‘இந்தியா செய்திகள்’

சத்யம் கம்ப்யூட்டர்சில் நடந்த ரூ.8,000 கோடி ‘மெகா’ மோசடி : தலைவர் ராஜினாமா

புதுடில்லி : முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனமான சத்யம் கம்ப்யூட்டர்சில், “மெகா மோசடி’ நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. கம்பெனியை பெரும் நெருக்கடியில் தள்ளிய அதன் மானேஜிங் டைரக்டர் ராமலிங்க ராஜூ ராஜினாமா செய்திருக்கிறார். இதன் எதிரொலியாக, பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டது மட்டுமல்லாமல், 8,000 கோடி ரூபாய் மோசடி நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும்…

பெட்ரோல், டீசல், காஸ் விலை குறைப்பு எப்போது? : மத்திய அமைச்சர் முரளி தியோரா அறிவிப்பு (08.01.2009) செய்திகள்.

புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் குறைக்கப்படலாம். காஸ் சிலிண்டர் விலையும் 25 முதல் 30 ரூபாய் வரை குறைக்கப்படலாம் என, மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா கூறியுள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்த போது, பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்த்தப்பட்டது. அதன்பின், கச்சா எண்ணெய் விலை குறைய ஆரம்பித்த போது, கடந்த டிசம்பரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாயும் குறைக்கப் பட்டது.

மேலும்…

சத்யம் அதிபர் ராமலிங்க ராஜு ராஜினாமா-முறைகேடுகளை ஒப்புக் கொண்டார்

ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனரும் அதன் தலைவருமான ராமலிங்க ராஜு இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

சத்யம் நி்ர்வாகப் பதவியிலிருந்து விலகுவதாக அதன் இயக்குனர் குழுவுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதையடுத்து ராம் மைனாம்பதி சத்யம் நிறுவனத்தின் இடைக்கால செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும்…

வி.ஐ.பி.,க்களுக்கு துப்பாக்கி சப்ளை பீகார் பெண் உட்பட இருவர் கைது*மூன்று துப்பாக்கிகள்,70 தோட்டாக்கள் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி வி.ஐ.பி. ,க் களுக்கு துப்பாக்கி சப்ளை செய்த பீகார் பெண் உட்பட இருவர் கைது செய்யப் பட்டனர். அவர்களிடமிருந்து மூன்று துப்பாக்கிகள், 70 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தூத்துக்குடியில் கடந்த டிச., 28ம் தேதி ஐந்து நவீன கைத்துப்பாக்கிகள், 33 தோட்டாக்களை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை விற்ற சரவணக்குமார்(32), மாயாண்டி(33), பழனிக்குமார்(35), மணிமாறனை(45) கைது செய்தனர்.

மேலும்…

மீனவர்களுக்கு மொபைல்!மாநில அரசுகள் வழங்க வேண்டும் *முதல்வர்கள் மாநாட்டில் யோசனை

“கடல்வழி தாக்குதல் சம்பவங்கள் குறித்த உளவுத் தகவல்களை பெறுவதற்கு மீனவர்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். இதற்காக, மீனவர்களுக்கு அதிக அளவில் நவீன மொபைல் போன்களை மாநில அரசுகள் அளிக்க முன்வர வேண்டும். அதன் மூலம் கடல் மார்க்கமாக பயங்கரவாதிகள் மேற்கொள்ள நினைக்கும் தாக்குதல்களை முறியடிக்க ஏதுவாக இருக்கும்’ என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

பயங்கரவாதம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு குறித்து அனைத்து மாநில முதல்வர்கள் பங்கேற்ற தேசிய மாநாடு டில்லியில் நேற்று நடைபெற்றது.

மேலும்…

தீவிரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான்: பிரதமர்

டெல்லி: மும்பையில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகளின் தொடர்பு நிச்சயம் உள்ளது. அவர்களின் உதவி இல்லாமல் தீவிரவாதிகளால் இந்த செயலை செய்திருக்க முடியாது. தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான மாநில முதலமைச்சர்கள் மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார்.

மேலும்…

கஸாப்புக்கு 19ம் தேதி வரை போலீஸ் காவல்

மும்பை: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் சிக்கி கைதான தீவிரவாதி அஜ்மல் கஸாப்புக்கு ஜனவரி 19ம் தேதி வரை போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.

காமா மருத்துவமனையில் நடத்திய துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கில் கஸாப்பிடம் விசாரணை நடத்த ஆசாத் மைதான் காவல் நிலைய போலீஸார் முடிவு செய்தனர். இதையடுத்து மும்பையில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இதுதொடர்பான மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும்…

ஸ்டிரைக் தொடர்ந்தால் லாரி பெர்மிட் ரத்து: அரசு

புதுடெல்லி : லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் லாரி பெர்மிட் ரத்து உள்ளிட்ட சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் மத்திய போக்குவரத்துத் துறை செயலாளர் பிரம்மதத் கூறியதாவது:

மேலும்…

பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளித்தது இந்தியா

டெல்லி: மும்பைத் தீவிரவாத தாக்குதல் தொடர்பான அனைத்து முக்கிய ஆதாரங்களையம் பாகிஸ்தானிடம் இந்தியா ஒப்படைத்து விட்டதாக வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜி, மும்பைத் தாக்குதலில் பாகிஸ்தான் தொடர்புகள் குறித்த அனைத்து முக்கிய ஆதாரங்களையும் பாகிஸ்தானிடம் ஒப்படைத்து விட்டோம்.

மேலும்…

மலேசியாவை கண்டித்து இ.முன்னணி போராட்டம்

சென்னை: மலேசியாவில் இந்துக்கள் கொடுமைபடுத்தப்படுவதை கண்டித்து சென்னையில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மாநாடு நடைபெறும் போது இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.

மேலும்…