‘இலங்கை செய்திகள்’

மீள்குடியேற்றம் என இமெல்டா பிரசாரம்- இராணுவத்தினர் மக்களை அடித்து விரட்டினர்

Published on November 29, 2011-4:55 pm   ·   No Comments

கோப்பாய் பிரதேச செயலகப்பிரிவில் உள்ள வளலாய் மற்றும்
இடைக்காடு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் மீள்குடியேற்ற த்திற்கு என
அழைத்துச்செல்லப்பட்ட பொது மக்கள் ஏமாற்றத்துடன் தமது வீடுகளை கூட பார்வையிட
முடியாதவர்களாய் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பட்டனர்

கோப்பாய் பிரதேச செலயகப்பிரிவுக்குட்பட்ட
இப்பகுதியிலிருந்து 1990ம் ஆண்டு முதல் மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். இன்நிலையில்
இன்று அப்பகுதியில் மீள்குடியேற்றதிற்கென மக்கள் அழைத்துச்செல்லப்பட்டனர்  இதனைத்
தொடர்ந்து வளலாய் பிள்ளையார் கோவில் முன்னறில் மீள்குடியேற்ற பிரசாரக்கூட்டம்
வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது  யாழ்.அரச
அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் மற்றும் யாழ்.மாவட்ட இராணுவக்கட்டளைத்தளபதி மேஜர்
ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கே ஆகியோர் கலந்து கொண்டனர்

நிகழ்வில் அரச அதிபரும் இராணுவத்தளபதியும் மாறிமாறி
ஒருவரை ஒருவர் புகழ்ந்து தள்ளியதுடன் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவையும் புகழ்ந்தனர்
இதனைத் தொடர்ந்து மக்கள் நீங்கள் உங்கள் சொந்த இடங்களுக்கு செல்லலாம் என்று கூறி
அவர்கள் இருவரும் புறப்பட்டுச்சென்றனர்.

மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முற்பட்ட
வேளையில்  அப்பகுதிகளுக்குப் பொறுப்பான இராணுத்தினர் அவர்களை அவர்களது சொந்த
இடங்களையும் வீடுகளையும் பார்க்க விடாது தடுத்ததோடு அவர்களை அப்பகுதிக்கே
செல்லக்கூடாது என்று அடித்து விரட்டனார்கள்

இதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளரிடம் மக்கள்
முறையிட்ட போது பிரதேச செயலாளர் இராணுவத்தினருடன் பேசினார். அதன் பின்னர் இங்கு
மீள்குடியேற முடியாது. வீதி ஓரமாக சென்று வீடுகளை பார்த்துவிட்டு திரும்ப வேண்டும்
என உத்தரவிட்டனர்.

மக்கள் எவரும் உள்ளே
செல்லவோ அல்லது வீதியை விட்டு இறங்கவோ இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை. 15
நிமிடங்களுக்குள்  மக்கள் அனைவரையும் இராணுவத்தினர் அடித்து
விரட்டினார்கள்
இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு மீள்குடியேற்றத்திற்கென அழைத்து
வரப்பட்ட மக்கள் அரச அதிபரையும் இமெல்டா சுகுமாரையும், இராணுவத்தளபதி
ஹத்துருசிங்காவையும்  திட்டிக்கொண்டே தமது வீடுகளுக்கு திரும்பி சென்றனர்

மின்னேரியா இரகசியத் தடுப்பு முகாமில் கேணல் நகுலன் படுகொலை

Published on November 29, 2011-11:04 am   ·   No Comments

(By lankanewsweb) தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில்
ஒருவரான கேணல் நகுலன் மின்னேரியாவில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் இரகசியத் தடுப்பு
முகாமில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மிகவும் நம்பகரமான தகவல் மூலம் ‘லங்கா
நியூஸ் வெப்‘ இணையத்தளத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

கேணல் நகுலன் என்று அழைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச்
சேர்ந்த சின்னத்தம்பி கணபதிப்பிளை சிவமூர்த்தி, கடந்த 2009ம் ஆண்டின் பிற்பகுதியில்
சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் திருகோணமலையில் வைத்து கைது
செய்யப்பட்டிருந்தார்.

மின்னேரியாவில் உள்ள இரகசியத் தடுப்புமுகாம்
ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பகமான
தகவல்கள் தெரிவிக்கின்றன. 2009 மே 18ம் நாள் விடுதலைப் புலிகள் இயக்கம்
தோற்கடிக்கப்பட்ட பின்னர், எஞ்சியிருந்த விடுதலைப் புலிகளின் இரண்டு அணிகளில்
ஒன்றினது தலைவராக கேணல் நகுலன் செயற்பட்டிருந்தார்.

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத்
தளபதியாக இருந்த இவர், 2007 இல் மட்டக்களப்பின் மீதான கட்டுப்பாட்டை புலிகள் இழந்த
பின்னர், மட்டக்களப்புக்கான தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

2007 மே 23ம் நாள் ஏறாவூரில் இடம்பெற்ற மோதல்
ஒன்றில் மரணமான விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளின் சடலங்களுக்கு அருகே கிடந்த
கேணல் நகுலனின் அடையாள அட்டையை வைத்து, அவர் கொல்லப்பட்டு விட்டதாக, 2007 ஜுன் 8ம்
நாள் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சான்று : ”Colonel”
Nagulan’s silent burial; LTTE’s sanctimony over offering final rights

ஆனால், கேணல் ராமுடன் செய்மதி தொலைபேசி மூலம்
கொண்டிருந்த தொடர்பாடல் சமிக்ஞையை அடிப்படையாக கொண்டு, திருகோணமலையில் வைத்து கேணல்
நகுலனை 2009 பிற்பகுதியில் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் கைது
செய்திருந்தனர்.

கேணல் நகுலன் கொல்லப்பட்டு விட்டார் என்று ஏற்கனவே
பாதுகாப்பு அமைச்சு அறிவித்து விட்டதால், தமது செய்தி பொய்யாகி விடும் என்பதாலும்,
புலம்பெயர் தமிழர்களுடன் இவர் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்ததாலும், இவரது கைது
பற்றி எந்தவொரு ஊடகங்களுக்கும் தெரிவிக்காமல், சிறிலங்கா அரசாங்கம் இரகசியமாகவே
வைத்திருந்தது.

ஆனால், புலம்பெயர் தமிழர்கள் பற்றிய தகவல்களை கேணல்
நகுலனிடம் இருந்து பெறுவதற்கு பலமுறை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட
முயற்சி தோல்வியடைந்தது.

சிறிலங்கா படையினருடன் ஒத்துழைக்க மறுத்ததால்,
கேணல் நகுலன் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்ட போதும், அவரிடம் இருந்து எந்தத்
தகவலையும் பெறமுடியவில்லை. இந்தநிலையில், அவர் எந்தவகையிலும் பயன்படமாட்டார் என்று
உணர்ந்து கொண்ட இராணுவப் புலனாய்வாளர்கள், உயர்மட்ட பணியகத்தில் இருந்து வந்த
உத்தரவை அடுத்து, கேணல் நகுலனை படுகொலை செய்துள்ளனர்.

கேணல் நகுலன் தடுத்து வைக்கப்பட்டிருந்த மின்னேரியா
தடுப்பு முகாமில் மேலும் பல புலிகள் இயக்கத் தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
என்றும் அந்தத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

ஐ.தே.க.வின் ஆர்ப்பாட்டப் பேரணி: பின்னணியிலுள்ள அரசியல்! (ஓர் ஆய்வு) _

அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டப்
பேரணி ஒன்றை இன்று செவ்வாய்கிழமை கொழும்பில் நடத்தவிருக்கும் பிரதான
எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஏனைய எதிர்க்கட்சிகள் அனைத்தினதும் ஆதரவையும்
கோரியிருக்கின்றது. நீண்ட காலத்தின் பின்னர் அரசுக்கு எதிரான தமது பலத்தைக்
காண்பிப்பதற்கு இன்றைய ஆர்ப்பாட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளவே ஐ.தே.க. தலைமை
திட்டமிட்டுள்ளது. எனினும், இது எந்தளவுக்கு வெற்றிபெறும் என்பது
கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றது.

காரணம்: மனோ கணேசன் தலைமையிலான
ஐனநாயக மக்கள் முன்னணியின் ஆதரவைப் பெறுவதில் ஐ.தே.க. தலைமை வெற்றிபெற்ற போதிலும்,
மற்றொரு முக்கிய எதிர்க்கட்சியான சரத் பொன்சேகா தலைமையிலான ஐனநாயக முன்னணி இன்றைய
போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

ஜே.வி.பி.யும் இந்த முன்னணியில்தான்
உள்ளது என்பதால் இன்றைய ஆர்ப்பாட்டம் எதிர்க்கட்சிகளை முழுமையாகப்
பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்கப் போவதில்லை.

இந்த நிலையில் இந்த
ஆர்ப்பாட்டப் பேரணியின் பின்னணியிலுள்ள ‘அரசியல்’ தொடர்பாக சுருக்கமாகப் பார்ப்பதே
இந்தக் கட்டுரையின் நோக்கம். ஐ.தே.கவைப் பொறுத்தவரையில் அரசியல் ரீதியாக அது
மிகவும் பலவீனமடைந்த நிலையிலேயே இருக்கின்றது. எதிர்க்கட்சி என்ற முறையில் அரசுக்கு
அழுத்தங்களைக் கொடுக்கக்கூடியளவுக்கு பலமான நிலையில் அது இல்லை என்ற குற்றச்சாட்டு
தொடர்ந்தும் நிலவி வருகிறது.

இந்த நிலை கட்சியைத் தொடர்ந்தும்
பலவீனப்படுத்துவதாக இருப்பதுடன், மக்களின் நம்பிக்கையைக் கட்சி இழப்பதற்கும்
காரணமாக உள்ளது. இன்றைய நிலையில் கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டுமானால்,
தேர்தல்களில் வெற்றிபெற்றுக் காட்ட வேண்டும். அல்லது, அரசை ஆட்டங்காணத்தக்க வகையில்
போராட்டங்களை நடத்த வேண்டும்.

மக்களைக் கவரக்கூடிய வகையிலான கோரிக்கைகளை
முன்வைத்து போராட்டங்களை நடத்துவதற்கு அண்மைக்காலம் வரையில் இயலாதிருந்த ஐ.தே.க.
தலைமைக்கு இப்போதுதான் சில காரணங்கள் கிடைத்திருக்கின்றன.

அதேவேளையில், போர்
வெற்றி என்ற கோஷத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகளின் பிரசாரங்கள் அனைத்தையும் தவிடு
பொடியாக்கிவந்த ஆளும் கட்சி, இப்போது அந்த நிலையில் இல்லை. பொருளாதாரப்
பிரச்சினைகளை மக்கள் உணரத் தொடங்கியுள்ளார்கள். போர் வெற்றிக் கோஷத்தின் மூலமாக
இதனை மேலும் மூடிவைத்திருக்கக்கூடிய இயலுமை அரசிடம் இருப்பதாகத்
தெரியவில்லை.

இதற்கு மேலாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு
வெள்ளைக்கொடி வழக்கில் மேலும் 3 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருப்பதும் மக்கள்
மத்தியில் அனுதாபத்தைத் தோற்றுவித்திருக்கின்றது.

இந்த நிலையில்தான் மூன்று
கோரிக்கைகளை முன்வைத்து தமது போராட்டத்தை முன்னெடுப்பதற்கும், அதற்கு
எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்று சேர்ப்பதற்கும் ஐ.தே.க.
திட்டமிட்டது.

1.மக்களுக்கு நிவாரணம் எதனையும் வழங்காத வரவு செலவுத்
திட்டத்தை எதிர்ப்பது.

2. அரசியல் பழிவாங்கலுக்குள்ளான சரத்
பொன்சேகாவை உடன் விடுதலை செய்ய வற்புறுத்துவது

3. நட்டத்தில்
இயங்கும் தனியார் நிறுவனங்களைப் பொறுப்பேற்கும் சட்டமூலத்தை
எதிர்த்தல்.

இந்த மூன்று கோரிக்கைகளையும் முன்வைத்து ஆர்ப்பாட்டப் பேரணி
ஒன்றை முன்னெடுத்தால் எதிர்க்கட்சிகளின் ஆதரவு தாரளமாகக் கிடைக்கும் என ஐ.தே.க.
தலைமை போட்ட கணக்கு, ஆரம்பத்திலேயே பிழைத்துப் போய்விட்டது. காரணம், ஐ.தே.கவின்
தலைமையில் நடைபெறும் போராட்டங்கள் எதிலும் பங்குபெற ஐனநாயக முன்னணி
மறுத்துவிட்டமைதான்.

சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணி,
ஜே.வி.பி. என்பனதான் இதில் பிரதான கட்சிகளாக உள்ளன. சரத் பொன்சேகாவின் விடுதலையை
ஐ.தே.க. தலைமை தமது அரசியல் நலன்களுக்குப் பயன்படுத்துவதை இவர்கள் விரும்பவில்லை
என்றே தோன்றுகின்றது. இதனால் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா உட்பட அவரது
கட்சியினர் இன்றைய போராட்டத்தில் பங்குகொள்ள மாட்டார்கள் என்பது ஐ.தே.க. பேரணிக்கு
முக்கிய ‘மைனஸ் பொயின்ட்’டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இவர்களைப்
பங்குபெறச் செய்வதற்கான பேச்சுக்களை ஐ.தே.க. தலைமை தொடர்ந்தும் மேற்கொண்டு
வருவதாகத் தெரிகின்றது. காரணம், இவர்கள் இல்லை எனில் இன்றைய ஆர்ப்பாட்டப் பேரணி
முழுமையான வெற்றியாக அமையாது என்பது ஐ.தே.க. தலைமைக்குத் தெரியும்
என்பதுதான்.

இரண்டாவதாக இன்றைய போராட்டத்தில் பங்குகொள்வதற்கு மனோ கணேசனும்
இரண்டு நிபந்தனைகளை விதித்திருந்தார்.

ஒன்று – சரத் பொன்சேகாவை
மட்டுமன்றி நீண்ட காலமாக சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க
வேண்டும்.

இரண்டு– இழுபறிப்படும் இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு
விரைவுபடுத்தப்பட வேண்டும்.

இந்த இரு கோரிக்கைகளும் உள்ளடக்கப்பட்டால்
தாமும் இந்தப் போராட்டத்தில் பங்குகொள்வதாக மனோ கணேசன் விதித்த நிபந்தனை ஐ.தே.க.
தலைமைக்குச் சங்கடத்தை ஏற்படுத்துவதாகத்தான் இருந்தது. ஆர்ப்பாட்டத்தில் இவற்றையும்
இணைத்துக்கொள்வது சிங்கள மக்களின் ஆதரவைப் பாதிக்குமா என்பதை ஆராய வேண்டியவராக
ரணில் விக்கிரமசிங்க இருந்துள்ளார்.

அதனால்தான் இதற்குப் பதிலளிக்க
அவருக்கு 4 நாட்கள் தேவைப்பட்டன. இருந்தபோதிலும் தமிழ் மக்களின் ஆதரவை வெறுமனே
கருவேப்பிலை போல ஐ.தே.க. தலைமை பயன்படுத்திக்கொள்வதை அனுமதிப்பதில்லை என்பதில் மனோ
கணேசன் உறுதியாக இருந்தார். மனோவின் இதே கருத்தைத்தான் கலாநிதி விக்கிரமபாகுவும்
வெளிப்படுத்தினார்.

ஜே.வி.பியும் இல்லாத நிலையில் மனோவும் இல்லை என்றால்
தமது போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் பங்குகொண்டதாகக் காட்டிக்கொள்ள முடியாது
என்ற நிலையில் மனோ கணேசனின் கோரிக்கையை ஐ.தே.க. தலைமை ஏற்றுக்கொண்டது.

ஞாயிற்றுக்கிழமை மனோவை அழைத்துப் பேசிய ரணில் விக்கிரமசிங்க அவரது
கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்ததுடன், தமது ஆர்ப்பாட்டப் பேரணியில்
பங்குகொள்ளுமாறு மனோவுக்கு நேரடியாக அழைப்பும் விடுத்திருந்தார்.

இந்த
நிலையில்தான் இன்றைய ஆர்ப்பாட்டப் பேரணியில் மனோ கணேசனின் ஜனநாயக மக்கள்
முன்னணியும், விக்கிரமபாகு கருணாரட்ண தலைமையிலான நவசமசமாஜக் கட்சியும்
பங்குகொள்கின்றன.

நீண்ட காலத்தின் பின்னர் அரசுக்கு எதிராக இடம்பெறும்
போராட்டம் என்பதால் இன்றைய ஆர்ப்பாட்டப் பேரணி அரசியல் ரீதியில் அனைவரினதும்
கவனத்தை ஈர்க்கின்றது. இதற்கு மக்களுடைய ஆதரவு எவ்வாறு இருக்கப் போகின்றது
என்பதைத்தான் அரசியல் மற்றும் இராஜதந்திர வட்டாரங்கள் அவதானிக்கின்றன.

வழமைப்போல் வெறுமனே ஆர்ப்பாட்டத்தை நடத்துவதோடு விட்டுவிடாமால் இதன் மூலமாக
எதிர்க்கட்சிகளை இணைத்த அரசியல் வேலைத்திட்டம் ஒன்றை முன்வைக்க வேண்டும் என்ற
நோக்குடனேயே இந்த ஆர்பாபட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத்
தெரிகின்றது.

சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜனநாயகத்தை வெற்றிகொள்ள வேண்டுமாயின்
நிறம், மதம், இனம் பாராது அனைவரும் ஒன்றிணைந்து அணிதிரள வேண்டும் என்று கொழும்பில்
இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஐ.தே.க. பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அனைத்து
கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்ததிருந்தார்.

மக்களுக்குப் பயன் கிடைக்காத
நிலையில் தயாரிக்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்,
அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கு, சரத் பொன்சேகாவின் விடுதலை போன்ற கோரிக்கைகளை
முன்வைத்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக ஐ.தே.க. அழைப்பு
விடுத்திருந்தாலும், இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் நிபந்தனையுடனேயே பங்கேற்பதற்கு
ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய சோஷலிசக் கட்சி, நவசமசமாஜக் கட்சி ஆகியன
தீர்மானித்துள்ளமை குறிப்பிட்டு நோக்கத்தக்கது. இந்த ஆர்ப்பாட்டத்தில், நீண்டகலாமாக
இழுத்தடிக்கப்பட்டு வரும் தமிழ் மக்களின் பிரச்சினைகள், நீண்டகாலமாக தடுத்து
வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த கோரிக்கைகள் இதில் உள்ளடக்க
வேண்டும் என்று மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட ஐக்கிய சோஷலிசக்
கட்சி, நவ சமாஜக் கட்சி ஆகியன கேட்டுக் கொண்டதற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமை
ஒப்புக்கொண்டமை தமிழ்க் கட்சிகளையும் இணைத்த வேலைத் திட்டம் ஒன்றை
முன்னெடுப்பதற்குக் கிடைத்துள்ள ஒரு வாய்ப்பாக உள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்
ஒருவர் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெறுவது தொடர்பில்
நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ணவிடம் கேட்டபோது, தமது இரு
கோரிக்கைகளும் ஐ.தே.க. தலைமையால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதால் தமது கட்சியும் இந்த
ஆர்ப்பாட்டத்தில் பங்குபெறுவதற்கு தயாராக இருப்பதாக வீரகேசரி இணையத் தளத்திற்குத்
தெரிவித்தார்.

இதில் பங்கு பெறுவது தொடர்பில் ஜே.வி.பியின் பாராளுமன்ற
உறுப்பினர் விஜித்த ஹேரத் எம்.பியிடம் கேட்டபோது, இந்த ஆர்ப்பாட்டத்திற்கும்
எமக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை நாங்கள் இதில் கலந்துகொள்ளப்போவதுமில்லை என்று
வீரகேசரி இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

ஐ.தே.கட்சியினால் அழைப்பு
விடுக்கப்பட்டதா? என்று கேட்டபோது, எந்தவொரு அழைப்பும் விடுக்கப்படவில்லை என்றும்
அவ்வாறு அழைப்பு விடுத்திருந்தாலும் நாம் அதில் பங்கு பெறப்போவதில்லை என்றும்
தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க்கட்சிகள் அனைத்தும்
இணைந்திருந்தன. இன்று அந்த ஒருமைப்பாட்டை மீண்டும் ஏற்படுத்துவதற்கு ஐ.தே.க.
தலைமையால் முடியாமல் போய்விட்டது.

கட்சியின் தலைமைப் பதவியைத் தக்கவைத்துக்
கொள்வதில் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரணிகளை
ஒன்றுபடுத்தி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திக்காட்ட வேண்டிய தேவையும் உள்ளது.

இந்நிலையில் இது வெறுமனே அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணியாகக்
காணப்பட்டாலும் இதன் பின்னணியிலுள்ள அரசியல் நகர்வுகள், கட்சி மற்றும் தனிப்பட்ட
நலன்களை அடிப்படையாகக் கொண்டதாகவே உள்ளதென்பதே நிதர்சனம்.

மகிந்த ராசபக்சவை கொலை செய்ய சதிசெய்தார்- கனகரத்தினத்தின் மகன் மீது குற்றப்பத்திரிகை!

Published on November 29, 2011-1:42 pm   ·   No Comments

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புசெயலாளர் கொதபாயா
ராஜபக்ச மற்றும் முன்னாள் ராணுவத்தளபதி சரத் பொன்செகா ஆகியோரை கொலை செய்ய சதி
செய்ததாக முன்நாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும், தற்போது
சிறிலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளராகவும் இருக்கும்  சதாசிவம் கனகரத்தினத்தின்
மகன் ஆதித்யன் (வயது 32) மீதும் மற்றும் ஒருவர் மீதும் குற்றம் சாட்டி சட்டமா
அதிபர் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்துள்ளார்.

வன்னி யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் சதாசிவம்
கனகரத்தினம் இடம்பெயர்ந்தவர்களுடன் வசித்து வந்தார்.   பின்னர் கடைசி நாட்களில்
இடம்பெயர்ந்தவர்களுடன் அரச கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் வந்தார். அவர் பின்னர் கைது
செய்யப்பட்டு எட்டு மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டார். அதன்  பின்னர்
விடுவிக்கப்பட்டார்.

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அவர் மகிந்த
ராஜபக்சாவை ஆதரி;த்தார். அதே ஆண்டு ஆளும் கட்சி வேட்பாளராக வன்னி மாவட்டத்தில்
போட்டியிட்டார். ஆனால் பாராளுமன்றத்திற்கு அவர் தெரிவாகவில்லை.

விடுதலைப்புலிகளே மக்களை கொன்றார்கள் என்றும்
மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தினார்கள் என்றும் கனகரத்தினம் இராணுவத்தினரால்
விடுதலை செய்யப்பட்ட பின்னர் கூறியிருந்தார்.  மிக தீவிரமான மகிந்த ராசபக்ச
ஆதரவாளராக கனகரத்தினம் மாறிய போதிலும் அவரின் மகன் ஆதித்யன் மீது பயங்கரவாத
தடைச்சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர் தற்கொலை
தாக்குதலை நடத்துவதற்காக கொழும்பில் தங்கியிருந்த போது கைது செய்ததாக
குற்றப்புலனாய்வுப்பிரிவினர் தெரிவித்திருந்தனர்

இணையத்தில் அதிகளவில் வருவாய் ஈட்டும் தளங்கள்!

இணையத்தில் அதிக வருவாய் ஈட்டும்
தளம் எது என்ற கேள்வி எழுந்தால், நம்மில் பலர் அளிக்கும் பதில் கூகுள் அல்லது
பேஸ்புக் என்றே இருக்கும்.

எனினும் உண்மை அதுவல்ல. இணையத்தில் அதிக வருவாய்
ஈட்டும் தளம் அமேசன்.கொம் ஆகும்.

சுயாதீன நிறுவனமொன்று நடத்திய
ஆய்வொன்றிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.

அந்நிறுவனத்தின் ஆய்வுப்படி
அதிகம் பணமீட்டும் நிறுவனங்கள் பட்டியல் இதோ :

1. Amazon

இணையத்தில் பொருட்களை வாங்க உதவும் தளம் இது. பொருட்களை வாங்குவதற்கான
ஒன்லைன் சந்தையாக விளங்கும் இது, விநாடிக்கு $776.66 படி. இதன் மொத்த வருடாந்த
வருவாய் $24,509,000,000 ஆகும்.

2. Google

இணைய உலகில் கூகுள்
தொடர்பில் அறியாதவர் எவருமிலர் எனலாம். இதன் வருட வருமானம் $23,650,560,000. ஒரு
வினாடிக்கு $749.46 ஆகும்.

3. Comcast

அதிகம் சம்பாதிக்கும்
பட்டியலில் இந்த தளம் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்தத் தளத்தின் ஆண்டு வருமானம்
$8,727,360,000 ஆகும். சராசரியாக ஒரு வினாடிக்கு 276.56$ சம்பாதிக்கிறது.

4. ebay

Amazon தளத்தை போன்று இதுவும் ஒன்லைனில் பொருட்களை
வாங்கவும், விற்பனை செய்யவும் உதவும் இணையதளம். வினாடிக்கு 276.56$ ஐயும் ஆண்டுக்கு
$8,727,360,000 ஐயும் இது சம்பாதிக்கின்றது.

5. Yahoo

இணையத்தில்
மிகப்பிரபலமான தளம் இது. இதனுடைய ஆண்டு வருமானம் $6,460,000,000 ஆகும். சராசரியாக
ஒரு வினாடிக்கு $204.71 ஆகும்.

6.Reuters

செய்தித்தளமான இது
வினாடிக்கு 107$ வருமானமும் ஆண்டுக்கு $ 3,400,000,000 வருமானமும்
பெற்றுக்கொள்கின்றது.

7. AOL

இந்தத் தளம் வினாடிக்கு 99.41$ம்,
ஆண்டுக்கு $3,137,100,000ம் வருமானமாகப் பெற்றுக்கொள்கின்றது.

8. Expedia

பயணம் செய்பவர்களுக்கு இது பயனுள்ள தளமாகும். டிக்கெட்டுகள் வாங்குவதில்
இருந்து விமானங்களின் நேரங்கள் மற்றும் பல தகவல்களை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இந்தத் தளம் வருடத்திற்கு $2,937,010,000 வருமானம் பெற்றுத் தருகிறது. இதன் ஒரு
வினாடிக்கான வருமானம் $93.07 ஆகும்.

9. Paypal

ஒன்லைனில் பணம்
பரிமாற்றம் செய்யும் அனைவருக்கும் இந்த தளம் பற்றி தெரிந்திருக்கும். உலகம்
முழுவதும் பணப் பரிமாற்றம் செய்ய மிகப் பிரபலமான பயனுள்ள இணைய தளம் இது. இந்தத்
தளம் வினாடிக்கு 91.90$ படி ஆண்டுக்கு $2,900,000,000 சம்பாதிக்கிறது.

10.
iTunes

பட்டியலில் பத்தாவது இடத்தில் இருப்பது அப்பிள் நிறுவனத்தின் iTunes
இணைய தளமாகும். இந்தத் தளத்தின் ஒரு வினாடிக்கான வருமானம் 60.21$. ஆண்டுக்கு
$1,900,000,000 வருமானம் இந்த தளம் மூலம் பெற்றுக் கொள்கின்றது அப்பிள்.

பலரது விருப்பத்திற்குரிய பேஸ்புக், இப்பட்டியலில் பெற்றுக் கொண்டுள்ள இடம்
16. இதன் ஆண்டு வருமானம் $1,000,000,000 .வினாடிக்கு $31.69.

தாயகத்தை கண்முன்நிறுத்திய பிரான்ஸ் மாவீரர் நாள் ! ஒன்றுபட்டு மாவீரர்களை வணங்கினர்

தாயகத்தை கண்முன்நிறுத்திய பிரான்ஸ் மாவீரர் நாள் ! ஒன்றுபட்டு மாவீரர்களை வணங்கினர்

Published on November 27, 2011-8:51 pm    ·

தமிழர் தாயகத்தில் மாவீரர் துயிலும் இல்ல மாவீரர் நாளை கண்முன் கொண்டுவந்த மாவீரர் நாள் நிகழ்வாக பிரான்ஸ் மாவீரர் நாள் நிகழ்வுகள் அமைந்துள்ளன. பாரிசின் புறநகர் பகுதியான ஸ்ரான்- லாகூர்னெவ் திறந்தவெளி திடலில் அமைக்கப்பட்ட துயிலும் இல்லத்தில் இந்த மாவீரர் நாள் நடைபெற்றுள்ளது.

தமிழீத் தேசியத்துக்கான விடுதலை அமைப்புக்கள் – தமிழர் பொது அமைப்புக்கள் – விடுதலைச் செயற்பாட்டாளர்களின் கூட்;டிணைவாக அமையப்பெற்ற பிரான்ஸ் மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழுவினால் ஓருங்குபட்டுத்தப்பட்ட இந்த மாவீரர் நாளில் மதியம் 2500க்கும் மேற்பட்ட மக்கள் பங்கெடுத்து மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளனர்.

தாயகத்தில் இடம்பெறுகின்ற மாவீரர்நாள் முன்னெடுப்பு மரபுக்கமைய இத்திறந்தவெளி மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

1000க்கும் மேற்பட்ட கல்லறைகள் அமைக்கப்பட்டதோடு மாவீரர் நினைவாவய முகப்பலங்காரம் என தாயகத்தை கண்முன் நிறுதத்தியதாக இத்திறந்தவெளித் திடல் அமைக்கப்பட்டிருந்தது. விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகத்தின் மாவீரர் நாள் அறிக்கை புலிகளின் குரல் வானொலியூடாக ஒலிபரப்பபட்டதோடு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனின் மாவீரர் நாள் செய்தி வாசிக்கப்பட்டது.

தாயகத்து துயிலும் இல்ல மாவீரர் நாளை தரிசிக்க முடியாமல் போனவர்களுக்கு இந்த திறந்தவெளி துயிலும் இல்ல மாவீரர் நாள் மனநிiவைத் தந்ததோடு அனைவரைக்கும் உணர்வுபூர்வமான நிகழ்வாக அமைந்திருந்தது.

மாவீரர்நாளில் விசேட விருந்து தருவதாக கூறி தமிழ் அரசியல் கைதிகள் மீது தாக்குதல்!

மாவீரர்நாளில் விசேட விருந்து தருவதாக கூறி தமிழ் அரசியல் கைதிகள் மீது தாக்குதல்!

Published on November 27, 2011-2:19 pm    ·

அநுராதபுரச் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீது இன்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாவீரர்நாளாகிய இன்று அநுராதபுரச் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு உணவு வழங்கமறுத்த காவலாளிகள் அவர்கள் மீது இன்று பிற்பகல் 4.30 மணியளவில் கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.

‘இன்று உங்களுக்கு விசேட நாள் வாருங்கள் உங்களுக்கு விசேடமாக விருந்தளிக்கின்றோம்’எனக் கூட்டிச்சென்ற சிறைச்சாலை அதிகாரி குணரட்ன தலைமையிலான குழுவினர் அவர்களது உடைகளை களைந்து எரித்ததுடன் அவர்கள் மீது இரும்பு கம்பிகளால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

இத்தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். அரிகரன் (யாழ்ப்பாணம்),  சசி (வவுனியா), நிக்சன் (திருகோணமலை), தயா (வட்டக்கச்சி)  ஆகியோர் மிகமோசமான தாக்குதலுக்கு ஆளாகி காயமடைந்துள்ளனர்.  இந்த தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சிங்கள காடையர்களும் தமிழ் அரசியல் கைதிகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் அங்குள்ள கைதிகள் தெரிவித்துள்ளனர்.
ஊனமுற்ற தமிழ் கைதிகளின் ஊன்றுகோல்களை பறித்தெடுத்து அதனால் தாக்கிவிட்டு அதனை எடுத்துச் சென்றுள்ளதாகவும் கைதிகள் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சிந்தாமணி பிள்ளையாரிலும் படையினருக்கு சந்தேகம்

மட்டக்களப்பு சிந்தாமணி பிள்ளையாரிலும் படையினருக்கு சந்தேகம்!

Published on November 27, 2011-12:07 pm    ·

மட்டக்களப்பு எல்லைவீதியில் அமைந்துள்ள சிந்தாமணி பிள்ளையாரிலும் சிறிலங்கா இராணுவத்திற்கு சந்தேகம் ஏற்பட்டதால் இன்று அந்த ஆலயத்தில் நடைபெற இருந்த சிந்தாமணி பிள்ளையார் ஆலய வரலாறு என்ற நூல்வெளியீட்டு விழாவுக்கு இராணுவத்தினர் தடை செய்துள்ளனர்.

நூல் வெளியீட்டுவிழா என்ற பெயரில் மாவீரர் பூசையையும் வழிபாட்டையும் நடத்திவிடுவார்கள் என அச்சம் கொண்ட இராணுவத்தினர் நூல் வெளியீட்டு விழாவுக்கு தடைசெய்ததுடன் இன்று ஆலயத்திற்கு யாரும் செல்லக்கூடாது என்றும் ஆலய கதவை திறந்து மணி அடிக்காமல் தீபத்தை காட்டிவிட்டு உடனடியாக பூட்டி விட்டு செல்ல வேண்டும் என்றும் இராணுவத்தினர் உத்தரவிட்டுள்ளனர்.  இந்த ஆலயத்தை சுற்றியும், ஆலயத்திற்கு முன்னால் உள்ள மாநகர சனசமூகநிலைய கட்டிடத்திலும் இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொள்ள இருந்தார்.   இன்று விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நாள் என்பதைச் சுட்டிக்காட்டி பாதுகாப்புத் தரப்பு இந்த நிகழ்ச்சியை இன்று நடத்தக் கூடாதென இராணுவத்தினர் ஏற்பாட்டாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர் என யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஆரையம்பதி புதுக்குடியிருப்பில் ‘கதிரவன்’ சஞ்சிகை வெளியீட்டு விழா நடைபெற இருந்தது. இதனையும் இராணுவத்தினர் தடைசெய்துள்ளனர். இதற்கும் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்து கொள்ள இருந்தார்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் சில இந்து ஆலயங்களில் இன்று வழமையான கண்டாமணி அடித்தல் மற்றும் நித்திய பூசை நடைபெறுவதற்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் தடைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஆலய நிர்வாகத்தினர் தன்னிடம் புகார் தெரிவித்ததாகக் கூறிய யோகேஸ்வரன் இந்த விடயம் தொடர்பாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். கண்டாடமணி அடிக்காமல் பூசையை செய்யுமாறு படையினர் உத்தரவிட்டுள்ளனர்.

புலிகளின் பிரசாரத்தை முறியடிக்க காலஅவகாசம் தேவை- நாடாளுமன்றத்தில் மகிந்த!

புலிகளின் பிரசாரத்தை முறியடிக்க காலஅவகாசம் தேவை- நாடாளுமன்றத்தில் மகிந்த!

Published on November 22, 2011-9:00 am ·

விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பினூடாக பரப்பப்படும் கருத்துக்கள் தவறானவை என்பதை உணர்வதற்கு சர்வதேச சமூகத்திற்கு கால அவகாசம் வழங்க வேண்டியுள்ளதாகவும் ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்கின்ற சகல நாடுகளும் உண்மை நிலைமையை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் சிறிலங்கா அதிபர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

2012ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து உரையாற்றிய போதே மகிந்த ராசபக்ச இதனை தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பின் மூலம் பரப்பப்பட்டிருந்த திரிபுபடுத்தப்பட்ட கருத்துக்கள் பிழையானவை என்ற முடிவுக்கு உலகம் வருவதற்கு நாம் கால அவகாசம் வழங்க வேண்டிய தேவை இருக்கின்றது. உண்மையான நிலைமைகளை படிப்படியாக அறிந்து கொண்டதன் பின்னர் ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்கின்ற அனைத்து நாடுகளும் எம்மை ஏற்றுக்கொள்கின்றன என மகிந்த ராசபக்ச தெரிவித்தார்.

வெளிநாட்டு சக்திகளின் சதிகளின் மூலம் எமது உள்நாட்டுப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பலவந்தப்படுத்தப்பட்ட தீர்வுகள் விதிக்கப்பட முடியாது என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கபடுத்த வேண்டும்- பிரிட்டன் கோரிக்கை

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கபடுத்த வேண்டும்- பிரிட்டன் கோரிக்கை!

Published on November 22, 2011-9:38 am ·

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் அலிஸ்டர் பேர்ட் கோரிக்கை விடுத்துள்ளார்
இந்த அறிக்கையை பலரும் எதிர்பார்த்துள்ளதால் சிறீலங்கா அரசாங்கம் அதனை பகிரங்கப்படுத்துவதன் மூலம் போரின் பின்னரான நிலைமைகளை சர்வதேச சமூகத்துக்கு தெரியப்படுத்தி இந்த வரலாற்று கட்டத்தை தன்னகப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறீலங்கா அரசு இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்து என்ன செய்வுள்ளது என்பதையும் அறிய பிரித்தானிய ஆவலாக உள்ளது என்றும் பிரித்தானிய வெளிவிவகார துணை அமைச்சர் தெரிவித்துள்ளார