இந்தியாவில் அமையும் வெளிநாட்டு பல்கலைகளில் ‘கோட்டா’ கிடையாது

புதுடில்லி: இந்தியாவில் அமையக்கூடிய வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் ‘கோட்டா’ முறை இருக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.நடப்புப் பட்ஜெட் கூட்டத்தொடரில், வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் (நுழைவு மற்றும் இயக்க ஒழுங்குமுறை) மசோதா தாக்கல் செய் யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டால், இந்தியாவில் பல்வேறு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தங்கள் வளாகங்களைத் திறக்க ஆரம் பித்து விடும்.

இந்தியச் சட்டங்களை அவை பின்பற்றும் வேளையில், இந்தியாவில் உள்ள தனியார் பல்கலைகளைப் போலவே ஜாதிவாரியான ‘கோட்டா’வை பின்பற்றாது. கட்டணம் நிர்ணயிப்பதிலும் அவற்றுக்குச் சுதந்திரம் உண்டு.மசோதா கூறும் சில விதிகளின்படி, வெளிநாட்டுப் பல்கலைகள், தங்கள் படிப்பு விவரங்களைத் தனியாக அச்சிட்டு வெளியிட வேண்டும். இங்கு அளிக்கப்படும் கல்வி மூலம் பெறப்படும் லாபத்தைத் தாய்நாட்டுக்கு அனுப்பவும் முடியாது.

இந்தியாவில் தங்கள் கிளைகளைத் துவக்க வேண்டும் என்று விருப்பமுள்ள பல்கலைகள், யு.ஜி.சி.,யில் தங்கள் விண்ணப்பத்துடன் 50 கோடி ரூபாய் வைப்பு நிதியாகச் செலுத்திட வேண்டும். இந்தியாவில் உள்ள தனியார் பல்கலையுடன் இணைந்து செயல்பட வேண்டுமானால் அதற்குரிய விண்ணப்பத்தையும் அனுப்ப வேண்டும்.யு.ஜி.சி., தனக்கு வரும் விண்ணப்பங்களின் அடிப்படையில் எந்தெந்த பல்கலைகளை அனுமதிக்கலாம் என்பது குறித்து மத்திய அரசுக்கு ஆலோசனை தெரிவிக்கும். மத்திய அரசு நிர்ணயிக்கும் காலக் கெடுவுக்குள் வெளிநாட்டுப் பல்கலைகள் தங்களை யு.ஜி.சி.,யில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil