் கொண் டனர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil