`ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (22.01.09) செய்திகள்
Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.
இத்தாக்குதல் சம்பவத்துடன் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வன்னியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 78 ஆகவும் காயமடைந்தோரின் எண்ணிக்கை 243 ஆகவும் அதிகரித்துள்ளது.
புதுக்குடியிருப்பினை நோக்கி இன்று வியாழக்கிழமை காலை 7:55 நிமிடத்தில் இருந்து சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.
விழி மற்றும் செவி மாற்றுத் திறனுடையோர் இல்லமான இனிய வாழ்வு இல்லம், வீதியால் இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்தோர்கள், இடம்பெயர்ந்து வீதியோரத்தில் தங்கியிருந்தவர்கள் மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன.
இதில் 12 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களினதும் காயமடைந்தவர்களினதும் பெயர் விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
இழப்பு விவரம் மேலும் அதிகரிக்கலாம் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இப்பகுதியில் இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த வீடொன்றின் மீது நேற்று இரவு 11:30 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதுடன், 5 பேர் காயமடைந்துள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னியில் சிறிலங்கா அரசாங்கம் நடத்தி வரும் மாபெரும் இன அழிப்பு படையெடுப்பில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சிறிலங்கா முப்படைகளும் பொதுமக்களை இலக்கு வைத்து நடத்திய அகோரமான குண்டுத் தாக்குதல்களில் 66 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 223 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 14 பேர் நேற்று நடைபெற்ற பீரங்கித் தாக்குதல்களில் மட்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 73 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கடந்த இரண்டு வருடங்களாக வன்னிப் பகுதி மீது சிறிலங்கா படைகள் மாபெரும் படையெடுப்பு ஒன்றை நிகழ்த்தி வருகின்றன.
மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய நான்கு மாவட்டங்கள் மீது நடாத்தப்படும் இந்த இன அழிப்புப் படையெடுப்பினால் –
தமது வாழ்விடங்களை விட்டுத் துரத்தப்பட்ட நான்கு இலட்சம் மக்கள் இப்போது நான்கு கிராமங்களுக்குள் குவிந்து போயுள்ளனர்.
தற்போது, இந்த மக்கள் மீது தரை, கடல், வான் வழிகளில் தாக்குதலை நடத்தும் சிறிலங்கா படைகள் ஒரு இனப் படுகொலையை மெல்ல மெல்ல அரங்கேற்றி வருகின்றன.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சிறிலங்கா முப்படைகளும் நடத்திய அகோரமான குண்டுத் தாக்குதல்களில் 66 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 223 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இவர்களில் 14 பேர் நேற்று நடந்த பீரங்கித் தாக்குதல்களில் மட்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 73 பேர் இதில் படுகாயமடைந்துள்ளனர். விசுவமடு தேராவில் மக்கள் குடியிருப்புக்கள் மீது நேற்று புதன்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 4 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது நேற்று அதிகாலை 1:30 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஜப்பானிய விசேட சமாதானப் பிரதிநிதி யசூசி அகாஷி உத்தியோகப் பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றிரவு 10.35 அளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். இவரை வெளிவிவகார அமைச்சின் அதிகாரி வரவேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை வந்துள்ள யசூசி அக்காஷி, இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் நிலைமைகள் குறித்து ஆராயவுள்ளதாகவும் 25ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. யசூசி அகாஷி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, இந்த விஜயத்தின் போது அகாஷி, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட கிழக்கு மாகாண முக்கியஸ்தர்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது
!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவு வான்பரப்பில் இந்திய உளவு அமைப்பின் வானூர்தி வட்டமிட்டு சென்றுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
முல்லைத்தீவு வான்பரப்பில் நேற்று முன்நாள் செவ்வாய்கிழமை இரவு 8:30 நிமிடமளவில் அடையாளம் தெரியாத வானூர்தி உட்பிரவேசித்து சென்றதனால் குழப்பங்கள் தோன்றியுள்ளன.
பாக்கு நீரிணைக்கு மேலாக வந்த வானூர்தி மீண்டும் அதே பாதையினால் திரும்பி சென்றுள்ளது.
வானூர்தி மிகவும் உயரமாக பறந்ததாகவும், கடற்படையினர் வானூர்தியை நோக்கி தாக்குதல்களை மேற்கொண்ட போதும் அது வெற்றியளிக்கவில்லை எனவும் வான்படை பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வானூர்தி மிகவும் பிரகாசமான வெளிச்சங்களை கொண்டிருந்ததை கடற்படையினரும் வான்படையினரும் அவதானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும், வானூர்தி மீண்டும் திரும்பி செல்வதற்கு முன்னர் முல்லைத்தீவு பகுதியில் தரையிறங்கியதா என்பது தொடர்பில் எதுவும் தெரியாதபோதும், அதிக உயரத்தில் பறந்த வானூர்தி தரையிறங்குவது சாத்தியமற்றது என வான்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ள.
இதனிடையே, இந்திய உளவு அமைப்பான றோ கடந்த 3 ஆம் நாள் வானூர்தி மூலம் வன்னிப் பகுதியை கண்காணித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வடக்கு–கிழக்கு மாகாணம் உட்பட பல பகுதிகளிலும் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இன்றுவரை 9 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும் 27 பேர் தாக்கப்பட்டதாகவும் மகிந்த அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஸ் குணவர்த்தன நேற்று புதன்கிழமை காலை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
மேலும் ஐந்து ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டும் அவர்களில் நான்கு பேர் மீண்டும் வீட்டுக்கு திரும்பியுள்ளதாகவும் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்றம் சபாநாயகர் வி.ஜே.மு லொக்குபண்டார தலைமையில் தொடங்கியதும் வாய்மூல கேள்வி நேரத்தின்போது ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இதனை தெரிவித்தார்.
கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் விபரங்களை வெளியிடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மீண்டும் கேட்டபோது அதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, எண்ணிக்கைகளை மட்டும் தருவதாக கூறினார்.
ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமைக்கும் கடத்தப்பட்டமைக்கும் யார் பொறுப்பு என்று கேட்கப்பட்ட போதும் அதற்கான உரிய பதிலையும் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன வழங்கவில்லை.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் சீருடையணிந்து நீதிமன்றில் ஆஜராக முடியாதென கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதவான் நிசாந்த ஹப்புராச்சி தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஊழல் மோசடி தொடர்பாக முறைப்பாடு செய்த பெண் ஒருவரை கடுமையான தாக்கிய குற்றச்சாட்டு தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது குறித்த பொலிஸார் சீருடையணிந்து நீதிமன்றில் ஆஜராகக் கூடாதென நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரிகள் நாட்டைவிட்டு வெளியேறக் கூடாதெனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் 8 cடலங்களை இராணுவத்தினர் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். இந்தச்c டலங்களை நேற்றைய தினம் ஒப்படைத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட cடலங்களில் 7 ஆண் போராளிகளின் சடலங்களும், ஒரு பெண் போராளியின் cடலமும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
குறித்த cடலங்களைப் பிரேத பரிசோதனையின் பின்னர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக தமிழீழ விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்கத் தீர்மானித்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர கூறினார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மட்டக்களப்பு கோரளங்கேணியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞரொருவர் கொல்லப்பட்டுள்ளார். குறிப்பிட்ட இளைஞன் வுடுதலைப் புலி உறுப்பினரென்றும், சடலத்தின் அருகிலிருந்து ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும், கிளேமோர் குண்டு ஒன்று உட்பட சில வெடிபொருட்களும் கண்டெடுக்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் இராணுவத்தினர் வழமை போல் இரவு வேளையில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சமயம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னி மீது தாக்குதல் நடத்த சென்ற மிக் விமானத்தை காணவில்லை செய்திகள் வெளியாகியுள்ளன.
நேற்றுப் புதன்கிழமை சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான மிக் மிகையொலி விமானம் ஒன்று வன்னி நிலம் மீது தாக்குதல் நடாத்துவதற்கு சென்றபோது காணாமல் போயுள்ளதாக ஆரம்பகட்ட தகவல் தெரியவருகிறது.
முதலை மூக்கு வடிவத்தை கொண்ட இவ்விமானம் லேசரால் வழிநடாத்தப்படும் குண்டுகளையும் வீசக்கூடிய வல்லமை பொருந்தியது. இதில் மூன்று வான்படையினர் இருந்ததாக தெரியவருகிறது.
இவ்விமானமே வன்னி மீது பொதுமக்கள் இலக்குகளில் கிளஸ்ரர் வகை குண்டுகளை வீசுவதற்கும் பயன்படுத்தப்பட்டதாக தெரியவருகிறது. எனினும் இதுதொடர்பில் விடுதலைப்புலிகளிடம் இருந்து எதுவிதமான தகவல்களும் பெறப்படவில்லை
!!!!!!!!!!!!!!!!!!!!
சிறிலங்காப் படையினர் திடீர் எறிகணைத்தாக்குதலால் எந்தவித உடைமைகளையும் எடுக்காது இடம்பெயர்ந்த பலநூறு குடும்பங்கள் உடையார்கட்டு உள்வீதிகளில் ஓரங்களிலும் வாய்க்கால் கரைகளிலும் எதுவித மறைப்புகளும் அற்றநிலையில் தங்கியுள்ளனர்.
சிறு குழந்தைகளையும், சிறுவர்களையும் அங்கத்தவர்களாகக் கொண்ட இக்குடும்பங்கள் படுத்துறங்குவதற்குக் கூட சீரான நிலமற்ற நிலையில் கரடுமுரடான பகுதிகளில் இரவுவேளைகளிலும் அமர்ந்திருந்த அவலத்தைக் காணமுடிகிறது.
அடிப்படையிலேயே வறுமைக்கோட்டுக்குட்பட்ட இக்குடும்பங்கள் பலமுறை இடம்பெயர்ந்த நிலையில் எந்தவித வசதிகளும் அற்றநிலையில் தற்போது இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களுக்கான தங்குமிடத்திற்குரிய காணிகள் அற்றிநிலையிலேயே வீதியோரங்களிலும் வாய்க்கால் கரைகளிலும் இம்மக்கள் தங்கியிருக்கவேண்டியநிலை எற்பட்டுள்ளது.
உடுத்த உடுப்புடன் மாத்திரம் இருக்கும் இவர்களுக்கு உடனடியான உதவிகள் கிடைக்கப் பெறாவிடின் இம்மக்கள் பெரும் துயர்படும் நிலை ஏற்படலாம்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நாட்டின் மோசமான பொருளாதார நிலைமை காரணமாக 2008ஆம் ஆண்டு மாத்திரம் 100 ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன என்று ஜே.வி.பி. நேற்று நாடாளுமன்றில் கூறியது.
தற்போதைய நிதி நிலைமை தொடர்பாக நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜே.வி.பியின் எம்.பி சுனில் ஹந்துன் நெத்தியே இதைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:-
உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி இலங்கையின் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது. ஆனால், அமைச்சர்களும் மத்திய வங்கி ஆளுனரும் இந்த உண்மையை ஏற்க மறுக்கின்றனர்.
இலங்கையில் பொருளாதாரம் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துகொண்டு போவதால் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. 2008ஆம் ஆண்டு மாத்திரம் 100 ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.
ஆடைத்தொழிற்சாலைகளுக்கு வங் கிக்கடன் வழங்காமையும் தேவையான மூலப்பொருட்கள் கிடைக்காமையுமே இத்தொழிற்சாலைகள் மூடப்பட்டமைக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
உண்மையில், அரசு மேரும் பிழையான பொருளாதாரக் கொள்கையே இந்த நிலைமைக்கெல்லாம் காரணம்.
நிதிநிறுவனங்களின் மோசடியும் பெருளாதார வீழ்ச்சிக்கு மற்றுமொரு காரணம். போலி நிதி நிறுவனங்களின் செயற்பாட்டுக்கு அனுமதி வழங்கியது இந்த அரசுதான்.
நாட்டின் தற்போதையை உண்மையான பொருளாதார நிலைமை என்னவென்பதையும் அரசு இந்த நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் – என்றார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
த சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியர் லஸந்த விக்கிரமதுங்கவின் கொலை உட்பட இலங்கையில் இடம்பெற்றுவரும் மோசமான சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, இத்தகைய சம்பவங்கள் தொடர்பாக வருத்தம் தெரிவித்து இலங்கையின் முன்னாள் அமெரிக்கத் தூதர்கள் ஆறுபேர் ஒன்றுசேர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்கள்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழக அரசு இந்திய மத்திய அரசுக்கு எந்த அழுத்தம் கொடுத்தாலும் இலங்கை மீதான நிலைப்பாட்டில் இந்திய மத்திய அரசின் கொள்கைகளில் மாற்றம் ஏற்படப்போவதில்லை.”
– இவ்வாறு ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
வடக்கின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கும் மாநாடு தேசிய அபிவிருத்தி ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
அவர் தொடர்ந்து தெரிவித்தவை வருமாறு:-
மோதல் இடம்பெற்ற பகுதிகளில் மனிதாபிமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதேவேளை, மக்களின் பாதுகாப்புக்காக இலங்கை அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனனுக்கு வடபகுதி மக்களைப் பாதுகாக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
வடக்கில் சிக்கியுள்ள மக்களின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டமை சுட்டிக்காட்டப்பட்டது. உலகில் யுத்தம் இடம்பெறும் எந்தவொரு நாட்டிலும் மக்களைப் பாதுகாக்க இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
வடபகுதி மக்களுக்கான அரசின் உணவுப் பொருள் விநியோகம் குறித்து இந்தியா திருப்தி அடைந்துள்ளது. இந்தியாவால் நன்கொடையாக வழங்கப்பட்ட உணவுப் பொருட்கள் வடபகுதி மக்களை முறையாக சென்றடையும் வகையில் விநியோகிக்கப்பட்டமைக்கு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க சஞ்சிகை ஒன்றும் பாராட்டியுள்ளது. இலங்கையிடம் யுத்த ஆலோசனை பெற்றுக்கொள்ளக் கூடிய அளவில் அதன் நடவடிக்கைகள் உள்ளன என அந்த சஞ்சிகை பாராட்டுத் தெரிவித்துள்ளது என அமைச்சர் மேலும் கூறினார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நேற்றுக்காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பை அடுத்து மட்டக்களப்பு நகரில் விசேட அதிரடிப்படையினர் நடத்திய தேடுதலில் 15 தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கானோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்தத் தேடுதல் நடவடிக்கை காரணமாக மட்டக்களப்பில் பதற்றம் ஏற்பட்டது. அத்துடன், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் ஊழியர்களின் வருகை குறைவாகக் காணப்பட்டன என்றும் கூறப்பட்டது.
நகர்ப்புறப் பாடசாலைகளில் மாணவர்களின் வரவும் குறைவாகக் காணப்பட்டன என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு நகரிற்கு வந்த வாகனங்கள் அனைத்தும் வழி மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டன என்று மேலும் அறியமுடிகிறது.
!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ்ப்பாணத்துக்கும், தலைமன்னாருக்கும் இடையில் புதிய கடல் மார்க்கப் பாதையொன்று கடற்படையினரால் திறக்கப்பட்டிருக்கிறது என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனையிறவு மற்றும் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து ஏ – 9 வீதியும், பூநகரி கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து ஏ – 32 வீதியும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன.
இந்த நிலையில் பயணச் செலவைக் குறைக்கும் நோக்கில் தலைமன்னாருக்கும், புங்குடுதீவுக்கும் இடையில் கடல் மார்க்கப் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைமன்னாருக்கும், புங்குடுதீவு குறிகட்டுவான் பகுதிக்கும் இடையில் பொதுமக்கள் கப்பலான – 543ஐ கடற்படையினர் பயணிகளின் போக்குவரத்துக்கு ஈடுபடுத்தியுள்ளனர் என கடற்படைப் பேச்சாளர் கப்டன் டி.கே.பி. தஸநாயக்க கூறினார். 350 பேர் பயணிக்கக் கூடிய இந்தக் கப்பல் வாரத்தில் மூன்று நாட்கள் பணியில் ஈடுபடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
திருகோணமலைக்கும், காங்கேசன்துறைக்கும் இடையில் 120 கடல்மையில் தூரம் காணப்படுகின்ற போதும், தலைமன்னாருக்கும், புங்குடுதீவுக்கும் இடையில் 22 கடல் மைல்கள் தூரமே இருக்கிறது என கடற்படை சுட்டிக்காட்டுகிறது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் தீவிர ஆர்வம் காட்டும் இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு வழங்கியுள்ள உறுதிமொழிகளை நிறைவேற்றாது என இந்திய அரசியல் ஆய்வாளரான பேராசிரியர் ஆர்.சூரியநாராயணன் கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கை விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவரான பேராசிரியர் ஆர்.சூரியநாராயணன் இந்திய செய்திச் சேவையொன்றிற்கு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை இராணுவத்தின் தொடர் நடவடிக்கைகள் அரசியல் தீர்வை பின்தள்ளியுள்ளது என கருத்துத் தெரிவித்துள்ள அவர் இலங்கையின் அரசியல் ஆட்சிகள் மோதலுக்குத் தீர்வு காண்பதற்கான வழிவகைகள் குறித்து பொதுக் கருத்தை உருவாக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை அரசு வடபகுதி தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது. அரசியல் தீர்வுப் பொதி தொடர்பாக மஹிந்த அரசினால் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியவில்லை என்றும் சூர்யநாராயணன்
குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் இதயங்களில் இருக்கும் வரை யுத்தம் முடிவிற்கு வராது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் தமது தனித் தாயகத்திற்கான போராட்டத்தை தொடர்வதற்காக இலங்கையின் ஏனைய பகுதிகளில் மறைந்துள்ள அவர்களுடைய போராளிகளைப் பயன்படுத்துவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
வட பகுதியில் தமது முக்கிய நிலைகளை இழந்த புலிகள் முல்லைத்தீவை பாதுகாப்பதற்கு மரபு வழியில் போராடுவார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அமைதிப்படையிடம் பெருமளவு நிலப்பரப்பை இழந்த பின்னர் விடுதலைப்புலிகளால் மீண்டும் புத்துயிர் பெற முடிந்ததையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்
!!!!!!!!!!!!!!!!!!!
கடந்த நவம்பர் மாதம் தொடக்கம் இதுவரை (ஜனவரி வரை) அரசாங்கம் 56 பில்லியன் (5,600 கோடி) ரூபா பெறுமதியான புதிய நாணயத் தாள்களை அச்சிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதின்கிழமை நடைபெற்ற நாட்டின் நிதி நிலைவரங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பேசும் போதே கபீர் ஹாசிம் இந்தத் தகவலை வெளியிட்டார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்;
புதிய நாணயத் தாள்களை அச்சிடுவதன் மூலம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித்நிவாட் கப்ராலுக்கு நாட்டின் ஒரு நெருக்கடியைப் போக்கிக் கொள்ள முடியாது. வியட்நாம் யுத்த களத்தில் ஏற்பட்ட செலவுகளினால் அமெரிக்காவும் நாணயத் தாள்களை அச்சிட ஆரம்பித்ததன் விளைவாக அங்கு பெரும் பணவீக்கம் ஏற்பட்டது. இதனால், அமெரிக்காவுக்கு கையிருப்பிலிருந்த தங்கங்களை விற்கவேண்டி ஏற்பட்டது.
நாட்டில் பொருளாதார அபிவிருத்தியை காண்பதற்கில்லை. எமது ஆட்சிக் காலத்தில் நாம் 29.9 சதவீதமாக பணவீக்கத்தை கொண்டு செல்லவில்லை. அப்பாவி மக்களின் பணத்தை சுரண்டி அவர்களின் வயிற்றில் அடிக்கவில்லை.
அரசாங்கத்தினால் கடந்த நவம்பர் மாதம் தொடக்கம் இதுவரை 56 பில்லியன் (5,600 கோடி) ரூபா பெறுமதியான நாணயத் தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் தொடக்கம் அரசாங்கம் தொடர்ந்தும் நாணயத்தாள்களை அச்சிட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாது, கடந்த செப்டெம்பர் மாதம் முதல் இதுவரை அரசாங்கம் திறைசேரி உண்டியல்களிலிருந்தும் 148 பில்லியன் (14,800 கோடி) ரூபாவைப் பெற்றுள்ளது. இதுவும் உரிய முறையில் பெறப்படவில்லை.
அரசாங்கம் கட்டுப்பாடின்றி புதிய நாணயத் தாள்களை அச்சிட்டு வருவதால் இலங்கையின் நாணயப் பெறுமதியும் வீழ்ச்சியடைந்து வருகிறது. அரசாங்கத்தின் தவறான நிதி கையாளுகையினால் நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சிகளை சந்தித்து வருகிறது என்றார
!!!!!!!!!!!!!!!!!!!
போலி விசா மூலம் ஜேர்மனி செல்ல விருந்தார் எனக்குற்றம் சாட்டப்பட்ட யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு வழக்கு விசாரணை முடிவில் குற்றவாளியாகக் கண்ட நீர்கொழும்பு மேலதிக நீதிவான் உப்புல் ராஜகருண 50 ஆயிரம் ரூபா அபராதமும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருடகால சிறைத்தண்டனையும் விதித்துள்ளார்.
2005 பெப்ரவரி 3 ஆம் திகதி இப்பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணம் செய்ய வந்தபோது அவரது கடவுச்சீட்டு விஸாவில் மோசடி செய்யப்பட்டிருப்பதை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இவர் குற்றப்புலனாய்வு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றபோது, ஜேர்மனியில் உள்ள தனது கணவனிடம் போவதற்காக முகவர் ஒருவர் மூலம் பயண ஏற்பாட்டை செய்ததாகவும் அவரே விஸா மற்றும் பயண ஏற்பாடுகளைச் செய்து தந்ததாகவும் ஜேர்மனி சென்றதும் 25 இலட்சம் ரூபா பணம் தருவதாக தெரிவிக்கப்பட்டதாகவும் வாக்குமூலம் அளித்திருந்தார் என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
குடிவரவு குடியகல்வு சட்டவிதிகளின் கீழ் அனுமதியின்றி நாட்டைவிட்டு செல்வதற்கு முயன்றதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
india
ஈழத் தமிழர்களுக்காக நேற்று தமிழ்நாடு முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் போராட்டத்தில் இறங்கி பாடசாலை மற்றும் கல்லூரிகளில் வகுப்புகளை புறக்கணித்தனர் என அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் சிறிலங்கா அரசின் போரை உடனடியாக தடுத்து நிறுத்த இந்திய மத்திய அரசை வலியுறுத்தும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் உயர் பாடசாலைகளைச் சேர்ந்த 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் நேற்று போராட்டத்திற்கு ஆதரவாக வகுப்புகளை புறக்கணித்தனர்.
இந்த போராட்டத்தை அடக்கிவிட வேண்டும் என்று அரசு மாணவர் தலைவர்களை கைது செய்துள்ளது. அடக்குமுறை மூலம் மாணவர்களை ஒடுக்கிவிட முடியாது. மாணவர்களின் ஒத்துழைப்புடன் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.
சென்னை பல்கலைக்கழகம், சென்னை சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். நாளை பச்சையப்பன் கல்லூரி, புதுக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வார்கள்.
மேலும் அனைத்து கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கோவை பன்னீர் செல்வம், தஞ்சை பாக்கியராஜ், இனியன், தொல்காப்பியன் ஆகியோர் தெரிவிக்கையில், ஈழத் தமிழர்களுக்காக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்தப் போராட்டத்தை அரசு மாணவர் தலைவர்களை கைது செய்து அடக்குமுறையை ஏவி விடுவதன் மூலம் தடுத்து நிறுத்தி விட முடியாது. அப்படி நினைத்தால் தீவிரமடையும் என்றும் கூறினர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கை முல்லைத் தீவில் மரணத்தின் விளிம்பில் இருக்கும் 6 லட்சம் தமிழ் மக்களின் உயிர் காக்கும் போராட்டத்தை வகுப்புகளைப் புறக்கணிப்பதன் மூலம் மாணவர்கள் தொடங்கி இருப்பதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது என்று அக்கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தப் போராட்டத்தில் மாணவர்களுக்கு காவல்துறை எந்தவித அச்சுறுத்தலையும் செய்யக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ள அவர், போராடும் மாணவர்கள், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காமல் அமைதியான முறையில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
!!!!!!!!!!!!!!!!
சத்யம் நிறுவன ஊழியர்களுக்கு ஜனவரி மாத சம்பளம் வழங்குவதற்காக அதன் சொத்துக்களை அடமானம் வைக்க புதிய நிர்வாகக்குழு முடிவு செய்துள்ளது.
சத்யம் நிறுவனத்தில் மோசடி நடைபெற்றதை அடுத்து, அந்நிறுவனம் கடும் நிதிநெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. ஊழியர்களுக்கு ஜனவரி மாத சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்களை அடமானம் வைத்து, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க மத்திய அரசு அமைத்துள்ள புதிய நிர்வாகக்குழு முடிவு செய்துள்ளது. இந்த சொத்துக்களை விற்பனை செய்வதற்கு ராமலிங்க ராஜுவிற்கு தடை வித்க்கப்பட்டுள்ளதாகவும் குழு தெரிவித்துள்ளது.
!!!!!!!!!!!!!!
இலங்கையில் போர் நிறுத்தம் கேட்டு தமிழகத்தில் மாணவ– மாணவிகள் நடத்தும் போராட்டம் முக்கியவத்தும் வாய்ந்தது என்று தெரிவித்துள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அற வழியில் வகுப்புகளை புறக்கணித்து அவர்கள் நடத்தும் போராட்டத்துக்கு காவல்துறையினர் எந்தவித இடையூறும் செய்யாமல் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!
திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லதா அதியமான் இன்று முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார்.
அவைத் தலைவர் அறையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் லதா அதியமானுக்கு அவைத் தலைவர் ஆவுடையப்பன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்
!!!!!!!!!!!!!!!!!!
ஆரம்ப கல்வியைப் பொறுத்தவரை 2007-08 ஆம் ஆண்டுக்கான கல்வி வளர்ச்சிக் குறியீட்டில் தமிழ்நாடு 4ஆது இடத்தை பெற்றுள்ளது. இதில் புதுச்சேரி முதல் இடத்திலும், டெல்லி இரண்டாம் இடத்திலும், லட்சத்தீவு 3ஆவது இடத்திலும் உள்ளன.
கல்வி திட்டமிடல், நிர்வாகத்திற்கான தேசிய பல்கலைக்கழகம், கல்வி வளர்ச்சி குறியீட்டு எண்ணை கடந்த 3 ஆண்டுகளாக கணக்கிட்டு வருகிறது. இந்த எண்ணை கணக்கிடுவதற்கு 23 அளவீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன்படி, ஆரம்ப நிலை, துவக்க நிலை மற்றும் உயர்நிலை கல்விக்கான வளர்ச்சி குறியீட்டு எண் கணக்கிடப்பட்டு அதற்கேற்றவாறு மாநிலங்களுக்கு தரநிலை (ரேங்க்) அளிக்கப்படுகிறது.
எளிதில் கல்வி கற்கும் வாய்ப்பு, உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு இந்த குறியீட்டு எண் நிர்ணயிக்கப்படுகிறது. கல்வி வளர்ச்சி குறியீட்டு எண்ணின் அதிகபட்ச மதிப்பு 1.000 ஆகும். ஆரம்ப கல்வி நிலையில், கல்வி வளர்ச்சி குறியீட்டு எண் மிகக்குறைவாக உள்ள மாநிலம் பீகார் (0.389) ஆகும்.
துவக்க கல்வி நிலையில், கேரள மாநிலம் இந்த குறியீட்டு எண்ணில் முதலிடம் (0.842) பெறுகிறது. அதற்கு அடுத்த இடங்களில் லட்சத்தீவு, புதுச்சேரி, சண்டிகர், டெல்லி ஆகியவை உள்ளன.
!!!!!!!!!!!!!!!!!!
இருதய சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட் பிரதமர் மன்மோகன் சிங் இன்று அதிகாலை வீடு திரும்பினார்.
இதுகுறித்து பிரதமரின் பிரத்யேக மருத்துவர் கே.எஸ்.ரெட்டி கூறுகையில், அவரது (பிரதமர்) உடல் நலம் சீராகவும், நலமாகவும் உள்ளது. எனவே அவர் இன்று அதிகாலை 6.30 மணியளவில் இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் (எய்ம்ஸ்) இருந்து வீடு திரும்பியதாகக் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், நேற்று முன்தினம் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக எய்ம்ஸ் சென்றார்.
அதில் அவருக்கு இருதயத்தின் சில பகுதிகளில் அடைப்பு இருப்பதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவர் நேற்று மருத்துவமனையி அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை பிரதமர் வீடு திரும்பியுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!
தலைநகர் டெல்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள, இந்தியன் முஜாஹிதீன் இயக்கத் தீவிரவாதிகள் என்று கருதப்படும் 5 பேர் இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
டெல்லியில் செப்டம்பர் 23ஆம் தேதி நடந்த, 26 பேரைப் பலிகொண்டதுடன் நூற்றுக்கணக்கானவர்களை காயப்படுத்திய, தொடர் குண்டு வெடிப்புக்கள் தொடர்பாக மொத்தம் 5 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட மொஹம்மது சைஃப், ஜீஸன் அஹமது, ஜியா– உர் ரெஹ்மான், சாக்யுப் நிசார், மொஹம்மது ஷகீல் ஆகிய 5 பேரும், அகமதாபாத்தில் ஜூலை 26ஆம் தேதி நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் பற்றிய விசாரணைக்காக அக்டோபர் 27ஆம் தேதி குஜராத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இவர்கள் 5 பேரும் அகமதாபாத்தில் இருந்து அழைத்து வரப்பட்டு டெல்லி பெருநகரக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
குற்றம்சாற்றப்பட்டு உள்ளவர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையைப் படித்த மாநகரக் குற்றவியல் நீதிமன்றத் தலைமை நீதிபதி காவேரி பவேஜா, 5 பேரையும் பிப்ரவரி 4 ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்தியாவுக்கு வழங்குவதாக கூறியிருந்த அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் நெர்பா ரக நீர்முழ்கிக் கப்பல்களை விநியோகிக்கும் திட்டத்தை ரஷ்யா காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது.
இதுதொடர்பாக ரஷ்யாவின் கொம்மர்சன்ட் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அமுர் கப்பல் கட்டுமானப் பகுதியில் அகுலா-2 ரக நெர்ப்பா நீர்மூழ்கிகளை வெள்ளோட்டம் பார்க்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், நிதிப்பற்றாக்குறை காரணமாக கப்பல் தயாரிக்கும் திட்டத்தை தொடர இயலவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!
world
பாகிஸ்தானுக்கு சாதகமாக நடந்துகொள்ளாவிட்டால் அமெரிக்காவுடனான உறவை மறுபரிசீலனை செய்யப்போவதாக பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஒட்டியே அந்நாட்டிற்கு நிதியுதவிகள் அளிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் அமெரிக்காவிற்கான பாகிஸ்தான் தூதர் ஹுசைன் ஹக்கானி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்தார். பாகிஸ்தான் விஷயத்தில் ஒபாமா பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்றும், பாகிஸ்தானுக்கு சாதகமாக செயல்படாவிட்டால் அமெரிக்காவுடனான உறவைத் துண்டிப்பது குறித்து தாங்கள் முடிவெடுக்க இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்தார். பாகிஸ்தான் மீது ஜார்ஜ் புஷ் மிகுந்த அக்கறை காட்டியதுபோல, ஒபாமாவும் அக்கறை காட்ட வேண்டும் என்றும் ஹக்கானி வேண்டுகோள் விடுத்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஒபாமா பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டபோது சிறுதவறு ஏற்பட்டதால் இரண்டாவது முறையாக வெள்ளைமாளிகையில் அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
பராக் ஒபாமாவிற்கு நேற்று முன்தினம் அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும்போது, வார்த்தை ஒன்றை மாற்றிக் கூறியதால் சிறு தவறு ஏற்பட்டது. இது அமெரிக்காவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 35 வார்த்தைகள் அடங்கிய வாக்குறுதியில் ஏற்பட்ட சிறிய தவறை அடுத்து, ஒபாமா மீண்டும் நேற்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். தலைமை நீதிபதி வாக்குறுதியை மெதுவாகக் கூற, 25 நொடிகளில் ஒபாமா பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். இதற்கு முன்னர் கால்வின் கூலிட்ஜ் மற்றும் செஸ்டர் ஆர்தர் ஆகியோர் அதிபராகப் பதவியேற்றபோது இதுபோன்ற குழப்பம் ஏற்பட்டது
!!!!!!!!!!!!!!!!!!!!!
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலராக கடும் எதிர்ப்புக்கிடையே ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டார். செனட் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பின்மூலம் அவர் அபார வெற்றி பெற்றார்.
அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு ஒபாமாவிடம் தோல்வி அடைந்தவர் ஹிலாரி கிளிண்டன். அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா தேர்வு செய்யப்பட்டதும், வெளியுறவுத்துறை செயலராக ஹிலாரியை அறிவித்தார். ஆனால், அவரது கணவரும், அமெரிக்க முன்னாள் அதிபருமான கிளிண்டன் நிறுவியுள்ள தொண்டு நிறுவனத்திற்கு வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளதால், முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாகக்கூறி வெளியுறவுத்துறை செயலர் பதவிக்கு ஹிலாரியை நியமிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க செனட் சபையில் இதுகுறித்து நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஹிலாரிக்கு ஆதரவாக 94 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் கிடைத்ததை அடுத்து, அவர் வெளியுறவுத்துறை செயலர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று ஒபாமாவிற்கு தாலிபான் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் அனுப்பியுள்ள இ–மெயிலில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தேவையை அந்நாட்டவர்களே பூர்த்தி செய்துகொள்வார்கள் என்றும், அமெரிக்கா தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். ஆப்கனில் சோவியத் ரஷ்யா தோற்கடிக்கப்பட்டது மற்றும் புஷ்ஷிற்குக் கிடைத்த தோல்விகள் உள்ளிட்டவைகளை பாடமாகக் கொண்டு, அமெரிக்க படைகளை அப்பகுதியில் இருந்து உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் தாலிபான் தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர். இதனை செயல்படுத்தாவிட்டால் கடும் விளைவுகளை ஒபாமா சந்திக்க நேரிடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
1us $ =114.10sl / 48.96in
1swiss fr = 98.51sl /42.30in
1uk pound =158.05 sl /67.87in