‘செய்திகள்’

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மகிந்த திடீர் அழைப்பு: நோக்கம் குறித்து அரசியல் ஆய்வாளர்கள் ஐயம்

தற்போதைய நிலைமைகள் குறித்து பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். எந்த விதவிதமான முன் அறிவிப்பு எதுவும் இன்றி கூட்டமைப்பின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்புக் கடிதங்கள் நேரடியாக வழங்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் வியாழக்கிழமை (26.03.09) மாலை 6:30 நிமிடத்தில் சந்திப்பு நடைபெறும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு பிரதி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (23.03.09) செய்திகள்

இலங்கையின் வட பகுதியில் போரை நிறுத்தி மக்களின் அவல நிலையை நீக்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை உடனடியாகத் தலையிடவேண்டும் என்று இந்திய மனித உரிமை அமைப்புகள் .நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் வலியுறுத்தியுள்ளன .
மோதல் பகுதிகளிலுள்ள மக்களின் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்த தமது கவலையை அந்த அமைப்புகள் ஆணையாளரிடம் தெரிவித்திருக்கின்றன.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (22.03.09) செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பெண்கள் விடுதியில் இன்று காலை முல்லைத்தீவைச் சேர்ந்த மாணவியொருவர் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த ரவீந்திரன் சுதர்சனா ( வயது 23 ) என்ற கலைப் பீட மூன்றாம் ஆண்டு மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (20.03.09) செய்திகள்

வன்னியில் சிறீலங்கா படையினரின் தொடர் தாக்குதல் மற்றும் உயிர் அச்சுறுத்தல் ஆயுதப்பிரயோகம் என்பனவற்றுக்கு அஞ்சி வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ள பலரின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொதுவாகக் குடும்பப் பெண்கள் இப்பாதிப்புக்கு அதிகம் உள்ளாகியுள்ளதாகவும், அவர்களில் பலர் படையிரைக்கண்டால் அஞ்சுவது ஓடி ஒளிவது போன்ற அறிகுறிகளை தாம் அவதானித்துள்ளதாகவும் , அடிக்கொரு தடைவை அடையாள அட்டை மற்றும் ஆவணங்களை தேடிப்பார்த்து வைத்துக் கொள்ளல் என்பன இவர்களின் அறிகுறிகளில் சில எனவும் அவர் குறிப்பட்டுள்ளார்.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (19.03.09) செய்திகள்

வன்னிப்பெரு நிலப்பரப்பில்மக்கள் பாதுகாப்பு வலயபகுதிகளில் சிறிலங்கா படையினரின் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் நேற்றும் 67 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 97 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன், மேலும் ஒரு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர் படுகாயமடைந்துள்ளார்.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (18.03.09) செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் சிறிலங்கா இராணுவம் வெற்றி பெறுவதற்கு இந்திய அரசாங்கமே மிகப்பெரிய உதவி செய்தது என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சபையின் முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் உதவிகள் இல்லையேல் விடுதலைப் புலிகளை போரில் வெற்றி கொண்டிருக்க முடியாது எனவும் சபையில் எடுத்துக்கூறிய அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, சிறிலங்கா மக்கள் இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளனர் என்றும் வலியுறுத்தி கூறினார்.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (17.03.09) செய்திகள்

வன்னியில் மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகள் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை இராணுவத்தினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 73 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 127 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மேலும்…

வன்னியிலிருந்து ICRC கப்பல் மூலம் (14.03.2009)திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் மக்களி்ன் பெயர் விபரங்கள்

 

தொகுதி 010

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (16.03.09) செய்திகள்

வன்னியில் மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகள் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை இராணுவத்தினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 73 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 127 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய பகுதிகள் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை இராணுவத்தினர் ஆட்லறி எறிகணை, பல்குழல் பீரங்கி , மற்றும் மோட்டார் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (15.03.09) செய்திகள்

முல்லைத்தீவில் இயங்கி வந்த ஒரேயொரு அரச மருத்துவ மனையான புதுமாத்தளன் வைத்ததியசாலையும் நேற்று சனிக்கிழமையுடன் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கான மருந்துகள் சேலைன் மற்றும் பன்டேஜ் உட்பட அவசிய பாவனைப் பொருட்கள் இல்லாத காரணத்தினாலேயே மூடப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரி வரதராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும்…