‘செய்திகள்’

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (30.12.08) செய்திகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியில் கடந்த 20 ஆம் நாள் சிறிலங்கா படையினரின் முன்னரண் பகுதிகள் மீதான தாக்குதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் டாங்கியை பயன்படுத்தியுள்ளனர் என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இரணைமடு பகுதியில் கடந்த 20 ஆம் நாள் விடுதலைப் புலிகள் நடத்திய வலிந்த தாக்குதலின் போது ரி-55 ரக டாங்கியை பயன்படுத்தியுள்ளனர்.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (29.12.08) செய்திகள்

முல்லைத்தீவு நோக்கிய சிறிலங்கா படையினரின் முன்நகர்வுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குதலின் போது கைப்பற்றப்பட்ட படையினரின் 17 உடலங்களும் இன்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பில் இன்று திங்கட்கிழமை காலை 10:00 மணியளவில் இக்கையளிப்பு நிகழ்வு நடைபெற்றது.
விடுதலைப் புலிகளின் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகப் பணிப்பாளர் மு.பாவரசனினால் செஞ்சிலுவைச் சங்கத்தின் வன்னிக்கான வதிவிடப் பிரதிநிதி யூலியனிடம் படையினரின் 17 உடலங்களும் கையளிக்கப்பட்டன.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (27.12.08) செய்திகள்

 கிளிநொச்சியைப் பிடித்தே தீருவதென்று சிங்களப் படைத்தலைமை விடாப்பிடியாக முயற்சிகளை மேற்கொள்கின்றது. கிளிநொச்சியைத் தற்காத்தேயாக வேண்டுமென்று புலிகள் இயக்கம் வீராவேசமாக போராடுகின்றது. இதனால் கிளிநொச்சி நகரமே போர்க்களமாக காட்சி தருகின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (26.12.08) செய்திகள்

மடு தேவாலயம் எதிர்வரும் மாதம் திறக்கப்பட உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கிறிஸ்தவ விவகாரங்களுக்கான அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ கூறுகையில், தேவாலய மறுசீரமைப்புப் பணிகள் படையினரின் உதவியுடன் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (25.12.08) செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அளம்பில் ஊடாக சிறிலங்கா படை மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளதுடன் படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
அளம்பில் பகுதி ஊடாக நேற்று முன்நாள் (23.12.08) செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்கா படையினர் முன்நகர்வினை மேற்கொண்டனர்.
இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதல் நடத்தி படையினரின் முன்நகர்வினை முறியடித்தனர்.

மேலும்…

அளம்பிலில் சிறிலங்கா படையினரின் முன்நகர்வு முறியடிப்பு:< - படையப்பொருட்கள் மீட்பு

 
 

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அளம்பில் ஊடாக சிறிலங்கா படை மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளதுடன் படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (24.12.08) செய்திகள்

கிளாலி பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (16.12.08) இடம்பெற்ற மோதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகளால் பிடிக்கப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்தவர் தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையினை அரசாங்கம் மேற்கொள்ளும் என சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
விடுதலைப் புலிகள் வசம் உள்ளவர் படைத்தரப்பைச் சேர்ந்தவர். அவரை விடுவிப்பது தொடர்பான முயற்சிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (23.12.08) செய்திகள்

 இலங்கையின் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் படை நடவடிக்கைகளை நிறுத்த முடியாது என்று சிறிலங்காவின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள்:
வடபோர்முனையில் அனைத்து நிலைகளிலும் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு வருகின்றனர். இறுதித் தோல்வியை நெருங்கி வரும் நிலையில் போர் நிறுத்தத்துக்கு அவர்கள் முயற்சிக்கின்றனர்.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (22.12.08) செய்திகள்

 இரணைமடு குளம் வடக்கு, கிழக்கு மற்றும் முல்லைத்தீவு கடற்கரை பகுதிகளிலுள்ள விடுதலைபுலிகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீது ஸ்ரீ லங்கா விமானப்படையினர் இன்று காலை வான் தாக்குதல் நடத்தியுள்ளனர்

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (21.12.08) செய்திகள்

 கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியில் சிறிலங்கா படையினர் வல்வளைத்த 2 கிலோ மீற்றர் முன்னரண் பகுதி தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலின் மூலம் மீட்கப்பட்டுள்ளது. இதில் 60 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 150 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும்…