பாஜக எம்பிக்கு 101 கள்ளத்துப்பாக்கிகள் குண்டுகள் முழங்க வரவேற்பு: ஒருவர் பலி

மத்திய பிரதேச மாநில முன்னாள் பாரதீய ஜனதா தலைவர் நரேந்திரசிங் தாமோர். தற்போது எம்.பி. யாக உள்ள அவருக்கு சமீபத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அவருக்கு சொந்த ஊரில் 101 கள்ளத்துப்பாக்கிகள் மூலம் வானத்தில் சுட்டு வரவேற்பளித்தனர். அப்பொழுது ஒரு குண்டு தவறி சுட்டதில் ஒருவர் பலியாகியுள்ளார்.


பதவியை ஏற்றுக் கொண்ட அவர் டெல்லியில் இருந்து மத்திய பிரதேசம் திரும்பினார். தனது சொந்த ஊரான அப்பா நகருக்கு சென்ற அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்திருந்தனர்.

101 தொண்டர்கள் கையில் நாட்டு துப்பாக்கியுடன் அணிவகுத்து நின்று துப்பாக்கியால் சுட்டு வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடு செய்து இருந்தனர்.

நரேந்திரசிங் காரில் இருந்து இறங்கியதும் 101 பேரும் ஒரே நேரத்தில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு வரவேற்பு அளித்தனர்.

அதில் ஒருவர் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு வானத்தை நோக்கி செல்லாமல் பக்கவாட்டில் சென்றது. அது உள்ளூர் பாரதீய ஜனதா தலைவர் உமாகாந்த் சர்மா உடலில் பாய்ந்தது. மற்றொருவர் சுட்ட குண்டு நரேந்திரசிங் காரில் பட்டது. அவர் அப்போது காரில் இல்லாததால் உயிர் தப்பினார்.

காயம் அடைந்த உமாகாந்த் சர்மா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வரவேற்பு அளிக்க பயன் படுத்தப்பட்ட 101 துப்பாக்கிகளில் பெரும்பாலானவை லைசென்சு இல்லாத கள்ள துப்பாக்கிகளாகும். மத்திய பிரதேச மாநிலத்தில் கள்ள துப்பாக்கிகள் நடமாட்டம் அதிகம். இதை வைத்து இருப்பவர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை.

எனவே இந்த வரவேற்பு விழாவிலும் தாராளமாக கள்ளத் துப்பாக்கியை பயன்படுத்தி உள்ளனர். இத்தனைக்கும் வரவேற்பு விழாவில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர். அவர்கள் கள்ள துப்பாக்கி கொண்டு வந்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

போலீசாரிடம் இதுபற்றி கேட்ட போது சரியான பதிலை சொல்லவில்லை. உமாகாந்த் சர்மா மீது பாய்ந்த குண்டுக்குரிய துப்பாக்கியை கண்டு பிடித்து விட்டோம். அது லைசென்சு உள்ள துப்பாக்கி. தவறுதலாக துப்பாக்கி வெடித்து விட்டது என்று மட்டும் கூறினார்கள்.

இது தொடர்பாக மத்திய பிரதேச காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தனோப்பியா கூறும் போது 250 துப்பாக்கியை பயன்படுத்தி வரவேற்பு அளித்து உள்ளனர். இதுபற்றி முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

Source & Thanks : newindianews

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil