‘இந்தியா செய்திகள்’

மருத்துவமனையில் கலாம் அனுமதி

புதுடெல்லி : முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்துல் கலாமின் தோலில் ஏற்பட்ட தொற்று காரணமாக அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக நேற்று டெல்லி ராணுவ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகவும், மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும்…

நாடு முழுவதும் 40 லட்சம் லாரிகள் ஓடாது! : அரசுடன் நடந்த பேச்சு தோல்வி (05.01.2009) செய்திகள்.

புதுடில்லி : மத்திய அரசுடன் லாரி உரிமையாளர் சங்கம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, திட்டமிட்டபடி நேற்று நள்ளிரவு முதல் லாரிகள் வேலை நிறுத்தம் துவங்கியது. நாடு முழுவதும் 40 லட்சம் லாரிகள் ஓடவில்லை. இதையடுத்து, பொருட்கள் தட்டுப்பாடு இனி அதிகரிக்கும்.

மேலும்…

தொழில்துறை வளர்ச்சிக்கு மேலும் சலுகைகள்!

டெல்லி: இந்தியப் பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை சகஜ நிலையில் வைத்திருக்கவும் தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும் இரண்டாவது கட்டமாக மேலும் நிதிச் சலுகைகள் மற்றும் வட்டிக் குறைப்புகளை அறிவிக்க உள்ளது மத்திய அரசு.

மேலும்…

பாக்.கில் 30 தீவிரவாத குழுக்கள்: அந்தோணி

டெல்லி: பாகிஸ்தானில் இன்னும் 30க்கும் மேற்பட்ட தீவிரவாத குழுக்கள் சுதந்திரமாக இயங்கி வருகின்றன என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மும்பைத் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானின் நிலையில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை. அது அப்படியேதான் இருக்கிறது.

மேலும்…

ஜம்மு காஷ்மீரில் மோதல்: 2 ராணுவத்தினர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இரண்டாவது நாளாக பயங்கரவாதிகளுடன் இன்று நீடித்த சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பூஞ்ச் மாவட்டம் மெந்தர் வனப்பகுதியில் உள்ள பாடிதார் என்ற இடைத்தில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நேற்று மாலை சண்டை தொடங்கியது.

இன்று காலை வரை நீடித்த இந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ராணுவத் தரப்பில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

பயங்கர ஆயுதங்களுடன், மறைவிடத்தில் இருந்தபடி 6 பயங்கரவாதிகள் இந்த மோதலில் இறங்கியதாக , ஜம்முவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அஸ்ஸாமில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு- 5 பேர் பலி

குவஹாத்தி: புத்தாண்டின் முதல் நாளான நேற்று மாலை அஸ்ஸாமில் 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 5 பேர் பலியானார்கள். 30 பேர் காயமடைந்தனர்.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் செல்லவிருந்த பாதையில் நடந்த இந்த குண்டுவெடிப்பால் அங்கு பதட்டம் நிலவுகிறது.

மேலும்…

ராஜீவ் கொலையின் மர்மங்களை தெரிந்து கொண்ட சோனியா-குமுதம்


முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலை வழக்கைப் பற்றி அறிந்து வைத்திருப்பவர்களுக்கு இந்தப் பெயர் நன்கு பரிச்சயம். ஏனெனில், ஷ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, சம்பவத்திற்குக் காரணமான முக்கியக் குற்றவாளிகள் சுமார் இருபத்தொரு நாட்கள் பெங்களூருவில் பதுங்கியிருந்தது ரங்கநாத்தின் வீட்டில்தான். ராஜீவ் கொலை வழக்கில் 26-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட ரங்கநாத், தூக்குத் தண்டனைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்.

மேலும்…

பாக். செல்ல இலங்கை அணி முடிவு-இந்தியா அதிருப்தி

பாகிஸ்தானுக்கு செல்ல இலங்கை அணி முடிவு செய்திருப்பது, இந்தியாவை அதிருப்தியிலும், கோபத்திலும் ஆழ்த்தியிருக்கிறது.

மும்பைத் தாக்குதலின் எதிரொலியாக, பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை மத்திய அரசு ரத்து செய்தது.

மேலும்…

சென்னையில் மேலும் ஒரு விடுதலைப் புலி கைது

சென்னையில் மேலும் ஒரு விடுதலைப் புலியை கியூ பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் கும்மிடிப்பூண்டியில் உள்ள அகதிகள் முகாமில் ஒரு விடுதலைப் புலி இயக்க போராளியை போலீஸார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் சென்னையில் விடுதலைப் புலிகளின் ஏஜென்ட் கைது செய்யப்பட்டார்.

மேலும்…

கிளிநொச்சி சமரில் படையினரின் மேலதிக இழப்புக்களை நிரூபித்த புலிகள்:- “றோ” அமைப்பின் முன்னாள் செயலாளர் பி.இராமன்

கிளிநொச்சி சமர்க்களம் தொடர்பாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ள தகவல்களை விட புலிகள் தெரிவித்திருக்கும் தகவல்கள் உண்மையாக இருப்பதாகத் தெரிகிறது என்று இந்திய றோவின் முன்னாள் செயலாளர் பி. இராமன் கூறியுள்ளார்.

மேலும்…