ஜார்கண்டில் நீதிபதி கடத்தல் !

ராஞ்சி : மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் மற்றும் அரசு இன்ஜினியர் உள்பட 5 அதிகாரிகளை மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் கடத்தி சென்றுள்ளனர். ஜார்கண்ட், பீகார், மேற்குவங்கம், ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களில் நக்சலைட்டுகள் தொந்தரவு நாளுக்கு நாள் பெருகி வருவது மத்திய அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.


இங்குள்ள பகுதிகளில் நக்சலைட்டுகளை ஒடுக்க மத்திய உள்துறை அமைச்சர் ஒரு படையை ஏற்படுத்தி முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுத்தார். இது நக்சல்களுக்கு கூடுதல் கோபத்தை ஏற்படுத்தியது. இது முதல் அவர்களது தாக்குதல் நடவடிக்கைகளை அதிகரித்துள்ளனர்.

பல இடங்களில் கண்ணி வெடி வைத்து ரயில்வே நிலையங்கள் தகர்த்தல், மற்றும் அரசு கட்டடங்களுக்கு தீ வைத்தல், அலுவலர்களை கடத்துதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு பல ரயில்வே தண்டவாளங்கள் வெடிகுண்டுகள் வைத்து தகர்க்கப்பட்டன. போலீஸ் அதிகாரி ஒருவர் கடத்தி கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து சி.பி.எம்., தொண்டர்கள் சிலர் கடத்தி கொலை செய்யப்பட்டனர். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ஒரு பள்ளி ஆசிரியர் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்டட்டார்.

இந்நிலையில் இன்று ( சனிக்கிழமை ) ஜார்கண்ட்டில் லேதர் மாவட்டத்தில் 5 பேரை கடத்தி சென்றுள்ளனர். இதில் ஒருவர் மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் சர்வான் கோயா ஆவார் . மற்றொருவர் பொதுப்பணித்துறையில் பணியாற்றும் ஜூனியர் இன்ஜினியர் ரஞ்சித்குமார் ஆவார் . மற்ற 3 பேரும் அதிகாரிகள் ஆவர் . இவர்கள் குறித்து விவரம் இன்னும் அறியப்படவில்லை. இச்சம்பவம் இங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு தலையிட்டு கடத்தப்பட்டவர்களை மீட்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil