ஈழப் பிரச்சனை தொடர்பாக சென்னையில் தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் இளைஞர்கள் இலங்கை தமிழர் பிரச்சனையில் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக இன்று சனிக்கிழமை சென்னையில் உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்கள்.


சிங்கள் அரசுக்கு ஆயுதம் தராதே,

இலங்கையுடனான பொருளாதார, அரசியல், விளையாட்டு உறவுகளை துண்டித்துக்கொள்,

தமிழக மக்களின் விடுதலைப்போராட்டத்தை அங்கீகரி

உட்பட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வலியுறுத்தி இந்த உண்ணாவிரதத்தில் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தவிருக்கிறார்கள்.

பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், சீமான் உட்பட பலர் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்கள்.

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil