‘செய்திகள்’

சமச்சீர் கல்வித் திட்டம் எதிரான மனு தள்ளுபடி

தமிழக அரசின் சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழ்நாட்டில் மத்திய வாரியம், மாநில வாரியம் வழிகள் மூலமான கல்வி மட்டுமன்றி, மெட்ரிகுலேஷன், ஏங்லோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் ஆகிய முறைகள் மூலமாகவும் கல்வி கற்பிக்கப்படுகிறது.

மேலும்…

இலங்கையில் பாண் விலை அதிகரிப்பு

இலங்கையில் பாண் எனப்படும் 450 கிராம் எடையுடைய பிரெட்டின் விலை வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் மூன்று ரூபாய்களால் உயர்த்தப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாதது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என் கே ஜெயவர்தன பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

மேலும்…

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்திய ஈரானியர்கள் நால்வர் கைது

இலங்கைக்குள் 16 கிலோகிராம் போதைப்பொருளை கொண்டுவர முயற்சித்த 4 ஈரான் நாட்டு பிரஜைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இவர்களில் இருவர் எட்டு கிலோ 85 கிராம் நிறையுடைய போதைப்பொருளை கடந்த புதன்கிழமை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொருவர் விமான நிலையத்திலிருந்து தப்பிக்க முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட போது மெலும் எட்டு கிலோகிராம் போதைப்பொருளுடன் மற்றொரு ஈரானியர் கோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அவர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர்கள் விமான நிலையத்தின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள ஆசனத்தில் ஒடுவதற்கு தயாரான நிலையில் அமர்ந்திருந்தனர்.

சுங்க திணைக்கள அதிகாரிகளை கண்டவுடன் ஓட முயற்சித்த போது பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் சுங்க திணைக்களத்தினர் அவர்களை பிடித்துள்ளனர்.

ஏற்கனவே சுங்க திணைக்கள அதிகாரிகள் இவர்களின் பைகளை சோதனையிட முற்பட்ட போது மறுத்துள்ளனர்.

இந்த மூன்று சந்தேக நபர்களிடம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இது தொடர்பில் ஆராய்வதற்கு இன்டர்போலின் உதவியையும் நாடியுள்ளதாக எஸ்.பி.ஜெயகொடி தெரிவித்தார்.

போதைப்பொருளை பரிமாற்றும் முகவர்களை கைது செய்வதற்காக மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மேற்கொண்டு வருகின்றது

சரத் பொன்சேகாவின் கட்சியினர் மீது கண்ணீர் புகைப்பிரயோகம்

அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கும் வகையில் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டமைப்பு, காலி நகரத்தில் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆரப்;பாட்டத்தின் போது கண்ணீர் புகை பிரயோகிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை இன்று பிற்பகல் அளவில் இடம்பெற்றது.

இதனையடுத்து காலியில் இன்று மாலை வரை அமைதியற்ற சூழ்நிலை நிலவியது

ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் ஊர்வலமாக காலி பேருந்து தரிப்பிடத்தை நோக்கி வந்து கொண்டிருந்த போது காவல்துறையினர் வீதித்தடையை ஏற்படுத்தியிருந்தனர்.

அந்த வீதித்தடைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் அகற்றிய வண்ணம் முன்செல்ல எத்தனித்த போது காவல்துறையினர் கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய இலங்கை மீனவர்கள் சந்திக்கிறார்கள்

இந்திய இலங்கை மீனவர்கள் அடுத்த சில நாட்களில் சந்தித்து பேசவுள்ளனர். இருதரப்பினரும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

நிரபராதி மீனவர்கள் கூட்டமைப்பின் சார்பில் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்படுகிறது எனவும் இக்கூட்டம் ராமநாதபுரம் உட்பட தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் நடைபெறவுள்ளது எனவும் தமிழ் நாடு விசைப் படகு மீனவர்கள் நலச்சங்கத்தின் பொதுச் செயலர் போஸ் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக 25 மீனவப் பிரதிநிதிகள் இம்மாதம் 16 ஆம் தேதி ராமேஸ்வரம் வந்தடையவுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

இருதரப்பு மீனவர்களுக்கும் இந்திய இலங்கை கடற்பரப்பில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது எனவும் போஸ் தெரிவிக்கிறார்.

தங்களுக்குள் கூட்டம் நடைபெற்ற பிறகு அதன் அடிப்படையில் இருநாட்டு அரசுகளை பேசவைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.

விடுதலைப் புலிகள் இலங்கையில் தோற்கடிக்கப்பட்ட பிறகு கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவது முற்றிலும் நின்றுள்ளது எனவும் சொல்கிறார் போஸ்.

இந்திய இலங்கை மீனவர்களிடையே ஒரு புரிந்துணர்வு ஏற்பட வேண்டும் என்பதை மையமாக வைத்தே இது போன்ற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என இலங்கையின் தேசிய மீனவர்கள் ஒத்துழைப்பு இயக்கத்தின் சமாதான இணைப்பாளன் ஆண்டனி ஜேசுதாசன் எமது வவுனியாச் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

இருதரப்பு மீனவர்களும் பரஸ்பரம் பேசிக் கொள்ளும் போது பலவிதமான பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தான் நம்புவதாகவும் ஜேசுதான் கூறியுள்ளா

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ராசாவை பதவியில் இருந்து நீக்குங்கள்: பாஜக

புது தில்லி, ஜூன் 3: ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை பாஜக வலியுறுத்தியுள்ளது.

மேலும்…

அரச டிவிகளில் ஜனாதிபதிக்கே முக்கியத்துவம் : எல்லைகளற்ற ஊடக அமைப்பு குற்றச்சாட்டு

தேர்தல் களத்தில் 21பேர் போட்டியிடுகின்ற போதிலும் அரச தொலைக்காட்சிகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது
.

அரச தொலைக்காட்சிகளில் கடந்த 18ஆம் 19ஆம் திகதி நிகழ்ச்சி நிரல்களில் 98.5 வீதம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தொடர்பாகவும் அவரது ஆதரவாளர்கள் தொடர்பான நிகழ்ச்சிகளுமே ஒளிபரப்பப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளதுடன் சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தலை நடத்துவதற்கு அனைத்துத் தரப்பினருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தின் முதல் பெண் டிஜிபியாக லத்திகா நியமனம்

தமிழக போலீஸ் டிஜிபியாக இருந்தவர் கே.பி.ஜெயின். இவர் வரும் 13ம் தேதி முதல் விடுமுறையில் செல்கிறார். ஏப்ரல் மாதத்துடன் ஓய்வு பெறுகிறார். அதனால் புதிய டிஜிபியாக போலீஸ் பயிற்சிக் கல்லூரி தலைவராக உள்ள லத்திகா சரண் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு நேற்று இரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும்…

சரணடைய வந்த விடுதலைப் புலி தலைவர்களை சுட்டுக் கொல்லுமாறு கோத்தபாயவே உத்தரவிட்டார் : சரத் பொன்சேகா தகவல்

இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே, சரணடைய வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் மூன்று முக்கிய தலைவர்களையும் சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டதாக ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மேலும்…

எந்த நேரமும் சட்டமன்ற தேர்தல் வரலாம்-சாமி

சென்னை: தமிழக சட்டமன்றத்துக்கு எந்த நேரமும் தேர்தல் வரலாம் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறினார்.

மேலும்…