‘இலங்கை செய்திகள்’

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறப்போகிறோம்- சிவாஜிலிங்கம்!

Published on November 1, 2011-2:37 pm    ·   No Comments

அமெரிக்காவிற்கு தங்களை அழைத்து செல்லாததால் தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து வெளியேறப்போவதாகவும், இது தொடர்பாக ரெலோ இயக்கம் எதிர்வரும் 06ஆம் திகதி திருமலையில் கூடி ஆராய்ந்து சில முக்கிய முடிவுகளை எடுக்கப்போவதாக சிறிலங்கா மிரர் என்ற இணையத்தளத்திற்கு சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈ.பி. ஆர்.எல். எவ் (சுரேஷ் அணி) டெலோ ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால நடவடிக்கைகள் தங்களைப் புறந்தள்ளும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்த சிவாஜிலிங்கம், இலங்கை அரசாங்கத்துடன் நடைபெற்று வரும் 12 கட்டப் பேச்சுவார்த்தைகளின்போது தங்களுக்கும் இடமளிக்காமை, அமெரிக்க விஜயத்தில் தமது கட்சிப் பிரதிநிதிகளைச் சோத்துக் கொள்ளாமை தொடர்பில் ஆறாம் திகதி நடைபெறும் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாகவும் கூறினார். தாங்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவது தொடர்பாக ஆராய்ந்து வருகிறோம் என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பாக ரெலோ இயக்கத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவருடன் தினக்கதிர் தொடர்பு கொண்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து வெளியேறப்போவதாக சிவாஜிலிங்கம் கூறியிருக்கிறாரே என கேட்ட போது சிவாஜிலிங்கத்திற்கு பைத்தியம் என ஒரு வார்த்தையில் பதிலளித்தார்.
தொடர்புடைய செய்தியை பார்வையிட இந்த இணைப்பை அழுத்துங்கள்…   http://www.thinakkathir.com/?p=16908,     http://www.thinakkathir.com/?p=15247,     http://www.thinakkathir.com/?p=20752

தந்தை செல்வாவின் துண்டிக்கப்பட்ட தலை ஒட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது!

Published on November 1, 2011-12:28 pm

தமிழரசுக்கட்சி ஸ்தாபகர் தந்தை செல்வாவின் தூபியில் துண்டிக்கப்பட்ட தலை ஒட்டப்பட்டு சிலை அதே இடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

நகரசபையின் தலைவர் க.செல்வாராசாவும் உபதலைவர் சே.ஸ்ரீஸ்கந்தராசாவும் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

பொலிஸ் மற்றும் இராணுவ உயரதிகாரிகளின் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்வில் இராணுவத்தின் 222 படையணியின் பிரிகேடியர், திருகோணமலை பிரதிப் பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் பங்குபற்றினர்.

படையினர் அப்பிரதேசத்தில் நிறைந்து காணப்பட்டனர். நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மஹிந்தவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த சம்பவத்தின் பின்னணியில் அனைத்துலக மன்னிப்புச் சபை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக வழக்குத் தொடர்ந்த சம்பவத்தின் பின்னணியில் அனைத்துலக மன்னிப்புச்சபை செயற்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும்…

அமெரிக்காவில் இலங்கையின் கொலைக்களம் திரையிடப்பட்டது! இலங்கைக்கு தொடர் நெருக்கடி

சிறிலங்கா அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வரும் ‘இலங்கையின் கொலைக்களம்’ சனல்-4 ஆவணப்படம் அமெரிக்காவின் Massachusetts மாநில ஆட்சிப்பீடத்தில் (State House) திரையிடப்பட்டது.

மேலும்…

தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளா? விடுதலை வீரர்களா? : நெதர்லாந்து நீதிமன்றம் தீர்மானிக்கும்

ஒப்பரேசன் கொனெக் என்ற பெயரில் நெதர்லாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 5 இலங்கை தமிழர்கள் மீதான விசாரணை இன்று நெதர்லாந்து ஹேக் நகரில் உள்ள போர்க்குற்ற நீதிமன்றம் ஒன்றில் நடைபெறுகிறது.

மேலும்…

போர் குற்றம் பற்றி ஜெ. பேசக்கூடாது; தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு எல்லாம் கிடையாது-கோத்தபய

கொழும்பு: ஈழத் தமிழர்களின் நலனில் அக்கறையிருந்தால் அவர்களின் மறுவாழ்வு பற்றி மட்டுமே பேச வேண்டும்.

மேலும்…

இந்தியாவை உளவு பார்த்த சீனக் கப்பல் இலங்கை துறைமுகத்தில் தஞ்சம்- இந்தியா மெளனம்

கொழும்பு: எது நடக்கக் கூடாது என்று அத்தனை பேரும் பயந்தார்களோ அது நடக்க ஆரம்பித்து விட்டது.

மேலும்…

ஜனாதிபதி மஹிந்த அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார் : சிங்கள ஊடகம் தகவல்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும்…

30 ஆண்டுகளாக அமலில் இருந்த அவசர நிலையை செப். 8 முதல் நீக்குகிறது இலங்கை

கொழும்பு: கடந்த 30 வருடங்களாக அவசர நிலைச் சட்டத்தின் பிடியில் இருந்து வந்த இலங்கை, செப்டம்பர் 8ம் தேதி முதல் அந்த சட்டத்திலிருந்து வெளி வருகிறது.

மேலும்…

பொன்சேகாவும், நானும் எதிரிகளானதற்கு இந்தியாவின் ‘ரா’ அமைப்புதான் காரணம்- சொல்கிறார் ராஜபக்சே

கொழும்பு: செய்வதை எல்லாம் செய்து விட்டு, இப்போது ஆப்பில் சிக்கிய குரங்கின் நிலையில் உள்ள இலங்கை சர்வாதிகாரி ராஜபக்சே, தனக்கும், சரத் பொன்சேகாவுக்கும் இடையே பூசல் ஏற்பட, மோதல் ஏற்பட, எதிரிகளாக மாறியதற்கு இந்திய உளவு அமைப்பான ரா தான் காரணம்.

மேலும்…