‘இலங்கை செய்திகள்’

பிரபாகரனை உயிருடன் பிடிப்பதே குறிக்கோள்: பொன்சேகா

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் முல்லைத்தீவில் பதுங்கியிருக்கிறார். அவரைக் கண்டுபிடித்து உயிருடன் பிடிப்பதே எங்களது நோக்கம் என்று இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

மேலும்…

கிளிநொச்சிக்கு அடுத்து ஒட்டுச்சுட்டான் வீழ்ந்தது

கொழும்பு:முல்லைத் தீவு அருகே ஒட்டுச்சுட்டான் என்ற முக்கிய நகரத்தை இலங்கை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, முல்லைத் தீவை நோக்கி ராணுவம் வேகமாக முன்னேறி வருகிறது.இலங்கை ராணுவ அமைச்சகம் கூறியதாவது:கிளிநொச்சியை மீட்ட பிறகு, ராணுவத்தினர் முல்லைத் தீவு மீது கவனம் செலுத்த துவங்கியுள்ளனர்.

மேலும்…

இலங்கைக்கு அமெரிக்கா கோரிக்கை

வாஷிங்டன், ஜன. 3: இலங்கையில் தமிழர்கள் பிரச்சனை மற்றும் அவர்களது நியாயமான கோரிக்கைகள் குறித்தும் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

மேலும்…

கிளிநொச்சியை கைப்பற்றியது இலங்கை ராணுவம் சுற்றி வளைப்பு! புலிகள் தலைமையகம் வீழ்ந்ததால் பெரும் பதட்டம்

கொழும்பு: இலங்கையில் நடந்துவரும் உள்நாட்டுச் சண்டையில், தற்போது இலங்கை ராணுவத்துக்கு கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. விடுதலைப் புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சியை கைப்பற்றியுள்ளது. அதிபர் ராஜபக்ஷே இதற்கான அறிவிப்பை வெளியிட்டு, “கிளிநொச்சி ராணுவ வீரர்கள் கைவசம் வந்துவிட்டது’ என்றார்.இலங்கையில் ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையே கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு சண்டை நடந்து வருகிறது. புலிகளை அடியோடு ஒழிப்பதற்கான முயற்சியை கடந்த இரு மாதங்களுக்கு முன் இலங்கை ராணுவம் தீவிரப்படுத்தியது.

மேலும்…

கிளிநொச்சி படையினர் வசம் புலிகள் சரணடைய வேண்டும் – ஜனாதிபதி

கிளிநொச்சியினை படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த வெற்றியினை ஒரு இனத்துக்கு எதிரான வெற்றியாகவோ, வடக்கு மீதான தெற்கின் வெற்றியாகவோ அர்த்தப்படுத்தக் கூடாது. இது எமது நாட்டுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும்…

கொழும்பு விமானப்படைத் தலைமையகத்திற்கு அருகில் பாரிய குண்டுவெடிப்பு -இரு விமானப்படையினர் பலி 32 பேர் காயம் -காவற்துறைப் பேச்சாளர்

கொம்பனித்தெருவிலுள்ள விமானப்படைத் தலைமையகம் முன்பாக தற்கொலைக் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இத் தற்கொலை குண்டு தாக்குதலில் 30 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்…

கிளிநொச்சியை கைப்பற்றியதாக இலங்கை ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கொழும்பு: விடுதலைப் புலிகளின் முக்கிய தலைமையிடமான கிளிநொச்சியை கைப்பற்றியதாக இலங்கை ராணுவம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற போரில் 50 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், 100 க்கும் மேற்பட்ட விடுதலை புலிகள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. கிளிநொச்சியை இலங்கை அரசு கைப்பற்றியதை அடுத்து விடுதலைப் புலிகள் அனைவரும் காடுகளில் சென்று பதுங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : dinamalar

கிளிநொச்சி சுற்றி வளைப்பு-ராணுவம்!!

கொழும்பு: புலிகளின் தலைமையகமான கிளிநொச்சியை சுற்றி வளைத்துவிட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

பல மாத கடும் போருக்குப் பின் கிளிநொச்சி சுற்றி வளைக்கப்பட்டுவிட்டதாக இலங்கை ராணுவத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்தாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும்…

இரணைமடு சந்தியை படையினர் கைப்பற்றியுள்ளனர் -பாதுகாப்பு அமைச்சகம்

இரணைமடு சந்தியை படையினர் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும்…

பாக். செல்ல இலங்கை அணி முடிவு-இந்தியா அதிருப்தி

பாகிஸ்தானுக்கு செல்ல இலங்கை அணி முடிவு செய்திருப்பது, இந்தியாவை அதிருப்தியிலும், கோபத்திலும் ஆழ்த்தியிருக்கிறது.

மும்பைத் தாக்குதலின் எதிரொலியாக, பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை மத்திய அரசு ரத்து செய்தது.

மேலும்…