‘இலங்கை செய்திகள்’

மங்கள சமரவீரவை கொலை செய்ய கோத்தபாய சதித்திட்டம்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீரவை கொலை செய்வதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சதித்திட்டம் தீட்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மங்கள குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும்…

ஐக்கிய தேசியக் கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்கப் போவதில்லை என அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்கப் போவதில்லை எனக் கூறி அமர்வில் இருந்து வெளியேறியுள்ளனர்.

மேலும்…

சண்டே லீடரின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க மரணம்

இன்று காலை துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சண்டே லீடரின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க பி.பகல. 2 மணியளவில் மரணமடைந்தார்.

மேலும்…

இராணுவ வெற்றிக்கு கருணாவின் பிரிவு காரணமல்ல: இராணுவத் தளபதி

இராணுவத்தினர் அண்மையில் பெற்ற வெற்றிக்கு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்தமையே காரணமென ஒருவர் கூறுவாராயின் அது வெட்கப்பட வேண்டியது என இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

மேலும்…

வன்னியில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்: கைக்குழந்தை உட்பட 5 அப்பாவி பொதுமக்கள் படுகொலை

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சி மற்றும் தருமபுரம் பகுதிகளில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் கைக்குழந்தை உட்பட 5 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 4 சிறுவர்கள் உட்பட 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும்…

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இலங்கை மீண்டும் தடை

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இலங்கை அரசு மீண்டும் தடை விதித்துள்ளது. இதன் மூலம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான கதவுகளை அது ஓங்கி அறைந்து சாத்தி விட்டது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை படைகள் கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. புலிகளின் தலைநகரான கிளிநொச்சியைப் பிடித்துள்ளனர். அடுத்து முல்லைத்தீவுக்கு குறி வைத்துள்ளனர்.

மேலும்…

இலங்கை வடக்கு பகுதியில் தேர்தலா? கேலிக்குரியது என்கிறார் நடேசன்

கொழும்பு : “இலங்கையின் வடக்கு பகுதியில் தேர்தல் நடத்தப்போவதாக இலங்கை அரசு கூறியிருப்பது கேலிக்குரியது. இதனால், எவ்விதமான பயனும் ஏற்படப் போவதில்லை’ என, விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன், புலி கள் ஆதரவு இணையதளத்தில் அளித்துள்ள பேட்டி: வடக்கு பகுதியில் தேர்தல் நடத்தப்போவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது; இது கேலிக்குரியது. இதனால், எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை. 1977ல் நடந்த தேர்தலிலேயே, தங்கள் விருப்பம் என்ன என்பதை தமிழ் மக்கள் தெளிவாக அரசுக்கு தெரிவித்து விட்டனர்.

மேலும்…

தமிழக மக்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் நேர்மையான முறையில் விநியோகிக்கப்பட்டதா?

தமிழக மக்களால் அனுப்பப்பட்ட உணவுப்பொருட்களும் உடைகளும் எம்முடைய பிரதேசத்தில் செயற்பட்டுவரும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

மேலும்…

சிறிலங்கா அரசின் வானூர்தி குண்டு வீச்சுகள், ஏவுகணைத் தாக்குதல்கள் அதிகமாகி வருகிறதே… இதில் இருந்து மக்கள் எப்படி தங்களை தற்காத்து கொள்கிறார்கள்?

முப்பது வருடகாலமாக எம்முடைய மக்கள் வானூர்தி குண்டு வீச்சுக்களுக்கும் எறிகணை வீச்சுக்குக்களுக்கும் பாரிய இராணுவ நடவடிக்கைகளுக்கும் முகம்கொடுத்த வண்ணமே வாழ்ந்து வருகின்றனர்.

மேலும்…

தமிழகத்தின் ஏழு கோடி மக்களுமே எமது பலம்; உலகத்திற்கான எம் செய்தி அதுவே: பா. நடேசன் பெருமிதம்

ஈழத் தமிழர்கள் யாருமற்ற அனாதைகள் அல்லர். அவர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டால் தொப்புள்கொடி உறவுகளான ஏழு கோடி தமிழர்கள் தமிழகத்திலிருந்து குரல் கொடுப்பார்கள் என்ற செய்தியே சிறிலங்கா அரசிற்கும், இந்த உலகத்திற்கும் முக்கிய செய்தியாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் பெருமிதம் வெளியிட்டுள்ளார்.

மேலும்…