‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (21.12.08) செய்திகள்

 கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியில் சிறிலங்கா படையினர் வல்வளைத்த 2 கிலோ மீற்றர் முன்னரண் பகுதி தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலின் மூலம் மீட்கப்பட்டுள்ளது. இதில் 60 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 150 பேர் காயமடைந்துள்ளனர். படையினரின் 10 உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
முறிகண்டியில் உள்ள இரணைமடு பகுதியில் சனிக்கிழமை காலை 6:30 நிமிடம் தொடக்கம் முற்பகல் 11:30 நிமிடம் வரை விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதல் மூலம் இந்த முன்னரண் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (16.12.08) சிறிலங்கா படையினரால் வல்வளைக்கப்பட்ட முன்னரணே விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலினால் படையினர் பலத்த இழப்புக்களுடன் அவர்கள் கைப்பற்றியிருந்த அரண் பகுதியை கைவிட்டு ஓடினர்.
இதன் பின்னர் அந்த இரண்டு கிலோ மீற்றர் நீளமான முன்னரண் பகுதி விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டது.
இதில் சிறிலங்கா படைத்தரப்பில் 60 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 150-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் 10 உடலங்கள் உட்பட பெருமளவிலான படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடைப்பட்ட களமுனையில் மேலும் பல படையினரின் உடலங்களும் படையப் பொருட்களும் சிதறிக் கிடக்க காணப்படுகின்றன.
இந்த அதிரடித் தாக்குதலின் போது படையினருக்கு ஒத்துழைப்பாக வான்படையின் வானூர்திகள் செறிவான தாக்குதலை நடத்தின என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட 38 உடலங்கள் இரண்டு கட்டங்களாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. இன்று எடுக்கப்பட்ட 10 உடலங்களும் நாளை கையளிக்கப்படும் என வன்னி தகவல்கள் தெரிவித்துள்ளன.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கிளிநொச்சி மற்றும் கிளாலி களமுனைகளில் சிறிலங்கா படையினர் நடத்திய வல்வளைப்பு நடவடிக்கைகளை புலிகள் எதிர்கொண்டு தாக்குதல் நடத்தியதை சிறிலங்காவின் கொழும்பு ஊடகங்கள் மிகப் பிரம்மிப்புடன் செய்தியாக வெளியிட்டுள்ளன.
“லக்பிம” வார சண்டே ரைம்ஸ்வார VLfs; மிகப் பிரம்மிப்புடன் செய்தியாக வெளியிட்டுள்ளன
விடுதலைப் புலிகள் அலை அலையாக வந்து தாக்கியதாகவும், சில இடங்களில் மிக அருகாமையில் நேரடி மோதல்கள் நடைபெற்றதாகவும், விடுதலைப் புலிகள் மோட்டார் எறிகணைகளை மழை போல பயன்படுத்தியதாகவும் தனது பெயரை குறிப்பிடாத படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனவே, விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக தமது ஆயுத விநியோகத்தை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக பீரங்கி குண்டுகளையும், மோட்டார் எறிகணைகளையும், ஏனைய ஆயுதங்களையும் தருவித்து வருவதாக படையினரின் புலனாய்வுதுறை தெரிவித்துள்ளது.
லக்பிம” , சண்டே ரைம்ஸ்வார VLfspy; ntspahd Nkyjpf nra;jpfis vkJ gpujhd nra;jp mwpf;ifia njhlh;e;J nra;jpapd; gpd;dzpahf Neah;fs; Nfl;fyhk;.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஐரோப்பிய ஒன்றியம் வழங்கி வரும் ஜி.எஸ்.பி. ப்ளஸ் சலுகை தொடர்பாக அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் கத்ரீன் ஆஸ்ரன், ஜனவரி மாத இறுதியில் சிறிலங்கா குழுவின் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் தைத்த ஆடைத் தொழிலுக்கு ஊக்கமளிக்கக்கூடியதாக ஐரோப்பிய ஒன்றியம் அளித்து வந்த ஜி.எஸ்.பி. ப்ளஸ் சலுகை இருந்து வந்தது. ஆனால், சிறிலங்கா அரசாங்கத்தின் மோசமான மனித உரிமை மீறல்களால் இச்சலுகை தொடர்ந்தும் சிறிலங்காவுக்கு கிடைப்பதில் சிக்கல் உருவானது.
சிறிலங்காவுக்கு இச்சலுகையை தொடர்ந்து வழங்குவது தொடர்பாக கடந்த ஒக்ரோபர் மாதம் விசாரணைகளைத் தொடங்கியது.
இந்நிலையில் சிறிலங்கா அமைச்சர் ரோகித போகல்லாகம தலைமையிலான குழு, ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளருடன் அடுத்த மாதம் இறுதியில் பேச்சுக்களை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!
பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் வெள்ளிக் கிழமை பொரளைப் பகுதியில் வைத்து வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத வர்களால் கடத்திச் செல்லப்பட்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு, விசுவமடுப் பகுதியைச் சேர்ந்த வடிவேல் அரவிந்தன் (வயது 23) என்ற மாணவன் கடந்த வெள்ளியன்று பொரளையில் உள்ள கடவுச் சீட்டு அலு வலகத்துக்குச் சென்ற வேளை, பொலிஸ் சீருடையிலும், சிவில் உடையி லும் வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்திச் செல்லப் பட்டார் எனக் கூறப்பட்டது.
சம்பவம் தொடர்பில் மாணவனது உறவினர்கள் பிரதி அமைச்சர் இராதகிருஷ் ணனிடம் முறையிட்டுள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கம்பஹா நகரப் பகுதியில் நேற்று சனிக்கிழமை சிறிலங்கா பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 14 தமிழர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும்வடக்கு, கிழக்கு, வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.
தமது ஆள் அடையாளங்களை அத்தாட்சிப் படுத்தாதவர்களும், அப்பகுதியில் தங்கி இருப்பதற்கான காரணத்தை நிரூபிக்கத் தவறியவர்களுமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள அதேவேளை கைது செய்யப்பட்ட அனைவரும் வேலை செய்பவர்களும் பல வருட காலங்களாக கம்பஹா பிரதேசத்தில் வியாபாரம் செய்பவர்களுமே எனத் தெரியவருகின்றது.
கம்பஹா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்களை விசாரணை செய்து வருவதாகவும் வீசாரணை முடிவடைந்த பின்னர் நாளை திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை கடந்த இரு தினங்களுக்கு முன் வவுனியாவிலிருந்து யாழ்தேவி புகையிரதத்தில் பயணம் செய்த 11 இளைஞர்கள் கம்பஹா புகையிரத நிலையத்தில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் அடுத்த வருடம் முதல் புதிய சாரதி அனுமதிப் பத்திரமொன்றை அறிமுகப்படுத்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.இந்த புதிய சாரதி அனுமதிப் பத்திரத்தின் மூலம் மோசடிகளை வெகுவாகக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ள விண்ணப்பிப்போர் மற்றும் சாரதி அனுமதிப் பத்திரங்களை புதுபிக்க விண்ணப்பிப்போர் இந்த புதிய சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வீதிப் போக்குவரத்து விதிகளை மீறிச் செயற்படும் சம்பவங்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கும் வகையில் விசேட இலத்திரனியல் சிப் ஒன்று குறித்த சாரதி அனுமதிப் பத்திரத்தில் பொருத்தப்படவுள்ளது.

குற்றச் செயல்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளதாகவும், குறித்த மதிப்பெண்களை தாண்டுவோரது அனுமதிப் பத்திரங்களை ரத்துச் செய்யவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

!!!!!!!!!!!!!!!
சிறிலங்காவின் மத்திய மாகாண சபை முதல்வர் வேட்பாளரான எஸ்.பி.திசநாயக்கவுக்கு ஆசி வழங்கிய அஸ்கிரிய மகாநாயக்கர், “நா காக்கவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
சிறிலங்கா தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் இருந்து எஸ்.பி.திசநாயக்க நீக்கப்பட்டிருந்தார். இதனை எதிர்த்து தலைமை நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்திருந்த எஸ்.பி.திசநாயக்கவுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது.
எதிர்வரும் மத்திய மாகாண சபை முதல்வர் வேட்பாளராக போட்டியிடும் எஸ்.பி.திசநாயக்க, அஸ்கிரிய மகாநாயக்கரை நேரில் சந்தித்து ஆசி பெறச் சென்றார்.
அவருக்கு ஆசி வழங்கிய மகாநாயக்கர் உடுகம சிறி புத்தரகித்த தேரர், “நா காத்துசெயற்படுமாறு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளார
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் Uk; MAjjhupAkhdவிநாயகமூர்த்தி முரளிதரன் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளதாகலக்பிமசெய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கட்சிக்கு தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி என பெயரிடப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. எனினும் MAjjhupகருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இந்த செய்தியை மறுத்துள்ளார்.
லக்பிம செய்தியின்படி புதிய கட்சியின் தலைவராகMAjjhup கருணாவும், செயலாளராக இனியபாரதியும், பொருளாளராக சின்னத்தம்பி என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இது தொடர்பாக கருத்துரைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் Uk; MAjjhupAkhdவிநாயகமூர்த்தி கருணா இது எவ்வித அடிப்படையும் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ள செய்தி என தெரிவித்துள்ளார்.
தாம் கட்சியை மேம்படுத்த பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதாக தெரிவித்துள்ள அவர், புதிய கட்சியை ஆரம்பிக்கவேண்டிய அவசியமில்லை என்றும் MAjjhupகருணா தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 india
இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக் கடற்கரையை கடந்த வெள்ளிக்கிழமையன்று வந்தடைந்த சிங்களத் தம்பதி, இந்தியாவில் அடைக்கலம் தரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
இலங்கை மன்னாரில் இருந்து 7 பெண்கள், 6 குழந்தைகள் உள்பட 21 அகதிகள் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை கடந்த வெள்ளிக்கிழமை படகில் வந்தடைந்தனர்.
அவர்களோடு இலங்கை மகரகம பகுதியைச் சேர்ந்த துவர சந்தன (30), கொழும்பு அருகே கழுவத்தை நகரைச் சேர்ந்த சாருக தில்கானி (17) தம்பதியினரும் வந்திருந்தனர்.
தனுஷ்கோடி காவல் நிலையத்தில் கியூ பிரிவு பொலிஸார், உள்ளூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி, மண்டபம் அகதிகள் முகாமிற்கு அவர்களை அனுப்பி வைத்தனர்.
அதன்போது அவர்கள் இருவரும் சாரதி பயிற்சிக் கல்லூரியில் சந்தித்தாகத் தெரிவித்துள்ளனர். அவர்களின் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காமையால் இலங்கை வவுனியாவில் இருந்த தமிழ் நண்பரான வசந்தமாலா என்பவர் வீட்டில் தங்கி இருந்தோம். அப்பகுதியில் தற்போது தீவிரமாகப் போர் நடந்து வருகிறது.
இதனால், அகதிகளோடு சேர்ந்து இராமேஸ்வரத்துக்கு வந்தோம். எங்களுக்கு அடைக்கலம் அளிக்க வேண்டும் என, அத்தம்பதி வேண்டுகோள் விடுத்தனர்.

இந்தநிலையில் அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கமுடியாது என தெரிவித்துள்ள இந்திய அதிகாரிகள், அவர்கள் கடவுச்சீட்டு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்படுவர் எனத் தெரிவித்துள்ளனர
!!!!!!!!!!!!!!!!!!

உலகின் இரண்டாவது பெரிய யுரேனிய கனிம வளம் பெற்றுள்ள நாடான கசகஸ்தான், இந்தியாவிற்கு யுரேனியம் வழங்கத் தயாராக உள்ளதென தெரிவித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் நடந்தஇந்தியாகசகஸ்தான்பிரச்சனைகளும் வாய்ப்புகளும்என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்நாட்டு எரிசக்தி நிபுணர் மாரட் சைகுட்டினோவ், எரிசக்தி ஒத்துழைப்புத் தொடர்பாக இந்தியாவுடன் ஒரு விரிவான ஒப்பந்தத்தை கசகஸ்தான் விரும்புகிறது என்று கூறினார்.

இந்தியாவிற்கு யுரேனியம் வழங்குவதில் கசகஸ்தானிற்கு எந்தச் சிக்கலும் இல்லை என்று கூறிய சைகுட்டினோவ், இந்தியாவிலிருந்து இயற்கை எரிவாயுவையும், கச்சாவையும் பெற கசகஸ்தான் விரும்புகிறது என்று கூறினார்.

கசகஸ்தான் நாட்டு அதிபர் நூர் சுல்தான் நஜர்பயீவ் இன்று இந்தியா வரவுள்ளதை முன்னிட்டு டெல்லியில் இந்த கருத்தரங்கு நடைபெற்றது.

பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பாக இந்தியாவும்கசகஸ்தானும் 2002ஆம் ஆண்டிலேயே ஒத்துழைக்க ஒப்புக்கொண்டு, அதற்கென ஒரு பணிக்குழு உருவாக்கியதாகவும், ஆனால் அது சில முறை சந்தித்துப் பேசியது தவிர பெரிதாக எதையும் செய்யவில்லை என்று சைகுட்டினோவ் கூறினார்.

இந்தியாவின் முன்னாள் அயலுறவுச் செயலரும், சர்வதேச உறவுகளுக்கான ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான எம்.கே. ராஸ்கோத்ரா இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு அரும் பெரும் வாய்ப்புகளை உருவாக்கக் கூடியது என்று கூறினார்

:::::::::::::::::::!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இன்டர்போல் காவல்துறை அமைப்பின் செயலாளர் நாயகம் ரோலன்ட் நோபிள் அவர்கள், சனிக்கிழமை இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தைச் சந்தித்து, மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக விவாதித்தார்.
இந்தச் சந்திப்பின்போது, கொல்லப்பட்ட மற்றும் உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதிகளின் பெயர் மற்றும் கைரேகை உள்ளிட்ட விவரங்கள், டிஎன்ஏ விவரங்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவை இன்டர்போலிடம் உள்ள தகவல் மையத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது குறித்தும், 186 உறுப்பு நாடுளுக்கும் அவற்றைப் பகிர்ந்து கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மும்பை தாக்குதல்களில் ஈடுபட்ட 10 பயங்கரவாதிகள் தொடர்பாக கறுப்பு மற்றும் நீல நோட்டீஸ்களை அனுப்பவும் இன்டர்போல் முன்வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. கறுப்பு நோட்டீஸ் என்பது இறந்தவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்கும், நீல நோட்டீஸ் கூடுதல் விவரங்களைத் திரட்டுவதற்கும் பயன்படுத்தப்படக்கூடியது. அதன் மூலம், இன்டர்போல் உறுப்பு நாடுகளிடம் இந்தியா தனக்குத் தேவையான தகவல்களை முறைப்படி கோர முடியும்.
தேசிய அளவில் உள்ள இன்டர்போல் மையத்தில் உள்ள தகவல்களைத் தருவதுடன், உலக அளவில் உள்ள தகவல் மையத்தின் தகவல்களையும் இந்தியாவுடன் பரிமாறிக் கொள்ள இன்டர்போல் முன்வந்துள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, கடலோரப் பாதுகாப்பைப் பலப்படுத்த இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் .கே. ஏண்டனி சனிக்கிழமை பாதுகாப்புத்துறைச் செயலர் விஜய் சிங், கடலோரக் காவல்படை இயக்குநர் வைஸ் அட்மிரல் அனில் சோப்ரா உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அந்தக் கூட்டத்தில், கடலோரப் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களுக்கு அமைச்சர் ஏண்டனி ஒப்புதல் அளித்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவின் 7500 கிலோ மீட்டர் நீளமுள்ள கடலோரத்தில் ஏற்கெனவே 13 கடலோரக் காவல் நிலையங்கள் உள்ளன. அத்துடன், கூடுதலாக 9 நிலையங்களை அமைப்பதற்கும் அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தகவல்களை இடைமறித்துக் கேட்கும் நவீன சாதனங்கள் பொருத்தப்பட்ட படகுகள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை மிக விரைவில் கொள்முதல் செய்வதற்கு அமைச்சர் ஒப்புதல் அளித்திருக்கிறார். அதேபோல், உலகச் சந்தையிலிருந்து கப்பல்களை வாடகைக்கு எடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
!!!!!!!!!!!!!!!!!
இந்தியாவின் கோவா மாநிலத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கேளிக்கை கொண்டாட்டங்களை சுற்றுலா கடற்கரையில் கொண்டாட அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
கடந்த மாதம் மும்பையில் நடைபெற்ற தாக்குதல்களை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநில முதல்வர் திகாம்பர் காமத் கூறுகையில், டிசம்பர் 23 ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி வரையில் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு தாங்கள் அனுமதி கொடுக்க போவதில்லை என கூறியுள்ளார்.
அதே சமயம் இதர கொண்டாட்டங்கள், பாரம்பரிய கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த முடிவானாது சுற்றுலாவை பெரிதும் நம்பியிருக்கும் கோவா பெரிய அடி என செய்தியாளர்கள் கூறுகின்றனர
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

world
பிரிட்டன் மற்றும் வேறு பல நாடுகளின் படைகள் இந்த வருடம் தாண்டியும் இராக்கில் தங்கியிருப்பதை அனுமதிக்கும் ஒரு புதிய மசோதாவை இராக்கிய நாடாளுமன்றம் நிராகரித்துள்ளது.
வெளிநாட்டுப் படைகள் இராக்கில் தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்ககிய .நா.மன்ற தீர்மானம் அடுத்த இரண்டுவாரங்களுக்குள் காலாவதியாகவுள்ள நிலையில், படைகள் அதற்கும் மேல் தங்கியிருப்பதற்கு ஒரு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்குவது இந்த மசோதாவின் நோக்கம்.
இந்த வரைவுச் சட்டத்தின் உருவாக்கம் மற்றும் வடிவம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்கப் படையினர் தொடர்ந்து தங்கியிருப்பது தொடர்பில் ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்டிருந்த ஒப்பந்தம்போல இந்த மசோதாவில் மாற்றம் வர வேண்டுமென அவர்கள் விரும்புகின்றனர்.
தற்போது மாற்றங்கள் செய்வதற்காக இந்த மசோதா மீண்டும் இராக்கிய அமைச்சரவைக்கு திருப்பியனுப்பப்படும்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
உலக பொருளாதார நெருக்கடியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானில், வரவுசெலவுகளை அதிகரிக்கும் விதமாக மற்றுமொரு செலவு திட்டத்திற்கு ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இந்த இரண்டாவது திட்டத்தின் மதிப்பு சுமார் 54 பில்லியன் டாலர்களாகும். இந்த திட்டமானது வீட்டு உரிமையாளர்களுக்கு வரிச்சலுகை, சிறு தொழில் செய்பர்வர்களுக்கு கடன், வேலையிழந்தோருக்கு உதவிதொகை போன்றவற்றை வழங்கும்.
ஜப்பான் அரசாங்கம் தன்னுடைய திட்டங்களை அமல்படுத்த சுமார் 100 பில்லியன் டாலர்களை தயார் செய்ய வேண்டும். வளர்ந்த நாடுகளில் இரண்டாவது அதிக கடன் சுமை கொண்ட நாடு ஜப்பானாகும்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
உலக பொருளாதார நெருக்கடியில் நிலவி வரும் நிலையில், தாய்வானிற்கு உதவுவதற்கு சீனா முன் வந்துள்ளது.
இது தொடர்பாக ஷாங்காயில் நடைபெற்ற வர்த்தக கூட்டம் ஒன்றில் உரையாற்றிய மூத்த சீன அதிகாரியான ஜீயாகிங்லின், தாய்வான் உதவி கோரினால், நிலைமை மோசமானால் சீனா தன்னால் முடிந்ததை செய்யும் என்று கூறினார்.
இவ்வாறு சீனா கூறுவது, இருநாடுகளுக்கும் இடையில் மேம்பட்டு வரும் உறவினை சுட்டி காட்டுகின்றது என செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால் அதே சமயம், சீனாவை விட செல்வம் மிகுந்த நாடான தாய்வானிடம் இத்தனை காலமும் முதலீட்டை பெற்று வந்த சீனா, இப்போது தான் வலுவான நிலையில் இருப்பதை காட்டும் ஒன்றாக இது இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
உலக பொருளாதார நெருக்கடியில் தன்னுடைய அண்டைய நாடுகளை விட சீனா குறைவாகவே பாதிக்கப்பட்டுள்ளத
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil