‘செய்திகள்’

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (11.01.09) செய்திகள்

 மன்னார் உப்புக்குளம் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிமுதல் காலை 10.30 மணிவரை இராணுவத்தினரும் பொலிஸாரும் இனைந்து சுற்றிவளைப்பு தேடுதலினை மேற்கொண்டனர்.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (10.01.09) செய்திகள்

 கண்டியாழ்ப்பாணம் 9 வீதி இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. 300மைல் நீளமான இந்தப் பாதையில் ஒரு சிறிய தூரமே புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (07.01.09) செய்திகள்

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

 கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கிரமவுக்கு எதிராக குற்றப் பிரேரரணையைக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கிழக்கு மாகாணசபையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (06.01.09) செய்திகள்

 முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கற்சிலைமடு பகுதியில் இருந்து கொருடமடு நோக்கிய சிறிலங்கா படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 5 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 11-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (05.01.09) செய்திகள்

வவுனியா செக்கட்டிபிளவு பகுதியில் இனம்தெரியாத ஆயுததாரிகளினால் குடும்பஸ்த்தர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இனம் தெரியாத நபர்களினால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் 48 அகவையுடைய கோதண்டர் ஜெயபால குலசிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (04.01.09) செய்திகள்

 கிளிநொச்சி கைப்பற்றப்பட்டமையை அடுத்து தென்னிலங்கையில் இடம்பெறும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் எதிரொலியாக பொதுமக்களின் பாதுகாப்பதற்காக இந்த மாதத்தில் நடைபெறவுள்ள கண்டி தலதாமாளிகை மற்றும் களனி பெரஹராக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிளிநொச்சி கைப்பற்றப்பட்டமையை அடுத்து தென்னிலங்கையில் தற்கொலைத் தாக்குதல்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்ற நிலையில் பொதுமக்களின் பாதிப்பை தவிர்க்கும் பொருட்டு பலர் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (03.01.09) செய்திகள்

 பயங்கரவாதத்திற்கு எதிராக வடக்கை நோக்கி முன்னெடுக்கப்பட்ட படைநடவடிக்கையின் போது பெருமளவான படையினர் பலியாகியும், காயமடைந்தும் உள்ளனர். பலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதுடன் ஊனமுற்றும் உள்ளனர் என்று இராணுவத் தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார்.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (01.01.09) செய்திகள்

 சிறிலங்கா அரசாங்கம் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொண்டு வரும் படையெடுப்புக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் போர்க் கருவிகள் உள்ளிட்ட இராணுவ உதவிகளை பாகிஸ்தானும் இந்தப் போருக்குத் தேவையான ஏனைய உதவிகளை இந்தியாவும் வழங்கி வருகின்றன என கொழும்பிலிருந்து வெளிவரும் மோர்ணிங் லீடர்தெரிவித்துள்ளது.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ்ஒலி வானொலியின் உள்ளம் நிறைந்த ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புநிறைந்த நேயர் நெஞ்சங்களுக்கும் வர்த்தகப் பெருமக்களுக்கும் ‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ்ஒலி வானொலியின் உள்ளம் நிறைந்த ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (31.12.08) செய்திகள்

சிறிலங்கா விமானப் படையின் குண்டு வீச்சு விமானங்கள் இன்று காலை 8.00 மணியளவில் பரந்தன்முல்லைத்தீவு வீதியில் முருகானந்தா பாடசாலை அருகில் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புகள் மீது தாக்குதலை நடத்தியுள்ளன. இதில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒரு குடும்பம் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர் என்று தருமபுரம் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும்…