மலேசியாவில் அவலம் பெயிண்டர் வேலைக்கு சென்று புல் வெட்டும் மதுரை இளைஞர்

கோலாலம்பூர்: மலேசியாவில் பெயிண்டர் வேலைக்கு செல்ல ஏஜென்டிடம் பல ஆயிரம் ரூபாய் தந்த மதுரை இளைஞர் அங்கு புல் வெட்டும் தோட்டக்காரராக வேலை வேலைபார்த்து வருகிறார்.
சவூதி அரேபியா, குவைத் போன்ற அரபு நாடுகளை தொடர்ந்து இந்திய இளைஞர்கள் குறிப்பாக தமிழர்கள் வேலைக்காக செல்லும் நாடு மலேசியா.

பாஸ்போர்ட், விசா, விமான டிக்கெட் கிடைத்ததும் மகிழ்ச்சியில் வெளிநாடு புறப்படும் இளைஞர்களுக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூர் போய் இறங்கியதும்தான் உண்மை நிலவரம் தெரியும். மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம், மூன்று வேளை சாப்பாடு, தங்க வசதியான வீடு என்று ஏஜென்டு சொன்னதை கேட்டு ஆச்சரியத்தில் வாய் பிளந்த இளைஞர்கள் படும்பாட்டை வார்த்தைகளால் சொல்லமுடியாது. ஏஜென்டு சொன்ன வேலை ஒன்று, ஆனால், மலேசியாவில் உள்ள எஜமான் செய்யச் சொல்லும் வேலையோ வேறு. மாடு மேய்த்தல், வீட்டு வேலை, கூலி வேலை, தோட்ட வேலை, சமையல் வேலை என்று சம்பந்தம் இல்லாத வேலையைதான் பெரும்பாலான தமிழ் இளைஞர்கள் செய்கிறார்கள்.
அப்படியே எதிர்பார்த்த வேலை கிடைத்தாலும், சொன்ன சம்பளம் கிடைக்காது. தங்குவதற்கு தகர கொட்டகை, அதிலும் ஒரே கொட்டகையில் 50க்கும் அதிகமானோர் இருப்பார்கள். எதிர்த்து கேட்டால் முழுசாக ஊர் திரும்ப முடியாது.
ஏனென்றால் மலேசியாவில் இறங்கியதுமே அவர்களது பாஸ்போர்ட் பறிக்கப்பட்டு இருக்கும். இது போதாது என்று பலர் சுற்றுலா பயணிகளுக்கான விசாவில் ஏஜென்டுகளால் அனுப்பப்பட்டிருப்பார்கள். மீறி நியாயம் கேட்டால் அடி, உதை சித்ரவதைதான்.
இப்படி சிக்கி தவிக்கும் மதுரை இளைஞர் தர்மா கூறுகையில்,ÔÔபெயின்டர் வேலைக்காக பல ஆயிரம் கொடுத்து மலேசியா வந்தேன். ஆனால், இங்கு தோட்டத்தில் புல் வெட்டும் வேலையை செய்யச் சொன்னார்கள். வேறு வழியில்லாததால் புல் வெட்டுகிறேன். 2 ஆண்டு கான்ட்டிராக்ட் முடிந்ததும்தான் ஊர் திரும்ப முடியும்ÕÕ என்றார்.
ஏஜென்டுகளால் ஏமாற்றப்படும் இளைஞர்களிடம் இருந்து கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகத்துக்கு மாதத்துக்கு 8 புகார்களாவது வருகிறது. இது குறித்து இந்திய தூதரக அதிகாரி ஒருவர் கூறுகையில்,ÔÔஇந்தியாவில் உள்ள ஏஜென்டுகளும், மலேசியாவில் உள்ள அவர்களது கூட்டாளிகளும் சேர்ந்து அப்பாவி இந்திய இளைஞர்களை ஏமாற்றுகிறார்கள். இதை தடுக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளோம். வேலைக்கான ஒப்பந்தத்தில் இந்திய தூதரகமும் கையெழுத்திடும் திட்டம் அமலில் உள்ளது. அப்படி செய்தால்தான் அந்த ஒப்பந்தம் செல்லும். ஆனால், பல இந்திய இளைஞர்கள் சுற்றுலா பயணிக்கான விசாவில் வருவதால் இந்த திட்டம் முழு வெற்றி பெறவில்லை என்றார்.

Source & Thanks : dinakaran

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil