‘இலங்கை செய்திகள்’

சுவிஸ் சூரிச் சிவன் கோவிலில் மாவீரர் நினைவாலயம்!

சுவிஸ் சூரிச் சிவன் கோவிலில் மாவீரர் நினைவாலயம்!

Published on November 19, 2011-6:33 pm    ·   1 Comment

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் உயிர் நீத்த அனைத்து விடுதலை வீரர்களுக்கும், பொதுமக்களுக்குமாக நினைவாலயம் ஒன்று சுவிஸ், சூரிச் அருள்மிகு சிவன் கோவிலில் சைவத்தமிழ் சங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மாவீரர் நினைவாலயம் எதிர்வரும் 25ஆம் திகதி திறக்கப்பட உள்ளதுடன் மாவீரர் தினமான 27ஆம் திகதி மாவீரர்களுக்கு அகவணக்கம் செய்து பூசை வழிபாடு செய்ய விரும்புபவர்கள் அன்றைய தினம் வருகை தந்து அகவணக்கம் செய்து பூசை வழிபாடுகளிலும் ஈடுபடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாயகத்தில் உள்ள மாவீரர் குடும்பங்கள் மாவீரர் தினத்தில் தமது உறவுகளுக்கு ஆலயங்களுக்கு சென்று பூசை செய்வதுடன் வீடுகளில் தமது பிள்ளைகளின் படங்களுக்கு விளக்கேற்றி அகவணக்கம் செய்ய கூடிய சூழ்நிலையிலேயே உள்ளனர். மாவீரர் இல்லங்கள் அனைத்தும் இடிக்கப்பட்ட நிலையில் அவர்களால் ஆலய வழிபாடுகளை மட்டுமே செய்ய முடிவதுடன் வீடுகளில் விளக்கேற்றி அகவணக்கம் செய்கின்றனர்.
அதேபோல புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்களும் போட்டிகள் மோதல்களுக்குள் சிக்காது ஆலயங்களுக்கு சென்று பூசை வழிபாடுகளை செய்து வீடுகளில் விளக்கேற்றி அகவணக்கம் செலுத்துவதுதான் ஆத்மசாந்தியையும் மனஅமைதியையும் தரும்.
புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்களுக்கு முன்மாதிரியாக சுவிஸ் சூரிச் சிவன்கோவிலில் மாவீரர் நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. போட்டிகள் மோதல்கள், வியாபார நோக்கங்களுக்குள் சிக்காது சூரிச் சிவன் கோவில் போன்ற ஆலயங்களில் அமைக்கப்படும் நினைவாலயங்களுக்கு சென்று அகவணக்கம் செலுத்துவதே மாவீரர்களின் ஆத்மசாந்தியாக இருக்கும்.
சூரிச் சிவன் கோவில் நிர்வாகம் செய்திருக்கும் இந்த உயரிய பணியை புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள அனைத்து சைவ ஆலயங்களும் செய்ய வேண்டும். இதுவே மாவீரர்களுக்கும் மக்களுக்கும் அமைதியை தேடித்தரும்.
புலம்பெயர் தமிழர்கள் தமிழர் விழுமியங்களையும், பண்பாட்டையும், தெய்வவழிபாட்டையும் கைவிடாது தமிழுக்காவும், சைவசமயத்திற்காகவும் அரும்பாடு பட்டு உழைத்து வரும் நாம் எமது விடுதலைக்காக உழைத்து உயிர்நீத்த எமது உடன்பிறப்புகளுக்கு நினைவாலயம் அமைத்து அவர்களை மறவாது தெய்வங்களுக்கு இணையாக ஆலயத்திற்குள்ளேயே வழிபடவேண்டும் என்பதற்காக சுவிஸ் சூரிச் சிவன் கோவிலில் நினைவாலயம் அமைக்கப்படுவதாக அந்த ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த நினைவாலயம் எதிர்வரும் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 7மணிக்கு திறந்து வைக்கப்பட உள்ளது.
மாலை 6மணிக்கு அபிஷேகம், மூலவர் பூசை என்பனவற்றைத்தொடர்ந்து 7மணிக்கு நினைவாலயம் திறக்கப்பட்டு புனிதர்களுக்கான தீப வழிபாடு இடம்பெறும்.
புனித மாவீரர்நாளில் அனைத்து பொதுமக்களும் வருகை தந்து இப்புனிதர்களுக்கு அகவணக்கம் செலுத்துவதோடு ஆத்மசாந்தி பூசைகளிலும் கலந்து கொள்ளுமாறு சைவத்தமிழ் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சர்ச்சைக்குரிய லண்டன் முத்துமாரி அம்மன் கோவில் தேருக்கு தீ?

சர்ச்சைக்குரிய லண்டன் முத்துமாரி அம்மன் கோவில் தேருக்கு தீ?

Published on November 19, 2011-10:19 am    ·   No Comments

லண்டன் முத்துமாரி அம்மன் கோவிலின் சித்திரத் தோர் கடந்த 16 ஆம் திகதி இரவு 11 மணிக்குத் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
சிவயோகம் அறக்கட்டளை என்ற பெயரில் சீவரத்தினம் என்பவர் இக்கோவிலை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இரவு 11.00 மணியளவில் நான்கு பேர் கொண்ட குழு ஒன்று கோவிலுக்கு தீவைத்ததாக தெரிவித்துள்ளனர். காவல்துறையினருக்கும், தீயணைக்கும் படையினருக்கும் தகவல் கொடுத்ததையடுத்து தீஅணைக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் ஒரு இலட்சம் பவுண் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இக்கோவில் அமைந்திருக்கும் கட்டிடத்தின் குத்தகைக் காலம் மார்ச் 2011 உடன் முடிவடைந்துவிட்டது. நீதிமன்றம் கட்டிடத்தில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என  தீர்ப்பளித்துள்ளது. ஆனால் அதிலிருந்து வெளியேறாத நிலையில் இத்தீவைப்பு சம்பவம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சிவயோகம் அறக்கட்டளை நிதியத்தை சேர்ந்த சீவரத்தினத்திற்கு விடுதலைப்புலிகள்  2005ஆம் ஆண்டு ஜெயதேவன் நடத்திய கோவிலை பறித்தெடுத்து கொடுத்திருந்தனர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் அக் குற்றத்திற்காக நீதிமன்றம் 40ஆயிரம் பவுண் அபராதம் சிவயோகம் அறக்கட்டளை நிதியத்திற்கு விதித்ததுடன் அக்கோவிலை உடனடியாக ஜெயதேவனிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
வன்னியில் வைத்து ஜெயதேவனை விடுதலைப்புலிகள் சிறைவைத்துக்கொண்டு அவரிடமிருந்து கோவிலை எழுதி வாங்கியிருந்தனர். இது குற்றம் என தீர்ப்பளித்த பிரித்தானிய நீதிமன்றம் ஆலயத்தை ஜெயதேவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் 40ஆயிரம் பவுண் நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இத்தகைய முறைகேடான செயல்களில் சிவயோகம் அறக்கட்டளை நிதியத்தை சேர்ந்தவர்கள் செயற்பட்டார்கள் என பிரித்தானிய நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருந்தார்கள். இந்நிலையில் மார்ச் 2011 உடன் கட்டிடத்தை விட்டு வெளியேற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும் அதிலிருந்து வெளியேறாமல் இருந்த நிலையில் தங்களுடைய ஒரு இலட்சம் பவுண் பெறுமதியான தேரை யாரோ எரித்து விட்டார்கள் என தெரிவித்துள்ளார்கள்.

எக்சல் மண்டப மாவீரர்நாள் நிகழ்ச்சி நடக்காமல் தடுப்பதில் வெற்றிகண்ட குழு?

எக்சல் மண்டப மாவீரர்நாள் நிகழ்ச்சி நடக்காமல் தடுப்பதில் வெற்றிகண்ட குழு?

Published on November 19, 2011-7:29 pm    ·   No Comments

லண்டனில் விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம் ஏற்பாடு செய்த மாவீரர் நாள் நிகழ்ச்சியை  தடுக்கும் முயற்சியில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு (நெடியவன் குழு) வெற்றிபெற்றுள்ளது.
மாவீரர் நாளை யார் நடத்துவது என்ற போட்டியுடன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவுக்கும் விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகத்தினருக்கும் இடையிலான மோதல்கள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளன

விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம் முற்பதிவு செய்திருந்த லண்டன் எக்சல் மண்டபத்தில் அவர்கள் மாவீரர் நாளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தலைமைச்செயலகத்தினரை தாம் முறியடித்து விட்டதாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலத்தில் விடுதலைப்புலிகள் மாவீரர் தினத்தைக் கொண்டாட பயன்படுத்திய எக்சல் மண்டபத்தை இம்முறை தாம் பயன்படுத்த விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம்  திட்டமிட்டிருந்தது.  இதற்காக அக்குழுவினர் முன்பதிவையும் செய்திருந்தனர்.

மாவீரர் தினத்தை கொண்டாடுவதற்கு விடுதலைப்புலிகளின் இரு பிரிவினரும் இம்முறை போட்டி போட்டுக்கொண்டிருந்தனர். எக்சல் மண்டபத்தை பெறுவதன் மூலம் தலைமைச்செயலகக் குழு தனது செல்வாக்கை உயர்த்தலாம் என்றும் மாவீரர் தினக் கொண்டாட்டத்திற்கு
கூடுதல் சனத்தை திரட்டலாம் என்றும் எண்ணியிருந்தது.

இதனால் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சிறிய இடங்களில் மாவீரர் தினக் கொண்டாட்டத்தை வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானது.

இதை முறியடிக்கும் முயற்சியில் பல சூழ்ச்சியிலும் சதியிலும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஈடுபட்டிருந்தது. இந்த சதியில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வெற்றிபெற்று விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது

எக்சல் மண்டபத்தின் நிர்வாகம் அம்மண்டபத்தை தலைமைச்செயலகக் குழுவிற்கு வழங்குவதை ரத்துச்செய்ததுடன் அதற்காக வைக்கப்பட்ட 50,000 பவுண் முற்பணத்தையும் திருப்பிக் கொடுத்து விட்டது.

எனினும் விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம் வேறு ஒரு இடத்திலாவது மாவீரர்நாள் நிகழ்ச்சியை நடத்துவதற்கு முயற்சி செய்து வருகிறது.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரும் மாவீரர் தினத்தைக் கொண்டாடுவதற்காக ஹரோவில் பதிவு செய்த இடமும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மாவீரர் தினத்தை கொண்டாடுவதற்காக லண்டனில் ஐந்து இடங்களை பதிவு செய்திருந்தது. அவற்றில் சில முன்பதிவுகளும் ரத்துச்செய்யபட்டுள்ளன.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்பவர்கள் போர் நடந்த காலத்தில் விடுதலைப்புலிகளுக்கென மக்களிடம் பணம் சேகரித்துக்கொண்டிருந்தவர்கள் என்றும் அவர்கள்தான் பணபலம் கொண்டவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம் என்பவர்கள் வன்னியில் இறுதிவரை போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகள். வன்னியில் போரில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்திருக்கும் போராளிகளைக்கொண்டதே தலைமைச்செயலக குழுவினர்.

இவர்களில் உண்மையான விடுதலைப்புலிகள் யார் என்பதை தீர்மானிக்க முடியாத நிலையில் புலம்பெயர் தமிழர்கள் குழப்பி போய் உள்ளனர்.
ஞானச்செல்வன், லண்டன்

ஒபாமா, அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா இடையிலான நெருக்கமான உறவு: அரசியலுக்கு அப்பாற்பட்டது?

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவுஸ்திரேலியாவிற்கு
விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையிலான இராணுவ
உறவுகளைப் பலப்படுத்தலே இதற்கான நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விஜயத்தின் போது இரு நாடுகளுக்கிடையில் இராணுவ ரீதியான பல ஒப்பந்தங்கள்
கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எனினும் இவற்றை விடவும்
அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்ட் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா
இடையிலான நெருக்கம் தொடர்பில் ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது.

அதாவது ஒபாமாவை விமானநிலையத்தில் வைத்து கிலார்ட் வரவேற்றவிதம் அவர்களிடையே
பரிமாறப்பட்ட முத்தம் என்பனவற்றை புகைப்படங்களுடன் ஊடகங்கள் வெளியிடத்
தொடங்கியுள்ளன.

இது மட்டுமன்றி வேறு சில சந்திப்புகளிலும் பெறப்பட்ட
பல்வேறு புகைப்படங்களையும் ஊடகங்கள் வெளியிட்டுவருகின்றன.

இதேவேளை
இவர்களுக்கிடையிலான நெருக்கம் தொடர்பில் கிலார்டிடம் ஒருதடவை வினவிய போது தாம்
இருவரும் 1961 ஆம்ஆண்டு பிறந்ததாகவும் இதுதான் இந்நெருக்கத்திற்கு காரணமாக
இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லிபியாவின்
முன்னாள் ஜனாதிபதி கடாபி, அமெரிக்க முன்னாள் இராஜாங்க செயலாளர் கொண்டலிசா ரைஸ் மீது
ஈர்ப்புக் கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

___

2 மணி நேரத்தில் அடையாள அட்டை:இரட்டைப் பிரஜhவுரிமை உள்ளோருக்கும் வசதி

‘ஒரே நாள்’ சேவையின் கீழ் இரண்டு மணி நேரத்தில் தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை 2012 ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் ஜகத் பீ. விஜேவீர தெரிவித்தார்.தினமும் சுமார் 1000 பேர் ஒரே நாள் சேவையின் கீழ் அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக திணைக்களத்துக்கு வருகை தருகின்றனர். திணைக்களத்தின் ஏனைய கருமங்களுடன் ஒரே நாள் சேவை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது காலதாமதம் ஏற்படுவதுடன் விண்ணப்பதாரிகளும் அசெளகரியங்களுக்குள்ளாகின்றனர்.

இதன் காரணமாக திணைக்கள பிரதேச கட்டடத்துடன் கூடிய புதிய கட்டடத்தினுள் ஒரே நாள் சேவை மையம் அமையவுள்ளது.

விண்ணப்பதாரிகளின் படிவங்களை பெற்றுக்கொள்வது முதல் அடையாள அட்டையை வழங்குவது வரை இலத்திரனியல் முறையில் இலக்கங்கள் வழங்கப்படும். திரையில் தமக்குரிய இலக்கம் தெரிந்தவுடன் விண்ணப்பத்தை ஒப்படைக்கலாம். அதேபோன்று புதிய அடையாள அட்டை 2 மணி நேரத்துள் தயாரானவுடன் விண்ணப்பதாரிக்குரிய இலக்கம் திரையில் தெரிவிக்கப்படும்.

உரிய விண்ணப்பதாரி கால் கடுக்க நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய தேவை ஏற்படமாட்டாது. தினமும் பிற்பகல் 2.00 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் ஆட்பதிவு ஆணையாளர் ஜகத் பீ. விஜேவீர தெரிவித்தார்.

கொழும்பு – 05 கெப்பிட்டிபொல மாவத்தையிலுள்ள ஆட்பதிவு திணைக்களத்தில் நேற்று விசேட செய்தியாளர் மாநாடொன்று நடைபெற்ற போதே ஆணையாளர் ஜகத் பீ. விஜேவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை புலம்பெயர்ந்துள்ள இலங்கையர் தாம் இரட்டைப் பிரஜாவுரிமையை பெற்றிருந்தால் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் ஜகத் பி. விஜேவீர தெரிவித்தார்.

அத்துடன் தமிழகத்திலிருந்து நாடு திரும்பும் தமிழர்களும் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

புலம்பெயர்ந்துள்ள எமது இலங்கையர்கள் இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றிருக்காவிடின் அதற்காக விண்ணப்பித்த பின்னர் பிரஜாவுரிமை கிடைத்த தினத்திலிருந்து அவர் தேசிய அடையாள அட்டையை பெற தகுதியுடையவராக கருதப்படுவார். இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக்கொண்ட ஒருவர் ஆட்பதிவு திணைக்களத்தின் 009411583122, 009411585043 என்ற தொலைபேசி இலக்கத்துடன் அல்லது 0094 11 593634, 009411583190 என்ற பெக்ஸ் இலக்கத்தின் மூலமோ அல்லது (

info@rpd.gov.lk

இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

)  என்ற ஈமெயில் ஊடாகவோ தொடர்புகொண்டு அறிய முடியும் எனவும் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் தெரிவித்தார்.

இதேபோன்று தமிழகத்திலிருந்து நாடு திரும்பும் இலங்கையர் தாங்கள் நாடு திரும்பியதற்கான கப்பல் மூலம் அல்லது விமானம் மூலம் ஆவணத்துடன் தாங்கள் வதியவிருக்கும் பகுதி பிரதேச செயலாளரூடாக தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் தெரிவித்

லண்டனில் நடக்கும் ஒலிம்பிக் போட்டி பாதுகாப்பு பணியில் ஆயிரம் அமெரிக்க படையினர்!

Published on November 14, 2011-9:56 am    ·   No Comments

லண்டனில் 2012 ஆம் ஆண்டு ஜூலை 27 தொடக்கம் ஓகஸ்ட 12 வரை நடைபெறவிருக்கும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப்போட்டியின் பாதுகாப்பு குறித்து எழுப்பப்பட்டுள்ள கவலையை அடுத்து தனது நாட்டின் விளையாட்டு வீரர்களுக்கும் ராஜதந்திரிகளுக்கும் பாதுகாப்பு வழங்கும் பொருட்டு 1000 பாதுகாப்பு படையினரை அங்கு அனுப்ப அnமிர்க்கா திட்டமிட்டுள்ளது என்று கார்டியன் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

அவர்களில் 500 உளவுப்பிரிவினரும் அடங்குவர் என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய அரசாங்கம் 10,000 பாதுகாப்பு படையினரை நிறுத்த முடிவு செய்திருந்தது. அதனை 21,000 ஆதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

ஈ.பி.டி.பி ரஞ்சனின் விபசாரவிடுதி பற்றி டக்ளஸ், யோகேஸ்வரிக்கும் தெரிந்திருந்தது!

Published on November 14, 2011-9:28 am    ·   No Comments

ஈ.பி.டி.பியின் முக்கிய உறுப்பினரான ரஞ்சன் என்பவரால் நீண்டகாலமாக நடத்தப்பட்டு வந்த சுமங்கலி என்ற விபச்சார விடுதி பற்றி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணம் ஆகியோருக்கும் தெரிந்திருந்தது என்றும், அவர்கள் சில தடைவை அங்கு வருகை தந்துள்ளனர் என்றும் அந்த விடுதியில் பணிபுரிந்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
யாழ். நகரில் இயங்கும் தமிழ்தொலைக்காட்சி ஒன்றின் முக்கிய பிரமுகர்கள் சிலரும் அங்கு தங்கி செல்வது வழக்கம் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
யாழ்.சுமங்கலி விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 4 இளம் ஜோடிகள் விடுதி முகாமையாளர் மற்றும் உரிமையாளர் ஈ.பி.டி.பி ரஞ்ன் உட்பட 17 பேர் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர்  24 வயதிற்கும் உட்பட்ட 3இளம் ஜோடிகள் மற்றும் திருமணமான 4 ஜோடிகள் விடுதி பணியாளர்கள் முகாமையாளர் உரிமையாளர் ஆகியவர்களே  கைது செய்யப்பட்டவார்களாவார்கள்
இந்த விபச்சார விடுதியில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் ஈ.பி.டி.பியை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவருகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் 4ஜோடிகளை விடுவிக்குமாறு யாழ்.மாநகரமேயர் யோகேஸ்வரி பொலிஸாரை கேட்டுக்கொண்டதால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சனல் 4வின் அடுத்த வெளியீட்டை அவதானித்து வருகிறோம்- ஸ்ரீலங்கா

 

பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி இலங்கை தொடர்பில் ஒளிபரப்ப தயாராக்கிக் கொண்டிருக்கும் அடுத்த காணொளி தொடர்பில் அவதானித்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சனல் 4வின் புதிய காணொளி தொடர்பான கூடிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என வெளிவிவகார அமைச்சின் பொது மக்கள் தொடர்பு மற்றும் பொதுத் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் சரத் திஸாநாயக்க தெரிவித்தார்.

மேலும்…

தமிழீழ விடுதலைப் போர் மீண்டும் ஒருமுறை வெடிக்கும்!- சென்னையில் காசி ஆனந்தன் முழக்கம்

முள்ளிவாய்க்கால் முடிந்து மெல்ல மெல்ல செய்திகள் மறைந்து அமுக்கப்பட்டு எல்லாம்
தீர்ந்து விட்டதென்று யாரும் நினைக்காதீர்கள். நாங்கள் நெருப்பின் நடுவில்
இருக்கிறோம். ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல விரும்புகின்றேன். தமிழீழ விடுதலைப்போர்
மீண்டும் வெடிக்கும் என்று சென்னையில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்
முழங்கினார்.

சென்னையில் நேற்று முன்தினம், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய சிந்தல்,
பொழிச்சல், நறுக்கு  ஆகிய புதுக்கவிதை வடிவில் எழுதப்பட்ட மூன்று நூல்கள்
வெளியிட்டு நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு ஆவேசமாக
தெரிவித்தார்.

மேலும்…

வெளிநாடு சென்ற கூட்டமைப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட வேண்டும் – குணதாஸ அமரசேகர

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று சூழ்ச்சிகளை மேற்கொண்டுவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய பாராளுமன்ற

உறுப்புரிமை பறிக்கப்பட வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் யாப்பின் 6ம் அத்தியாயத்திற்கு அமைய நாட்டை பிளவுபடுத்தவோ சர்வதேச சூழ்ச்சிகளுக்கு துணைபோகவோ தேசத்துரோக செயல்களில் ஈடுபடவோம் மாட்டோம் என சத்தியப்பிரமாணம் செய்துவிட்டு தற்போது அவற்றை மீறி அமெரிக்கா, கனடா சென்று செயற்படுவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

மேலும்…