‘செய்திகள்’

மாவீரர்நாளில் விசேட விருந்து தருவதாக கூறி தமிழ் அரசியல் கைதிகள் மீது தாக்குதல்!

மாவீரர்நாளில் விசேட விருந்து தருவதாக கூறி தமிழ் அரசியல் கைதிகள் மீது தாக்குதல்!

Published on November 27, 2011-2:19 pm    ·

அநுராதபுரச் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீது இன்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாவீரர்நாளாகிய இன்று அநுராதபுரச் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு உணவு வழங்கமறுத்த காவலாளிகள் அவர்கள் மீது இன்று பிற்பகல் 4.30 மணியளவில் கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.

‘இன்று உங்களுக்கு விசேட நாள் வாருங்கள் உங்களுக்கு விசேடமாக விருந்தளிக்கின்றோம்’எனக் கூட்டிச்சென்ற சிறைச்சாலை அதிகாரி குணரட்ன தலைமையிலான குழுவினர் அவர்களது உடைகளை களைந்து எரித்ததுடன் அவர்கள் மீது இரும்பு கம்பிகளால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

இத்தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். அரிகரன் (யாழ்ப்பாணம்),  சசி (வவுனியா), நிக்சன் (திருகோணமலை), தயா (வட்டக்கச்சி)  ஆகியோர் மிகமோசமான தாக்குதலுக்கு ஆளாகி காயமடைந்துள்ளனர்.  இந்த தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சிங்கள காடையர்களும் தமிழ் அரசியல் கைதிகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் அங்குள்ள கைதிகள் தெரிவித்துள்ளனர்.
ஊனமுற்ற தமிழ் கைதிகளின் ஊன்றுகோல்களை பறித்தெடுத்து அதனால் தாக்கிவிட்டு அதனை எடுத்துச் சென்றுள்ளதாகவும் கைதிகள் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சிந்தாமணி பிள்ளையாரிலும் படையினருக்கு சந்தேகம்

மட்டக்களப்பு சிந்தாமணி பிள்ளையாரிலும் படையினருக்கு சந்தேகம்!

Published on November 27, 2011-12:07 pm    ·

மட்டக்களப்பு எல்லைவீதியில் அமைந்துள்ள சிந்தாமணி பிள்ளையாரிலும் சிறிலங்கா இராணுவத்திற்கு சந்தேகம் ஏற்பட்டதால் இன்று அந்த ஆலயத்தில் நடைபெற இருந்த சிந்தாமணி பிள்ளையார் ஆலய வரலாறு என்ற நூல்வெளியீட்டு விழாவுக்கு இராணுவத்தினர் தடை செய்துள்ளனர்.

நூல் வெளியீட்டுவிழா என்ற பெயரில் மாவீரர் பூசையையும் வழிபாட்டையும் நடத்திவிடுவார்கள் என அச்சம் கொண்ட இராணுவத்தினர் நூல் வெளியீட்டு விழாவுக்கு தடைசெய்ததுடன் இன்று ஆலயத்திற்கு யாரும் செல்லக்கூடாது என்றும் ஆலய கதவை திறந்து மணி அடிக்காமல் தீபத்தை காட்டிவிட்டு உடனடியாக பூட்டி விட்டு செல்ல வேண்டும் என்றும் இராணுவத்தினர் உத்தரவிட்டுள்ளனர்.  இந்த ஆலயத்தை சுற்றியும், ஆலயத்திற்கு முன்னால் உள்ள மாநகர சனசமூகநிலைய கட்டிடத்திலும் இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொள்ள இருந்தார்.   இன்று விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நாள் என்பதைச் சுட்டிக்காட்டி பாதுகாப்புத் தரப்பு இந்த நிகழ்ச்சியை இன்று நடத்தக் கூடாதென இராணுவத்தினர் ஏற்பாட்டாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர் என யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஆரையம்பதி புதுக்குடியிருப்பில் ‘கதிரவன்’ சஞ்சிகை வெளியீட்டு விழா நடைபெற இருந்தது. இதனையும் இராணுவத்தினர் தடைசெய்துள்ளனர். இதற்கும் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்து கொள்ள இருந்தார்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் சில இந்து ஆலயங்களில் இன்று வழமையான கண்டாமணி அடித்தல் மற்றும் நித்திய பூசை நடைபெறுவதற்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் தடைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஆலய நிர்வாகத்தினர் தன்னிடம் புகார் தெரிவித்ததாகக் கூறிய யோகேஸ்வரன் இந்த விடயம் தொடர்பாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். கண்டாடமணி அடிக்காமல் பூசையை செய்யுமாறு படையினர் உத்தரவிட்டுள்ளனர்.

புலிகளின் பிரசாரத்தை முறியடிக்க காலஅவகாசம் தேவை- நாடாளுமன்றத்தில் மகிந்த!

புலிகளின் பிரசாரத்தை முறியடிக்க காலஅவகாசம் தேவை- நாடாளுமன்றத்தில் மகிந்த!

Published on November 22, 2011-9:00 am ·

விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பினூடாக பரப்பப்படும் கருத்துக்கள் தவறானவை என்பதை உணர்வதற்கு சர்வதேச சமூகத்திற்கு கால அவகாசம் வழங்க வேண்டியுள்ளதாகவும் ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்கின்ற சகல நாடுகளும் உண்மை நிலைமையை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் சிறிலங்கா அதிபர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

2012ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து உரையாற்றிய போதே மகிந்த ராசபக்ச இதனை தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பின் மூலம் பரப்பப்பட்டிருந்த திரிபுபடுத்தப்பட்ட கருத்துக்கள் பிழையானவை என்ற முடிவுக்கு உலகம் வருவதற்கு நாம் கால அவகாசம் வழங்க வேண்டிய தேவை இருக்கின்றது. உண்மையான நிலைமைகளை படிப்படியாக அறிந்து கொண்டதன் பின்னர் ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்கின்ற அனைத்து நாடுகளும் எம்மை ஏற்றுக்கொள்கின்றன என மகிந்த ராசபக்ச தெரிவித்தார்.

வெளிநாட்டு சக்திகளின் சதிகளின் மூலம் எமது உள்நாட்டுப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பலவந்தப்படுத்தப்பட்ட தீர்வுகள் விதிக்கப்பட முடியாது என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கபடுத்த வேண்டும்- பிரிட்டன் கோரிக்கை

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கபடுத்த வேண்டும்- பிரிட்டன் கோரிக்கை!

Published on November 22, 2011-9:38 am ·

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் அலிஸ்டர் பேர்ட் கோரிக்கை விடுத்துள்ளார்
இந்த அறிக்கையை பலரும் எதிர்பார்த்துள்ளதால் சிறீலங்கா அரசாங்கம் அதனை பகிரங்கப்படுத்துவதன் மூலம் போரின் பின்னரான நிலைமைகளை சர்வதேச சமூகத்துக்கு தெரியப்படுத்தி இந்த வரலாற்று கட்டத்தை தன்னகப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறீலங்கா அரசு இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்து என்ன செய்வுள்ளது என்பதையும் அறிய பிரித்தானிய ஆவலாக உள்ளது என்றும் பிரித்தானிய வெளிவிவகார துணை அமைச்சர் தெரிவித்துள்ளார

வடபகுதி கடற்பரை பிரதேசம் மலேசியாவுக்கு விற்பனை!

வடபகுதி கடற்பரை பிரதேசம் மலேசியாவுக்கு விற்பனை!

Published on November 22, 2011-9:20 am ·

காங்கேசன்துறையிலிருந்து காரைநகர் வரையான கரையோரப் பகுதிகளை மலேசிய அரசாங்கத்தின் காற்றாடி மூலமான மின்சாரம் பெறும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தை சிறிலங்கா அரசாங்கம் மலேசிய அரசாங்கத்துடன் செய்துள்ளதால் அப்பகுதியில் மக்கள் மீள்குடியேறவதற்கோ அல்லது அப்பகுதியின் உள்கட்டுமான அபிவிருத்திகளை செய்வதற்கோ இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர்.

இந்த பகுதியில் ஏதாவது அபிவிருத்தி பணிகள் மற்றும் மிள்குடியேற்றம் செய்வதாக இருந்தால் மலேசிய அரசாங்கத்தின் அனுமதியை பெற வேண்டும் என இப்பகுதி இராணுவத்தினர் கூறி வருகின்றனர்.

மலேசிய அரசாங்கத்தின் இத்திட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கோ, பொது அமைப்புக்களுக்கோ அறிவிக்கப்படாத நிலையிலேயே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதையல் தோண்டிய இராணுவத்தினர் கையும் மெய்யுமாக பிடிபட்டனர்

புதையல் தோண்டிய இராணுவத்தினர் கையும் மெய்யுமாக பிடிபட்டனர்!

Published on November 22, 2011-9:15 am ·

பொத்துவில் பிரதேச காட்டுப் பகுதியில் புதையல் தோண்டிய நான்கு இராணுவத்தினர் உட்பட பத்துப் பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்;. புதையலில் இருந்து எடுக்கப்பட்ட மாணிக்கக் கற்கள் பளிங்குக்கற்கள் போன்றவற்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பொத்துவில் பாணமை பிரதான வீதியில் இருந்து 8 கிலோமீற்றர் தூரம் கொண்ட காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிக் கொண்டிருந்தவர்களை சுற்றிவளைத்தபோது மூன்று பேர் கைது செய்யப்பட்டதுடன் ஏனையவர்கள் தப்பியோடினர்.

இச்சம்பவத்தில் தப்பிச் சென்றவர்களிடம் புதையலிலிருந்து எடுக்கப்பட்ட மாணிக்கக் கற்கள் பளிங்குக் கற்கள் இருந்ததாகவும், இதில் நான்கு பேர் இராணுவத்தினர் எனவும் கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் போது தெரியவந்தது.

இதனையடுத்து தலைமறைவாகிய 4 இராணுவத்தினரையும் ஏனைய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து புதையலிலிருந்து எடுக்கப்பட்ட மாணிக்கக்கற்கள் பளிங்குக்கற்கள் போன்றவற்றை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பண்டாரவளை மற்றும் பிறமாவட்டங்களை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் உயரதிகாரிகளாக சிங்களவர்கள் நியமனம்- மொழி புரியாது மக்கள் அவதி!

யாழ்ப்பாணத்தில் உயரதிகாரிகளாக சிங்களவர்கள் நியமனம்- மொழி புரியாது மக்கள் அவதி!

Published on November 22, 2011-9:12 am ·

யாழ்.மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்கள், சபைகளுக்கு சிங்கள அதிகாரிகளை நியமிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை, சமுர்த்தி அதிகாரசபை, மின்சாரசபை, பிரதேசசெயலகங்கள் உட்பட முக்கிய பொறுப்புகளுக்கு சிங்களவர்களே நியமிக்கப்பட்டு வருகின்றனர். வடமாகாண ஆளுநரின் அலுவலகத்தில் சிற்றூழியர் தொடக்கம் அதிகாரிகள் வரை அனைவரும் சிங்களவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் சபைகளின் மாவட்ட தலைமை பதவிகளுக்கு சிங்களவர்கள் நியமிக்கப்படுவதால் தீர்மானத்தை எடுப்பவர்களாக அவர்களே உள்ளனர். பொதுமக்கள் தமது பிரச்சினைகளை அவர்களிடம் எடுத்துக்கூற முடியாத மொழிப்பிரச்சினை காணப்படுகிறது என யாழ். மாவட்ட பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

சிங்கள அதிகாரிகளுக்கு தமிழ், ஆங்கில மொழிகள் அறவே தெரியாது. வடபகுதி பொதுமக்களுக்கு சிங்களம் தெரியாது. இதனால் பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

பொதுமக்கள் தமிழில் எழுதும் கடிதங்கள், மற்றும் படிவங்களை அறிந்து கொள்ள முடியாதவர்களாக சிங்கள அதிகாரிகள் காணப்படுகின்றனர். இதனால் சிங்களத்தில் எழுதப்படும் கடிதங்களுக்கே பதிலளிக்கும் நிலையும் காணப்படுகிறது. இந்நிலை தொடர்ந்தால் யாழ்ப்பாணம் உட்பட வடபகுதியில் சிங்களத்தில் தான் அனைவரும் அலுவலகங்களுக்கு கடிதம் எழுத வேண்டிய நிலை ஏற்படும் என பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் யாழ். அலுவலக உத்தியோகத்தர்களாக 7 சிங்களவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வீதி அபிவிருத்தி வேலைகளிலும் சிங்கள தொழிலாளர்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இலங்கை மின்சார சபையின் யாழ். பிராந்தியப் பிரதிப் பொது முகாமையாளராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு உதவிப் பிரதேச செயலர்களாகச் சிங்களவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் மன்னார் மாவட்டத்தின் அரச அதிபராகவும் சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்

பசை உள்ள இடத்திற்கு தாவ உள்ள பச்சோந்திகள்

பசை உள்ள இடத்திற்கு தாவ உள்ள பச்சோந்திகள்

Published on November 21, 2011-8:56 am ·

வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசு பக்கம் தாவ உள்ளனர் என கொழும்பில் உள்ள அரசு சார்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அரச தரப்பு முக்கியஸ்தர்களுக்கும், கட்சி தாவ உள்ளோர்களுக்குமிடையே இடம்பெற்ற பேச்சுகள் சுமுகமாகவும் சாதகமாகவும் முடிவடைந்துள்ளன என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கொழும்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே கட்சி தாவும் பட்டியலில் முதன்மை வகிக்கின்றார் என்று கூறப்படுகின்றது.
அடுத்தபடியாக ஐ.தே.க. சார்பில் மாத்தறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அரசுடன் இணையவுள்ளார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஊடகவியலாளர்களுக்கு சவப்பெட்டிகள் தயார் நிலையில்- கஜேந்திரன் பணியில் மேர்வின்!

ஊடகவியலாளர்களுக்கு சவப்பெட்டிகள் தயார் நிலையில்- கஜேந்திரன் பணியில் மேர்வின்!

Published on November 21, 2011-8:59 am ·

அரசாங்கத்திற்கு அவதூறு ஏற்படும் வகையிலான தகவல்களை வெளியிடுகின்ற ஊடகவியலாளர்கள் தமக்காக சவப்பெட்டி ஒன்றை தயார்படுத்திக் கொள்ளுமாறு சிறிலங்கா மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா, ஊடகவியலாளர்களை எச்சரித்துள்ளார்.
கட்டுநாயக்க பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேர்வின் சில்வா, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தற்போது சில ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் திருப்தி அளிப்பதாக அமையவில்லை எனவும் நாட்டின் முக்கிய நபர்களுக்கு அவதூறு ஏற்படும் வகையில் பொய்யான செய்திகளை அவர்கள் வெளியிடுவதாகவும் மேர்வின் சில்வா குற்றஞ்சாட்டினார்.
டொலர்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே அவர்கள் இவ்வாறு அரசாங்கத்திற்கு எதிராக தகவல்களை வெளியிடுவதாகவும், தமக்கு எதிராகவும் சிலர் இவ்வாறான சேறு பூசல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவற்றுக்கு தாம் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை எனவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சுக்கு பெருந்தொகை நிதி ஒதுக்கீடு செய்யும் வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில்

பாதுகாப்பு அமைச்சுக்கு பெருந்தொகை நிதி ஒதுக்கீடு செய்யும் வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில்!

Published on November 21, 2011-8:50 am ·

2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில் சிறிலங்கா அதிபர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிப்பார்.பிற்பகல் 1.30 மணியளவில் வரவு செலவு திட்டத்தை சபையில் சமர்ப்பித்து விசேட உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றபின்னர் அவரால் சமர்ப்பிக்கப்படும் 6 ஆவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.
பல்வேறு தரப்பினர்களிடமிருந்தும் கருத்துகள் பெறப்பட்டு இந்த முறை தயாரிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டம் நாளை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் விவாதத்திற்கு விடப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. வரவு செலவுத்திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு எதிர்வரும் 30 ஆம் திகதி புதன்கிழமைவரை நடைபெறும். அத்துடன், அன்றையதினம் மாலை 3 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் டிசம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகும் வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம் டிசம்பர் 21 ஆம் திகதிவரை நடைபெறும். அன்று இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இக்காலப்பகுதிக்குள் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வெளிநாடு செல்லக்கூடாது என அரசு அறிவித்துள்ளது
வழமைபோல் இந்தத் தடவையும் பாதுகாப்பு அமைச்சுக்கே அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது