‘செய்திகள்’

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (04.03.09) செய்திகள்

தென்னிலங்கையின் புத்தளகதிர்காமம் பாதையில் உள்ள கோணகனார பிரதேசத்தில் இன்று காலை 9.00 மணியளவில் ஆயுததாரிகள் சிலரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சிவில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (03.03.09) செய்திகள்

லாகூர் கடாபி மைதானத்தில் இடம்பெற்று வரும் பாகிஸ்தானுடனான இரண்டாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்வதற்காக வாகனத்தில் உட்பிரவேசித்துக் கொண்டிருந்த போது இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கை அணி வீரர்கள் ஆறுபேர் காயமடைந்துள்ளனர் .

மேலும்…

ஞாயிற்றுக்கிழமை சிறிலங்காப் படையினரின் எறிகணை வீச்சில் காயமடைந்தவர்களின் விபரங்கள்

மாத்தளன், புதுக்குடியிருப்புப்பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்விடங்கள் மீது நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சிறீலங்காப் படையினர் நடாத்திய எறிகணைத் தாக்குதல்களில் 37 பெது மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 53 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்துள்ளவர்களில் கிடைக்கப்பெற்றவர்களின் விபரம்

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (02.03.09) செய்திகள்

தமது வாழ்விடங்களில் அமைதியும், பாதுகாப்பும் வேண்டும் என்பதே தமிழர்களின் விருப்பம் . அதனை விடுத்து விட்டு பாரம்பரியமாக வாழ்ந்து வரும் இடங்களில் இருந்து அவர்களை வெறியேற்ற முயற்சிப்பது வேதனையானது. தீர்வு ஒன்றை காண்பதற்காககாசாபகுதியில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதனை ஐக்கிய நாடுகள் சபை ஆதரிக்குமா? என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் கேள்வி எழுப்பியுள்ளார் .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (01.03.09) செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறிய கொமாண்டோ அணிகள் சிறிலங்கா படையினரின் நிலைகளுக்குள் ஊடுருவி தாக்குதலை நடத்தியுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும்லக்பிமவார ஏடு தெரிவித்துள்ளது.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (28.02.09) செய்திகள்

இலங்கையில் தற்போது தோன்றியுள்ள மனித அவலங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்படவுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

மேலும்…

முல்லைத்தீவிலிருந்து செவ்வாய் இரவு திருமலைக்கு அழைத்து வரப்பட்டோர் விபரம்

1.என். தவமணி, பொக்கணை, (வயது 47),
2.எஸ். குலசிங்கம் (வயது 20),
3.கே. ஜெகதீஸ், பள்ளித்துறை, யாழ்ப்பாணம்,
4. கே. இளந்திரையன், முள்ளியடி, பளை (வயது 46),
5. பெயர்தரப்படவில்லை (எக்ஸ்ரே பிரிவில்),
6. துஷ்யந்தன், முல்லைத்தீவு (வயது 9),
7. சிவமலர், முள்ளியவளை (வயது 63),
8.நாகேஸ்வரன், முல்லைத்தீவு (வயது 47),
9.கே. மணிமாலா, முறிகண்டி (வயது 43),
10. ரி. சரஸ்வதி, பருத்தித்துறை (வயது 63),

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (27.02.09) செய்திகள்

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள தெமட்டகொட குற்றப்புலனாய்வுத்துறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளஉதயன்மற்றும்சுடொரொளிபத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் நடேசபிள்ளை வித்தியாதரன் தலையிலும் காலிலும் கடுமையாக தாக்கப்பட்டு காயமடைந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (26.02.09) செய்திகள்

சுடர் ஒளி பிரதம ஆசிரியர் என்.வித்தியாதரன் வெள்ளை வேனில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகளால் இன்று காலை கடத்தப்பட்டுள்ளதாக அப்பத்திரிகையின் நிர்வாகப் பணிப்பாளர் தெரிவித்தார் . இக்கடத்தல் சம்பவம்குறித்து கல்கிஸ்ஸை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (25.02.09) செய்திகள்

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் நேற்று இரகசியப் பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

அண்மையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பிலேயே மேற்படி விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்…