‘செய்திகள்’

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (05.05.09) செய்திகள்

மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி சதீஸ்குமார் தினுஷிக்கா (வயது 8 ) கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் இன்று அதிகாலை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்கள்.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (04.05.09) செய்திகள்

முல்லைத்தீவு கடற்பரப்பில் இருந்து முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள மக்கள் வாழும் இடங்களை நோக்கி எறிகணைத் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையினரின் றொக்கட் ஆட்டிலறிகளைப் பொருத்திய இரண்டு நீரூந்து விசைப்படகுகள் இன்று அதிகாலை கடற்புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (03.05.09) செய்திகள்

அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு பிரதேசத்தில் நேற்று மாலை விசேட அதிரடிப் படையினரால் மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கையொன்றின் போது 4 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு கூறுகின்றது.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (02.05.09) செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 28ம் திகதி பாடசாலைக்குச் சென்ற நிலையில் காணாமல் போன மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி சத்தீஸ்குமார் தினுஷிகா ( வயது 8 ) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (01.05.09) செய்திகள்

இராணுவ செய்திகளை வழங்கும் இராணுவத்தினரின் உத்தியோகபூர்வ இணையத்தளமான army.lk வலையமைப்பிலிருந்து தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார் . முரண்பாட்டாளர்களால் துண்டிக்கப்பட்ட இந்த இணையத்தளம் விரைவில் மீள்பதிவு செய்யப்படுமெனவும் அவர் தெரிவித்தார்

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (30.04.09) செய்திகள்

போர் நிறுத்தம் ஒன்றை ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை, போர் நடைபெறும் பகுதிக்கு உதவிப் பணியாளர்களை அனுமதிக்கப்போவதும் இல்லைஎனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கும் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, “விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடனோ உடலமாகவோ பிடிபடும் வரையில் தாக்குதல்களை நிறுத்தப்போவதில்லைஎனவும் உறுதியாகக் கூறியிருக்கின்றார்.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (28.04.09) செய்திகள்

இலங்கை அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள அகதி முகாமக்ளில் தங்க வைக்கப்பட்டுள்ள வன்னிச் பொதுமக்கள் பாரதூரமான மனிதப் பேரவலத்தை எதிர்நோக்கியிருப்பதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (26.04.09) செய்திகள்

சிறிலங்கா பாரிய மனித அழிவொன்றை வன்னியில் ஏற்படுத்தத் தொடங்கியுள்ள நிலையில் மக்களை வீதிக்கு இறங்கி போராடுமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (25.04.09) செய்திகள்

அம்பாறை மாவட்டம் உகந்தை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் கடற்கண்காணிப்பு நிலையம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் கதுவீ, அதிவேக விசைப்படகு, வெளியிணைப்பு இயந்திரம் அதனோடு சிறிய ரக விசைப்படகு ஆகியன முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (25.04.09) செய்திகள்

.நாவின் மனிதா பிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளதாக .எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும்…