போர் குற்றச் செயல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசேட நிபுணர்கள் குழு விசாரணை நடத்தாது : பான் கீ மூன்

போர் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசேட நிபுணர்கள் குழு விசாரணைகளை நடத்தாதென ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை அரசாங்கத்திற்கும், அணி சேரா நாடுகள் அமைப்பிற்கும் அறிவித்துள்ளார்.


இந்த நிபுணர்கள் குழு தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார் என லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறான ஓர் நிபுணர்கள் குழு தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனத்திற்கொள்ளாது என வெளிவிவகார அமைச்சு உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

போர் குற்றச் செயல்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக சாட்சியமளிக்க முனைப்பு காட்டிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள், பான் கீ மூனின் அறிவிப்பினால் கலக்கமடைந்துள்ளதாக லக்பிம சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, அமெரிக்கப் பேராசிரியரான பிரான்ஸிஸ் பொயிலை இந்த நிபுணர்கள் குழுவிற்கு நியமிக்குமாறு புலி ஆதரவு அமைப்புக்கள் விடுத்த கோரிக்கையை பான் கீ மூன் நிராகரித்துள்ளார்.

Source & Thanks ; tamilwin

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil