‘செய்திகள்’

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (24.04.09) செய்திகள்

பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் படகுகளை அனுப்பி,பாதுகாப்பு வலய பகுதியில் சிக்கியுள்ள மக்களை மீட்பது தொடர்பில் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குவூச்சனர் தெரிவித்த யோசனையை இலங்கை அரசாங்கம் நேற்று நிராகரித்துள்ளது .

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (23.04.09) செய்திகள்

மனிதாபிமானச் சேவைகளுக்கும் அரசியல் தீர்வு ஒன்று காண்பதற்குமான மிகப்பெரிய தேவை ஒன்று அங்கு (இலங்கையில்) இருக்கின்றது. இனப் பிரச்சனைக்குப் பொருத்தமானசரியான தீர்வு காணப்பட வேண்டும் எனில்அதற்கான கலந்துரையாடல்களில் போரிடுபவர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என அமெரிக்காவின் வெளிவிவகார செயலாளர் ஹிலறி கிளின்ரன் தெரிவித்துள்ளார் .
இது தொடர்பில் நேற்று புதன்கிழமை அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (22.04.09) செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு வலயப் பகுதியில் சிறிலங்கா படையின் நேற்று முன்நாள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்து வவுனியா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டவர்களில் 21 பேர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளனர். இவர்களின் உடலங்கள் வவுனியா மருத்துவமனை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமையும் நேற்று செவ்வாய்கிழமையும் படுகாயமடைந்த 316 பேர் தரைவழியாக வவுனியா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர்.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (21.04.09) செய்திகள்

வன்னியில் இரத்த ஆறு ஒன்று ஓடுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு உலகத்துக்கு ஒரு சில மணி நேரம் மட்டுமே உள்ளது என மனித உரிமைகள் காப்பகம் (Human Rights Watch) அவசரக் கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (20.04.09) செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் இன்று மேற்கொண்டு வரும் பாரிய படை நடவடிக்கையின் போது பெரும் மனிதப் பேரவலம் நிகழ்ந்துள்ளது. இதில் 988-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1,215-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை பகுதியை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட்கிழமை அதிகாலை தன்னிடம் உள்ள அனைத்து நாசகார ஆயுதங்களின் சூட்டாதரவுடன் பாரிய படை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (19.04.09) செய்திகள்

உடனடிப்போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பிரான்சில் மனிதவுரிமைச்சதுக்கம் பகுதியில் 14வது நாளாக தொடரும் மக்கள் பேரெழுச்சியும், 12வது நாளாக தொடரும் நான்கு இளஞர்களின் உண்ணா நிலைப்போராட்டமும் பெரும் மாற்றங்களுக்கு வளிவகுத்துள்ளது.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (18.04.09) செய்திகள்

.நாவினால் விடுக்கப்பட்ட தற்காலிக போர் நிறுத்த அவகாம் அதிகரிப்பது தொடர்பிலான கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ளது என இலங்கை பாதுகாப்பு செயலளர் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (17.04.09) செய்திகள்

பாதுகாப்பு வலயத்தில் உள்ள புதுமாத்தளன் வைத்தியசாலையில் உள்ள காயமடைந்தவர்கள் மற்றும் கிளினிக் நோயாளர்களை ஏற்றி வருவதற்காக கிறீன் ஓசியன் கப்பல் இன்று காலை புதுமாத்தளன் கடற்கரையைச் சென்றடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (16.04.09) செய்திகள்

சிறிலங்காவின் தென்பகுதி மாவட்டமான மொனறாகலவில் இந்திய வம்சாவழி தமிழர்கள் மீது சிங்களக் கடையர்கள் நடத்திய தாக்குதல்களில் 11 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர்.
இச்சம்பவத்தையடுத்து இப்பகுதியில் வாழ்ந்த இந்திய வம்சாவழித் தமிழர்கள் அச்சம் காரணமாக தமது வீடுகளை விட்டு வெளியேறி காடுகளுக்குள் சென்று மறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (15.04.09) செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு என சிறிலங்கா அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மீது முழு அளவிலான பாரிய தாக்குதல் நடவடிக்கையினை சிறிலங்கா படையினர் இன்று அதிகாலையிலேயே தொடங்கியிருக்கின்றனர்.
ஏற்கனவே இரண்டு நாட்கள் போர் நிறுத்தம் என அறிவித்துவிட்டு அக்காலப் பகுதியில் மக்கள் வதிவிடங்களை நோக்கி பாரியளவில் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியிருந்த சிறிலங்கா படையினர், இன்று புதன்கிழமை அதிகாலை முதல் தரை வழியாக பாரிய தாக்குதலினை மேற்கொண்டுள்ளனர்.

மேலும்…