நளினி விடுதலை ஆவாரா?: இன்று தமிழக அரசு பதில்

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியின் விடுதலை [^] குறித்து இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தனது முடிவை அறிவிக்கவுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி தன்னை விடுதலை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அவரது மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக புதிதாக சிறை ஆலோசனைக் குழுவை அமைத்து பரிசீலனை செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் சிறை ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு நளினியை சந்தித்து விசாரணை நடத்தியது. பின்னர் மாநில அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையில், நளினியின் நன்னடத்தையைக் காரணம் காட்டி அவரை முன்கூட்டியே விடுவிக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

நீதிபதிகள் எலிப் தர்மராவ், கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் இந்த வழக்கு கடந்த 11ம் தேதி விசாரணக்கு வந்தது.

அப்போது நளினி விடுதலைத் தொடர்பாக சிறைக் கைதிகள் ஆலோசனைக் குழு தமிழக அரசுக்கு அளித்த அறிக்கையை சீலிடப்பட்ட உரையில் வைத்து அரசின் வழக்கறிஞர் ராமன் நீதிபதிகளிடம் வழங்கினார்.

இந்த ஆலோசனைக் குழு அளித்த அறிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க இரண்டு வார அவகாசம் அளிக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் கோரினார்.

இந்த வழக்கு ஒரு தனி மனிதரின் வாழ்க்கைத் தொடர்பானது, எனவே விசாரணையை தாமதப்படுத்தாமல் விரைவில் முடிவு செய்து நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு கூறிய நீதிபதிகள் விசாரணையை 29ம் தேதிக்கு (இன்று) தள்ளி வைத்தனர்.

இந் நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருவதால் நளினியின் விடுதலை குறித்து தமிழக அரசு தனது முடிவை அறிவிக்கவுள்ளது.

இதன் அடிப்படையில் நளினி விடுதலையாவாரா இல்லையா என்பது முடியாகும்.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil