‘இலங்கை செய்திகள்’

பாதுகாப்பு செயலாளர் வெலிக்கந்த விஜயம்

வெலிக்கந்த பிரதேசத்திற்குப் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு தரப்பின் முக்கிய அதிகாரியான ஏயார் சீப் மாஸ்டல் டொனால்ட் பெரேரா ஆகியோர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

மேலும்…

புறக்கோட்டையில் வயோதிபர் கடத்தல்

புறக்கோட்டை டயஸ் பிளேஸ் பகுதியில் தமிழ் வர்த்தகர் ஒருவர் வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத சிலரால் கடத்தப்பட்டுள்ளார்.

மேலும்…

நாம் ஒருபோதும் எமது மண்ணையும் எமது மக்களையும் விட்டு ஓடப்போவதில்லை – மின்னஞ்சல் மூலம் லக்மிபவிற்கு வழங்கிய செவ்வியில் தமிழீழ தேசியத் தலைவர்

“நாம் ஒருபோதும் எமது மண்ணையும் எமது மக்களையும் விட்டு ஓடப்போவதில்லை” என தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறியுள்ளார். லக்பிம நியூஸ் ஆங்கில பத்திரிகைக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். செவ்வியின் ஒரு பகுதியை இங்கு தருகிறோம்.

மேலும்…

வத்தளையில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல், 8 இராணுவத்தினர் பலி : – 17 க்கு மேற்ப்பட்டோர் காயம்.. (படங்கள் இணைப்பு)

கொழும்பின் புறநகர்ப் பகுதியான வத்தளையில் இன்று காலை 8.35 மணியளவில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்ஒன்று இடம்பெற்றுள்ளது. இதை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தியப் பிரதமரின் கருத்தையே நாம் நடைமுறைப் படுத்தி வருகின்றோம்: இலங்கை அரசு

பயங்கரவாதத்தை ஒழிக்கவேண்டும் என்ற இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் கருத்தினையே இலங்கையில் தற்போது நாம் நடைமுறைப்படுத்தி வருகின்றோம் என அமைச்சரும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

மேலும்…

சர்வதேச கடற்பரப்பில் தரித்து நின்ற விடுதலைப் புலிகளின் ஆயுத கப்பல் மாயம்: சிறிலங்கா படைத்தரப்பு அதிர்ச்சி

முல்லைத்தீவை அண்டிய சர்வதேச கடற்பரப்பில் கனரக ஆயுதங்களுடன் தரித்து நின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் எங்கே சென்றது எனும் அதிர்ச்சியில் சிறிலங்கா அரசாங்கம் உறைந்து போயுள்ளதாக கொழும்பு வார ஏடு ஒன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:

கனடாவில் இருந்து உக்ரேன் நாட்டுக்கு கடந்த மே மாதம் விடுதலைப் புலிகளின் மூன்று உறுப்பினர்கள் பயணமானார்கள்.

மேலும்…

கிளிநொச்சி, முல்லை தீவிலிருந்து மக்களை விடுவிக்காவிடின் விடுதலைபுலிகள் மீது தடை, வரலாற்று புத்தகத்தில் இருந்து அவர்களை துடைத்தேறிவேன் என்கிறார் ஜனாதிபதி

2009 ஆம் ஆண்டை படையினரின் வெற்றி ஆண்டு என்று நான் பெயரிடுகின்றேன். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழ் மக்களை விடுவிக்குமாறு புலிகளிடம் கேட்டுக் கொள்கின்றேன். அவ்வாறு செய்யாவிடின் புலிகளைத் தடைசெய்வதுடன் மட்டும் நின்றுவிடாது, வரலாற்றுப் புத்தகத்திலிருந்து அவர்களை துடைந்தெறிவதற்கும் நான் பின்நிற்க மாட்டேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும்…

முறிகண்டி – இரணைமடுப் பகுதியில் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பாரிய மோதலில் – விடுதலைப் புலிகள் படையினர் மீது மேற்கொண்ட மோட்டார் தாக்குதலை இக்பால் அத்தாஸ், “மோட்டார் பருவமழை” என வர்ணித்துள்ளார்:

இலங்கை அரசாங்கம் தெரிவித்து வந்ததைப்போன்று 2008 ஆம் ஆண்டுக்குள் கிளிநொச்சியையும் முல்லைத்தீவையும் கைப்பற்றமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே 2009 ஆம் ஆண்டிலும் யுத்தம் தொடரப்போவதாக போரியல் ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும்…

இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை உருவாக்காமல் – விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிக்க முனைவது இனப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உதவாது:பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பில் றம்மெல் எடுத்துரைப்பு.

யுத்தத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள வன்னியில் இடம்பெயர்ந்து அல்லல்படும் மக்களின் நிலைமைகளைக் கண்டறிந்து , உரிய நிவாரணம் மற்றும் உதவிகளை அவர்களுக்கு வழங்குவதற்கு வசதியாக ஐ.நா. தலைமையிலான அவதானிப்பு மற்றும் மதிப்பீட்டுக் குழு ஒன்று அங்கு செல்வதற்கு இலங்கை அரசு அனுமதித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மேலும்…

கிளிநொச்சி சமரில் படையினரின் மேலதிக இழப்புக்களை நிரூபித்த புலிகள்:- “றோ” அமைப்பின் முன்னாள் செயலாளர் பி.இராமன்

கிளிநொச்சி சமர்க்களம் தொடர்பாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ள தகவல்களை விட புலிகள் தெரிவித்திருக்கும் தகவல்கள் உண்மையாக இருப்பதாகத் தெரிகிறது என்று இந்திய றோவின் முன்னாள் செயலாளர் பி. இராமன் கூறியுள்ளார்.

மேலும்…