அரியானாவில் கொள்ளையில் ஈடுபட்ட அதிரடிப்படை போலீஸார்

மக்களை காக்க வேண்டிய அதிரடிப்படை போலீஸார் மக்களிடம் பணம் பறிப்பு கொள்ளையடிப்பில் ஈடுபட்ட சம்பவம் அரியானாவில் நடந்துள்ளது.


பயங்கரவாத சம்பவங்கள் உட்பட தாக்குதல் சமயங்களில், மக்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை, பொது மக்களை மிரட்டியும், கொள்ளையடித்தும் வந்ததால், அந்த படையை அரியானா அரசு உடனடியாக கலைத்து விட்டது.அரியானாவில், 2007ம் ஆண்டு பயங்கரவாதம் மற்றும் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்க, 17 பேர் கொண்ட சிறப்பு செயல் படை உருவாக்கப்பட்டது.

இந்த சிறப்பு அதிரடிப் படையின் உயர் அதிகாரியாக போலீஸ் உதவி கண்காணிப்பாளர் அசோக் ஷியோரன் நியமிக்கப்பட்டார்.இவர் மற்றும் இந்த படை காவலர்கள், தலைமை காவலர்கள் உட்பட எட்டு பேர், வழிப்பறியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளதை அடுத்து, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.கடந்த 11ம் தேதி, பானிபட்டில் உள்ள பங்குச் சந்தை புரோக்கர் ஒருவரின் அலுவலகத்தில் புகுந்த சிறப்பு அதிரடிப் படையை சேர்ந்தவர்கள், அதன் உரிமையாளரை கட்டி வைத்து, அங்கிருந்து ஆறு லட்ச ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுபோல, ஒரு நகைக்கடைக்காரர் மல்கோத்ராவிடம், ‘நாங்கள் விஜிலென்ஸ் பிரிவில் இருந்து வருகிறோம்; நீங்க தங்கம் கடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது; சரிவர வரியும் கட்டுவதில்லை என புகார் வந்துள்ளது’ என்று கூறி மிரட்டியுள்ளனர்.நகைக்கடைக்காரரிடம்,’உங்களை நாங்கள் விடுவித்து விடுகிறோம்; 10 லட்ச ரூபாய் தர வேண்டும்’ என்று பேரம் பேசினர். நகைக் கடை உரிமையா ளர், ஒரு லட்ச ரூபாயை மட்டும் அவர்களிடம் கொடுத்து, எஞ்சிய பணத்தை விரைவில் தருவதாக தெரிவித்துள்ளார்.

சிறப்புப் படையை சேர்ந்த ஒரு போலீசார், மீண்டும் நகைக் கடைக்கு சென்றார்; ‘நான் போலீசுக்கு தகவல் சொல்லியிருக்கிறேன்; அவர்கள் முன்னிலையில் தான் பணம் தருவேன்’ என்று கூற, போலீஸ்காரருக்கு வயிற்றில் புளி கரைத்தது.’மற்றவர்களையும் அழைத்து வருகிறேன்’ என்று கூறிவிட்டு, வந்த வழியே நைசாக கம்பி நீட்டினார். எனினும், கடையில் இருந்து கண்காணிப்பு கேமராவில், இந்த போலீஸ்காரரின் நடமாட்டம் பதிவானது.இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டுள்ளதில் உதவி கண்காணிப்பாளர் ஷியோரனுக்கு பங்கு இருப்பது உறுதியானது; அவர் ஏற்கனவே, இருந்த பொறுப்புகளில் இது போன்ற புகார்களுக்கு ஆளானவர் தான்.

இதைத்தொடர்ந்து, அதிரடிப்படையினர் எட்டு பேர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது; இவர்கள் மீது வேறு புகார்கள் வந்துள்ளதா என்றும் ஆராயப்பட்டு வருகிறது.இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அரசு உத்தரவின் பேரில், சிறப்பு அதிரடிப்படையும் உடனடியாக கலைக்கப்பட்டது.

Source & Thanks : .newindianews

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil